அடையாளத்தின் சத்தம் THE VOICE OF THE SIGN 64-03-13 பியூமாண்ட், டெக்ஸாஸ் அமெரிக்கா வில்லியம் மாரியன் பிரான்ஹாம் அடையாளத்தின் சத்தம் THE VOICE OF THE SIGN 64-03-13 நகராட்சி அரங்கம் பியூமாண்ட், டெக்ஸாஸ் அமெரிக்கா கர்த்தருடைய சமூகத்தில் ஒரு சில நிமிடங்கள் அப்படியே நின்றவண்ணமாக தரித்திருப்போமாக. அவருடைய வார்த்தையை யாத்திராகமம் 4-ம் அதிகாரத்திலிருந்து நாம் வாசிப்போமாக. அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று. அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தின் சத்தத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவி கொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தின் சத்தத்தைக் கண்டு நம்புவார்கள். இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார். 2. நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. இப்பொழுது இந்த மாலைவேளையில் உங்களிடத்திலிருக்கிற ஒரு வேண்டுகோளை கர்த்தரிடத்திற்கு தெரியப்படுத்த வேண்டுமென்று விரும்பினால், வெறுமனே உங்களுடைய கரங்களை உயர்த்தி, "கர்த்தாவே, என்னை இப்பொழுதே நினைவு கூரும். நான் குறைவுள்ளவ னாயிருக்கிறேன்" என்று கூறுங்கள். 3. எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அந்த மண்ணை நோக்கியவாறே நாங்கள் எங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், நீர் வரத் தாமதிக்குமே யேனால் நாங்கள் மீண்டும் அந்த மண்ணிற்கே திரும்புவோம் என்பதை உணர்ந்தவர்களாய் இந்த மாலை வேளையில் மீண்டுமாய் உம்மை நாங்கள் அணுகிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கிறிஸ்துவில் உள்ள ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையினால் தேவனுக்குள்ளிருக்கிற எல்லோரையும் கிறிஸ்து அவரோடே கொண்டு வருவார். இந்த மகிமையான வாக்குத்தத்தத்திற்காக நாங்கள்-நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனே தங்களுடைய கரங்களை உயர்த்தி யிருக்கின்ற ஒவ்வொருவரையும், கர்த்தாவே என்னையும்கூட நீர் நினைவுகூர வேண்டும் என்றே நான் ஜெபிக்கின்றேன். 4. இன்றிரவு இந்த விசுவாசத்தின் முடிவின் வேளையில், எங்கள் ஒவ்வொருவருக்கு கர்த்தராகிய இயேசுவானவர் அவ்வளவு மெய்யானவராயிருக்கும்படியாகவும், இன்றிரவிற்குப் பிறகு எங்கள் மத்தியில் ஒருவரும் பலவீனமான நபராய் இல்லாதிருக்கும்படியாகவும், இன்றிரவு நீர் ஜனங்களுக்கு அப்படிப்பட்ட விசுவாசத்தை தந்தருள வேண்டுமென்றே நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பாவியும் கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தில் இருக்கிறான் என்பதை அவன் உணர்ந்து, பின்னர் தங்களுடைய இருதயத்தை உம்மண்டை ஒப்புவித்து, ஆவியினால் நிரப்பப்படுவானாக. இந்த கடைசியான பொல்லாத மணி நேரங்கள் ஒரு பெரிய நிழலைப் போல பூமியின்மீது ஊர்ந்து வருவதை நாங்கள் காண்கிறோம். 5. தேவனே, இன்றிரவு தெய்வீக வழிநடத்துதலுக்காகவும், பேசுவதற்காகவும், கேட்பதற்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்த கூட்டத்தை பொறுப்பேற்றுக் கொண்டு எங்களுக்கு தேவையாயிருக்கிற ஜீவ அப்பத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் பிட்டுத் தருவாராக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 6. தேவனில் விசுவாசமுடையவர்களாயிருக்கும் உண்மையை ஜனங்கள் காணும்படி நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறதை நாம் இன்றிரவு நிறைவேற்ற முடியும் என்றே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். 7. இப்பொழுது, நாளை பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு ஜெப அட்டைகளோடுள்ள யாவருக்கும் ஜெபிக்கப் போவதா யிருக்கிறோம். ஆகையால் ஜெப அட்டைகளில்லாமல் யாருமே விடப்படவில்லை என்ற நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம். ஒவ்வொரு இரவுமே நாங்கள் சில ஜெப அட்டைகளைக் கொடுக்கிறோம். நாளைய தினமும் அவன் மீண்டும் ஜெப அட்டைகளைக் கொடுப்பான். கூட்டம் துவங்குவதற்கு முன்னர் ஏறக்குறைய நூற்று முப்பது என்ற எண்ணிலிருந்து அல்லது அதைப் போல ஒரு எண்ணிலிருந்து கொடுப்பான் என்று நான் கருதுகிறேன். ஜெபிக்கப்பட வேண்டும் என்று இருக்கிறவர்கள் யாவரும், உங்களுடைய அன்பான மற்றவர்களும் வந்து ஒரு ஜெப அட்டையை பெற்றுக்கொள்ளட்டும். நிச்சயமாகவே ஒரு ஜெப அட்டையை பெற்றுக் கொள்ள அவர்கள் வரவேற்கப் படுவார்கள். நாங்கள்...செய்யப்போகிற... 8. நான் ஜனங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். அதாவது அவர்களுக்காக அவர்கள் மீது கரங்களை வைத்து ஜெபிக்கப் போகிறேன். இப்பொழுது உங்களுடைய விசுவாசம் அவரை உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ள கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தில் உயர முடியவில்லையென்றால், அப்பொழுது நாங்கள் உங்கள் மீது கரங்களை வைத்து ஜெபித்தால் அது உதவியாயிருக்கும் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் விரும்பும் எந்த காரியத்தையும் செய்யும்படிக்கே நாங்கள் சந்தேகத்திற்கிடமின்றி இங்கே இருக்கிறோம். 9. நான் அதை நீண்ட நேரமாக, காலதாமதமாகும்வரை தள்ளிப் போட காரணமென்னவெனில், என்னால் முடிந்தளவு ஒவ்வொன்றையும் கண்டு, அதன் நோக்கத்தை நிறைவேற்றும் படி அவைகளின் பேரில் தேவனிடத்தில் தொடர்பு கொள்ளவேயாகும். நாம் அதிகமான பேர்களை உடையவர் களாயில்லை. அங்கே...கட்டிடமும் பெரியதாயில்லை. எனவே நாம் அதிகமான ஜனங்களை உடையவர்களாயில்லை. ஆகையால் நாம் நாளை பிற்பகல், இங்கே நம்மிடத்தில் உள்ள யாவருக்காகவும் ஜெபிக்கும்படி பொறுப்பேற்று நடத்தமுடியும். வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்காகவே, அந்த நோக்கத்திற் காகவே அதை பிற்பகலில் வைக்கிறோம். 10. நாம் பயணித்துக்கொண்டிருக்கிற இந்த பயணத்தில் ஒரு மேலான வாழ்க்கையை உங்களுக்காக உருவாக்கும்படி எங்களால் முடிந்த ஏதாவது காரியத்தைச் செய்யவும், பாரத்தை இலக்குவாக்கவுமே நாங்கள் இங்கிருக்கிறோம். 11. ஆகையால் எந்த நேரத்திலும், எவரேனும் கர்த்தராகிய இயேசுவண்டை வர வேண்டும் என்று அவர்கள் உணருகையில், ஆராதனையின் எந்த பாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பொருட்படுத்தாமல், உடனடியாக அப்பொழுதே நீங்கள் வரலாம். பீட அழைப்பு விடப்படும் வரையில் காத்திருக்க வேண்டாம். அழைப்பு விடுக்கப்படும் வரையில் காத்திருக்க வேண்டாம். நீங்கள் உடனடியாக அப்பொழுதே வந்து, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, உடனே மேலே வந்து அப்பொழுதே அவரை அறிக்கை பண்ணுங்கள். ஏனென்றால் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் ஆத்துமாக்கள் பிறப்பதைக் காணுவதே நாம் இங்கிருப்பதின் நம்முடைய முக்கிய நோக்கமாயிருக்கிறது. 12. இப்பொழுது நாளை ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே சபைகளில் ஞாயிறு வேதபாட பள்ளி இருக்கும். அந்த காரணத்தினால்தான் நாம் எந்த ஆராதனைக்குமே குறுக்கீடு செய்யாதபடிக்கு நாம் நம்முடைய ஆராதனைகளை பிற்பகலில் வைத்திருக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்குமே அவன் செல்லக்கூடிய ஒரு-ஒரு தாய் சபை இருக்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் எங்காவது விசுவாசிகளை சந்திக்கத்தான் வேண்டும். நீங்கள் எங்கு சந்திக்கிறீர்களோ அதுவே சபையாகும். 13. இப்பொழுது, நான் இங்கே வசித்திருந்தால் நான் இங்குள்ள இந்த சபைகளில் ஒன்றை சேர்ந்தவனாயிருப்பேன். இந்த போதகர்கள் இங்கே எல்லா ஜனங்களுக்கும் காணப்படும் படியாக மேடையில் அமர்ந்து கொண்டு, இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்கள் இந்த விதமான ஊழியத்திலும், தெய்வீக சுகமளித்தளித்ததிலும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலும் விசுவாசங் கொள்கிறார்கள். அவர்கள் இவைகளுக்கு சாட்சி கொடுக்கும் படியாகவே இங்கிருக்கிறார்கள். என்னை இங்கு வரும்படியாக அழைத்திருந்தவர்கள் அவர்களேயாகும். எனவே அவர்களுடைய சபையோருக்கு உதவியாயிருக்கும்படியாகவே கர்த்தர் எனக்கு இந்த ஊழியத்தை அளித்திருக்கலாம். 14. இப்பொழுது தேவன் செய்கிற ஒவ்வொரு காரியத்திலிருந்தும் எல்லா ஆவிக்குரிய பயன்களையும் முடிந்தளவு பெற்று கொள்ளும்படியாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவரே ஒரு உண்மையான போதகராவார். அதாவது அவர் தேவனுக்காக தன்னுடைய சபை செயலாற்றும்படி உதவி செய்ய தன்னால் முடிந்தளவு முயற்சித்துக் கொண்டிருப்பார். அதைப் போன்ற ஒரு போதருக்கான வியந்து பாராட்டுதலில் நான் நிச்சயமாகவே என்னுடைய மரியாதையை செலுத்துகிறேன். 15. இந்த மனிதர்கள் அதை கடினமாகவுங்கூட செய்ய வேண்டியதாயிருந்தது. அது உண்மையாயிருக்கும் என்று உங்களால் விசுவாசிக்க முடியும். அவர்கள் அதை கடினமாக செய்ய வேண்டியதாயிருந்தது. அத்தகைய மகத்தான தேவனுடைய மனிதர்களுக்காக நான் நிச்சயமாக நன்றியுள்ளவனா யிருக்கிறேன். அவர்கள் தங்களுடைய திடநம்பிக்கைகளிலும், விசுவாசத்தின் பேரிலான தங்களுடைய கடமையின் பாதையையும், தங்களுடைய ஸ்தானத்தையும் ஏற்றுக்கொள்ள ஆர்வங்கொண்டிருக்கின்றனர். தேவன் அவர்களை என்றென் றைக்குமாய் ஆசீர்வதிப்பாராக. 16. அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வார்கள் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் இங்கு ஒரு அந்நியராயிருந்தால், இந்த சகோதரர்கள் தங்களுடைய சபைகளை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் கண்டறியுங்கள். நாளை அவர்களண்டை விஜயம் செய்யுங்கள். அவர்கள் சிறப்பு ஆராதனைகளை வைத்திருப்பார்கள். பல்வேறுபட்ட சபைகளில் பேசப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற ஊழியக்காரர்களும் இங்கிருக்கிறார்கள். எனவே நாளை அவர்களிடத்தில் இருங்கள். 17. அதன் பின்னர் நாளை பிற்பகல், நீங்கள் முடிவான ஆராதனைக்கு வருவீர்களேயானால், நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்ள நிச்சயமாகவே மகிழ்ச்சியடைவோம். இது எல்லா சபைக்களுக்காகவும், எல்லா ஸ்தாபனங்களுக்காகவும், ஒவ்வொரு வருக்கானதுமாய் உள்ளது. ஒவ்வொருவரும் வரவேற்கப் படுகிறீர்கள். மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தேகொஸ்துக்கள், கிறிஸ்துவின் சபை, தேவனுடைய சபை, கத்தோலிக்கம், பழங்கொள்கை மாறாத யூதர், நாத்திகர் என நீங்கள் யாராயிருந்தாலும் வரவேற்கப் படுகிறீர்கள். நாங்கள்... நீங்கள் அழைக்கப் படுகின்றீர்கள். நீங்களோ, "நாத்திகரா?" எனலாம். ஆம் ஐயா. 18. ஒரு நாத்திகன் கூட்டத்தில் வந்து அமர்ந்து, நாத்திகனைப் போல தன்னை நடத்திக் கொண்டாலும், அவன் மற்ற எவரையும் போலவே வரவேற்கப்படுவான். சரி, ஏதோ காரியம், அதாவது கர்த்தரண்டை வரவும், அவனுடைய பிழையை காணும்படி அவனுக்கு உதவி செய்யும் ஏதோ காரியம் செய்யப்படலாம். எனவே அந்த காரணத்திற்காகவே அவன் இங்கு இருக்கும்படியாக நாம் விரும்புகிறோம். ஏனென்றால் நாம்...நிச்சயமாகவே. 19. வர்த்தக புருஷர்களுடைய பத்திரிக்கையில் "காலத்தின் திரைக்கு அப்பால் நோக்கிப் பார்க்கிறீர்களா?" என்று வெளியிடப்பட்டுள்ள அந்த சிறிய தரிசனத்தை எத்தனைபேர் வாசித்தீர்கள்? அதில் இன்னும் ஒரு சில பிரதிகளே உள்ளன என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நண்பனே, அது உண்மையாயிருக்கிறது. நீங்கள் அதை தவற விட்டு விடும்படியான வாய்ப்பினை அடையக்கூடாது. நான்-நான் அதுமுதற்கொண்டு ஒரு வித்தியாசமான நபராக இருந்து வருகிறேன். அது உண்மையாயிருக்கிறது என்பதை நான் அறிவேன். ஏனென்றால் உங்களில் எவருமே விசுவாசிகளுக்காக தேவன் வைத்திருக்கிற அந்த மகத்தான பரலோகத்தை தவறவிட மாட்டீர்கள் என்றே நான்-நான்-நான் நம்புகிறேன். நீங்கள் தவற விடுவீர்களேயானால், நீங்கள் இங்கே பூமியின் மேல் என்ன செய்து முடித்திருக்கிறீர்கள்? காரணம், நீங்கள் இந்த உலகத்தை விட்டு எந்த நேரத்தில் செல்லப் போகிறீர்கள் என்பதை நீங்கள் அறியீர்கள். ஆனால் நீங்கள் நிச்சயமாக அதை விட்டு செல்லப் போகிறீர்கள் என்ற ஒரு காரியத்தை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் அது உண்மையானால், அப்பொழுது நாம் அதைக் குறித்து ஆராய முயற்சிக்காதபடி மிகவும் புத்தியற்றத்தனமாக இருக்கக்கூடாதே. நாம் வேறெந்தவிதமான ஒரு தருணத்தையும் எடுத்துக்கொள்ள இடமளிக்க முடியாது. பாருங்கள், அப்படியே தேவனுடைய வார்த்தையையும், அதில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் விசுவாசித்து நினைவு கூருங்கள். 20. ஒவ்வொரு மருத்துவமனை கட்டப்படுவதற்கும், குருட்டிற்கும், முடத்திற்கும், இந்த எல்லா காரியங்களுக்கும், இந்த வலிப்பு வாதத்திற்குட்பட்ட சிறு குழந்தைகளுக்கும், ஒவ்வொரு துக்கத்திற்கும், ஒவ்வொரு தொல்லைக்கும், ஒவ்வொரு மரணத் திற்கும், ஒவ்வொரு மாரடைப்பிற்கும், ஒவ்வொரு சுகவீனத் திற்கும் காரணம் என்னவென்பதை வெறுமனே நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? காரணமென்னவெனில் ஒரு நபர் வார்த்தையின் ஒரு சிறுபாகத்தை சற்று அவிசுவாசித்தார். அது ஏவாளாயிருந்தது. சாத்தான் அதை அவளுக்கு மேற்சாயமாக பூசினான். மேற்சாயமாக பூசினானேயல்லாமல் அதை அவளுக்கு மேற்கோளாக காட்டவில்லை. "நிச்சயமாகவே... கர்த்தர் மிகவும் நல்லவராக இருக்கிறார்" என்றான். 21. இன்றைக்கு நீங்கள் அதைக்குறித்து மிகவும் அதிகமாகவே கேள்விப்படுகிறீர்கள். தேவன் ஒரு நல்ல தேவனாகவே இருக்கிறார். அவர் ஒரு நல்ல தேவனாக இருக்கிறார். ஆனால் அவர் ஒரு பரிசுத்தத்தின் தேவனாயும், பாவத்தை கண்டு கொள்ளாமல் விடமுடியாத ஒரு தேவனாயுமிருக்கிறார். ஏனென்றால் அதற்கான அபாரதம் செலுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே அவருடைய அடிப்படை ஆதாரங்களின் பேரில் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஒரு கோபாக் கினையின் தேவனாய், ஒரு உக்கிர கோபாக்கினையின் தேவனாயிருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும். நீங்கள் ஒரு கோபாக்கினையின் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டும். வெறுமெனே நன்மையும் இரக்கமுமான ஒரு தேவனுக்கு முன்பாக அல்ல, இன்றிரவு அவர் உங்களுடைய இரட்சகராக இருக்கிறார். ஆனால் அந்நாளில் அவர் உங்களுடைய நியாயாதிபதியாயிருப்பார். 22. ஆகையால் நண்பனே, நீ ஒரு காரியத்தைச் செய்யாமல் விட்டுவிடாதபடி நிச்சயமுடையவனாயிரு. அது-அது...அது பலனளிக்காது. வெறுமனே ஒழுங்கற்ற விதமாய் அதனண்டைச் செல்லாதே. நிச்சயமுடையவனாயிரு, இரட்டிப்பான நிச்சயமுடையவனாயிரு. ஏனென்றால் உனக்கு மற்றொரு தருணம் கிடைக்கிறதில்லை. நீ இங்கே பூமியின் மேல் இருக்கும்போது, இதுவே உன்னுடைய தருணமாய் இருக்கிறது. ஐசுவரிய வானையும், லாசருவையும் நினைவில் கொள்ளுங்கள். 23. அவனுக்கும் இவனுக்கும் இடையே எந்த மனிதனும் எப்போதும் கடந்திராத அல்லது எப்போதும் கடக்க முடியாதபடியான ஒரு பெரும் பிளவு இருந்தது. புரிகின்றதா? நீங்கள்-நீங்கள் மரிக்கும்பொழுது, அதுவே இதற்கு தீர்வாகிறது. அந்த இடங்களிலிருந்து அவர்கள் உங்களுக்கு ஜெபிக்கிறார்கள் என்று ஜனங்கள் உரிமை கோருவதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் அதை ஒருபோதும் நம்பவேண்டாம். அது தேவனுடைய வார்த்தைக்கு முரணானதாயிருக்கிறது. புரிகின்றதா? "மரமானது எப்பக்கமாக சாய்கிறதோ, சாய்கிறவிதமாகவே, அந்த விதமாகவே அது விழுகிறது." இயேசுதாமே, "ஒரு பெரும் பிளவு இருந்தது என்றும், ஒரு மனிதன் மரித்து, நரகத்திற்கு சென்றுவிடும்போது, அவன் (ஒருபோதும்) பரலோகத்திற்கு வரவே முடியாது. எந்த மனிதனுமே அதை எப்போதுமே கடந்ததில்லையென்றும், ஒருபோதும் அதை கடக்கவே முடியாது" என்றும் கூறினார், என்னைப் பொறுத்தமட்டில் அதுவே இதற்கு தீர்வாகிறது. இயேசு அது இவ்வாறு இருந்தது என்று கூறிவிட்டபோது அதைக் குறித்தயாவும் அவ்வளவுதான். 24. ஆகையால் சற்று நினைவிருக்கட்டும். இப்பொழுது இது உங்களுடைய தருணமாயிருக்கிறது. இன்றிரவு இது உங்களுடைய கடைசி தருணமாயிருக்கலாம். 25. என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் பற்றிப் பிடித்துக் கொள்ள முடிகிறதா? உங்களால் அதை புரிந்துகொள்ள முடிந்தால் நலமாயிருக்குமே! நீங்கள் ஏதோ ஒரு மனிதனை நோக்கிப் பார்க்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு மனிதனை விசுவாசிக்க வேண்டும் என்ற விளைவை உண்டுபண்ணவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றும், அந்தவிதமாகவே பேசுகிறேன் என்று நீங்கள் கருத மாட்டீர்கள் என்றே நான் நம்புகிறேன். நண்பனே, நான் அதை செய்து கொண்டிருக்கவில்லை. நாம் யாருடைய பிரசன்னத்தில் இப்பொழுது இருக்கிறோம் என்பதை நீங்கள் விசுவாசிக்கும்படி செய்யவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த கடைசி நாட்களில் அவர் செய்வதாக அவர் வாக்குப்பண்ணின அதே காரியத்தையே உங்களுடைய சமூகத்தில் செய்துகொண்டு, தம்மையே அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவாகிய அதே தேவனே அந்நாளில் உங்களை நியாயந்தீர்ப்பார். 26. சகோதரன் பிரைஸ் (Price) அவர்கள் இக்காலை சிற்றுண்டி வேளையில் ஒரு மூலைக்கு வருவதைக் குறித்தும், அதன் பின்ன்னர் அந்த மூலையை திருப்ப வேண்டியதையுங் குறித்ததுமான ஒரு அருமையான விளக்கப்படத்தை அளித்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதைக் கேட்டு மகிழ்ந்தீர்களா? [சபையோர், "ஆமென்" என்கின்றனர்.] நிச்சயமாகவே மகிழ்ந்தீர்கள். அது மிகவும் நன்றாக, மிக நன்றாக தொகுத்தளிக்கப்பட்டது. 27. ஆகையால், இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், சில நேரங்களில் மூலையிலே, ஆனால் நாம் இந்த மூலைகளை திருப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்வோமாக. நான் ஒரு முறை அதன்பேரில் பிரசங்கித்து, அதை சந்திப்புகள் என்று அழைத்தேன். நாம் ஒரு சந்திப்பை அடையும்பொழுது, நாம் இந்த வழியாய் மற்றும் பல்வேறுபட்ட வழிகளை பலதடவை சுற்றிக் கொண்டு போக வேண்டும். 28. இப்பொழுது இன்றிரவு அடுத்த சில நிமிடங்களில், அடையாளத்தின் சத்தம் என்ற பொருளை நான் எடுக்க விரும்புகிறேன். இப்பொழுது இன்றிரவு நம்முடைய காட்சி யாத்திராகம புத்தகத்தில் திறக்கப்படுகிறது. யாத்திராகமம் என்றால் "வெளியே வருதல்; வெளியே கொண்டுவரப்படுதல்" என்றே பொருள்படுகிறது. இப்பொழுது உங்களால் முடிந்தளவு கூர்ந்து கவனிக்க முயற்சியுங்கள். 29. நீங்கள் ஒரு அருமையான கூட்டத்தராயிருக்கிறபடியால் நான் உங்களிடத்தில் சில சமயங்களில் பேச விரும்புகிறேன். ஆனால் எனக்கு போதிய குரல்வளம் இல்லை. அதன்பேரில் சற்று சிரமம் உள்ளது. அது என்னவாயிருக்கும் என்பதை நான் அறிவேன். நான் அடுத்த கூட்டத்தை துவக்குவதற்கு முன்பு இப்பொழுது சுமார் எட்டு அல்லது பத்து நாட்கள் நான் சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். பாருங்கள், இங்குள்ள இந்த ஒரு கூட்டம் மட்டுமல்ல, அது நாளுக்குநாள், வாராவாராம், மாதாமாதம், வருடா வருடம் நடைபெறும் கூட்டமாக தொடர்ந்து இருக்கிறபடியால், பாருங்கள், உங்களால் எண்ணிப் பார்க்க முடியும். 30. எல்லா நேரங்களையும் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நான் முழு உலகத்தையும் ஏழுமுறை சுற்றி வந்தபோது, வருடா வருடம் அவர் கூறியிருக்கிற எந்த ஒரு காரியமும், எல்லா மொழிகளிலும், எப்போதுமே பரிபூரணமானதாயும், சரியான சத்தியமு மாயிருந்தேயன்றி, ஒருமுறைகூட தவறினதேயில்லை. புரிகின்றதா? எந்த மனிதனுமே எங்குமே ஒவ்வொரு முறையும் பரிபூரணமாயிருந்து வருகிறபடி, சரியாக துல்லியமாக கூறமுடியாது. ஒரு குறிப்பிட்ட காரியம் சம்பவிக்கும் என்று அவர் கூறிகிறபோது, அது சரியாக அந்தவிதமாகவே சம்பவிக்கிறது. அது சம்பவிக்கிறதற்கு அநேக வாரங்களுக்கு, மாதங்களுக்கு, வருடங்களுக்கு முன்னமேயுங்கூட அதை சொல்லுகிறார். அது எப்பொழுதுமே முற்றிலும் பரிபூரணமாயிருக்கிறது. ஒருமுறைகூட தவறுகிறதேயில்லை. அது ஒருபோதும் தவறிப்போகாது. ஏனென்றால் அது தேவனாயிருக்கிறது. இப்பொழுது நான் ஒரு மனிதனாயிருக்கிறபடியால் தவறிப்போக முடியும். என்னை ஒருபோதும் ஒரு உதாரணமாக நோக்கிப் பார்க்காதீர்கள். ஏனென்றால் நானும் வெறுமனே உங்களைப் போலவே கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. ஆனால் அதுவோ இயற்கைக்குமேம்பட்ட தேவனே தம்மை அடையாளங் காட்டிக் கொண்டிருக்கிறதாயிருக்கிறது. பாருங்கள். அவர் அதைச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர் அதைச் செய்வதாக வாக்களித்தார். 31. இயேசு வார்த்தையை நிறைவேற்றும்படியாய் சுகப் படுத்தினார். தேவனுடைய வார்த்தை நிறைவேற்றப்படும் என்ற காரணத்தினால் அவர் அந்த காரியங்களைச் செய்தார். 32. வார்த்தையை நிறைவேற்றும்படியாகவே அவர் இன்றைக்கும் அதை செய்து கொண்டிருக்கிறார். நான் அதை உங்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு இரவும் மேற்கோள் காட்டியிருக்கிறேன். 33. இப்பொழுது அவருடைய சமூகம் அருகில் இருக்கும்போது, அது நிச்சயமாகவே உணர்ச்சியை கொண்டுவருகிறது. நான் இந்த காலையில் கூறினது போலவே, "உணர்ச்சியில்லாத எந்தக் காரியமும் மரித்ததாயிருக்கிறது," எந்த மார்க்கமும், அது கொஞ்சமாவது உணர்ச்சியை பெற்றுக் கொள்ளாத தாயிருந்தால், நீங்கள் அதை புதைத்துவிடுவதே மேலானது. அது மரித்து விட்டிருக்கிறது. இது உணர்ச்சியைக் கொண்டு வருகிறது. அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார். ஆனால் நாம் உயிர்ப்பிக்கப்படும்போது, நம்மை உயிர்ப்பித்தது எது என்பதை நினைவுகூருவோமாக. அதை செய்தது எது? அது இயேசு கிறிஸ்து நம் மத்தியில் தாம் ஜீவனுள்ளவராக இருக்கிறார் என்று தம்மை காட்டிக் கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியின் பிரசன்னமாயிருக்கிறது. மாம்சப்பிரகாரமான ஒரு சரீரத்தில் அல்ல; அந்த மாம்சப்பிரகாரமான சரீரம் பரலோகத்திலிருந்து திரும்பி வருகிறபோது, காலம் செல்லாது. அதைக் குறித்த யாவும் அதுவேயாகும். இந்த காரியங்கள் சம்பவிக்கிறபொழுது நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். இப்பொழுது தேவன் இதற்கு முன்னும் யாத்திரைகளை உடையவராயிருந்திருக்கிறார். அங்கே... 34. ஒவ்வொரு காரியமும் தேவனோடு மூன்றில் பயணம் செய்கிறது. தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார். கிறிஸ்துவின் முதலாம் வருகை அவருடைய மணவாட்டியை மீட்பதாகும். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அவருடைய மணவாட்டியை ஏற்றுக்கொள்வதாகும். கிறிஸ்துவின் மூன்றாம் வருகை அவருடைய மணவாட்டியோடு ஆயிரவருட அரசாட்சியில் ஆளுகை செய்வதாகும். ஒவ்வொரு காரியமும் மூன்றில் செயல்படுகிறது. 35. இப்பொழுது மூன்று யாத்திரைகளாக இருந்து வந்ததாயும் இருக்கப் போவதாயும் உள்ளது. அவைகளில் ஒன்று பூமியின் மேல் ஒரு சவாரி செய்யும் ஒரு யாத்திரையாக தேவன் அவர்களை பேழைக்குள் கொண்டு வந்ததாகும். அடுத்தமுறை தேவன் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். அதற்கு அடுத்தமுறை தேவன் அவர்களை மேலே கொண்டு செல்கிறார். உள்ளே, வெளியே, மேலே! அடுத்த யாத்திரை மேலே செல்வதாயிருக்கிறது. இப்பொழுது மேலே செல்லும் நேரத்தையே நாம் எதிர்நோக்கிக் கொண்டி ருக்கிறோம். 36. அதைப் போலவே, ஒரு ஜீவனும் அதே காரியத்தையே செய்கிறது. நாம் ஜீவனண்டைக்கு உள்ளே வருகிறோம். நாம் ஜீவனை விட்டு வெளியே சென்று, ஜீவனண்டைக்கு மேலே எழும்புகிறோம். சரியாக அதே காரியம். ஆகையால் நாம்... 37. நம்முடைய காட்சி இன்றிரவு யாத்திரையில் திறக்கிறது. தேவன் தம்முடைய தேசத்தைக் கொண்டு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். 38. இஸ்ரவேல் ஒரு தேசமாயிருக்கிறது. தேவன் இஸ்ரவே லரிடத்தில் ஒரு தனிப்பட்ட நபராக தொடர்பு கொள்கிறதில்லை. இஸ்ரவேல் ஒரு தேசமாக இருக்கிறது. எனவே அவர் எப்பொழுதும் அவர்களோடு ஒரு தேசமாகவே தொடர்பு கொண்டார். கடைசி நாட்களில் சபையானது சென்றுவிட்ட பிறகு, அதன் பிறகு தேவன் ஒரு தேசமாக இஸ்ரவேலை இரட்சிப்பார். அது இப்பொழுது தாய் நாட்டில் அதற்காக ஆயத்தமாயிருக்கிறது. அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள், வேதமோ, "ஒரு தேசம் ஒரே நாளில் பிறக்கும்" என்றுரைத்துள்ளது. தேவன் யூதர்களிடத்தில் தனிப்பட்ட நபர்களாக தொடர்பு கொள்ளுவதில்லை. அவர் இஸ்ரவேலிடத்தில், அவர்களோடு எப்பொழுதுமே ஒரு தேசமாகவே தொடர்பு கொள்ளுகிறார், ஏனென்றால் அது அவருடைய தேசமாயிருக்கிறது. 39. இங்கே ஒரு யாத்திரையில் ஒரு தேசத்திலிருந்து தம்முடைய தேசத்தை வெளியே கொண்டுவர, ஒரு நியாயத்தீர்ப்பிலிருந்து தம்முடைய ஜனங்களை வெளியே கொண்டு வருவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். 40. உலகத்தை மூழ்கடித்த அதே தண்ணீர்களே நோவாவை காப்பாற்றினது. புரிகின்றதா? இன்றைக்கு ஜனங்கள் புறக்கணித்துக் கொண்டிருக்கிற அதே பரிசுத்த ஆவியானவரே அவரை ஏற்றுக்கொள்ளும் சபையை மேலே கொண்டு சென்று, அவரை விசுவாசிக்காதவர்கள் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவார். 41. இயேசு கூறினார், அவர்கள் அவரை, "பெயல்செபூல்" என்று அழைத்தவர். வேறு வார்தைகளில் கூறினால், "அவர் ஒரு குறிசொல்பவராயிருந்தார்" என்றே அழைத்தனர். அவர்கள்... அதற்கு அவர், "நான் அதற்காக உங்களை மன்னிப்பேன்", மனுஷகுமாரன், பலியானது அப்பொழுது செலுத்தப் படாமலிருந்தது. "ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து அதே காரியத்தைச் செய்யும்போது, அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை கூறினாலும் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது." 42. அது புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. அதன் பின்னரே நியாயத்தீர்ப்பு தாக்குகிறது. பாருங்கள், தொல்லையாயிருப்பது என்னவெனில் நாம்... 43. சமுத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு-ஒரு வாலிப ஆங்கிலப் புலவனையும், சமுத்திரத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு வயோதிப மாலுமியையுங் குறித்து ஒரு சமயம் நான் வாசித்த ஒரு கதை என்னுடைய சிந்தையில் நினைவிற்கு வருகிறது. அந்தப் புலவன் சமுத்திரத்தைக் குறித்து அதிகமாக எழுதியிருந்தான். ஆனால் அவன் ஒருபோதும் அதைப் பார்த்திராதிருந்தபடியால் அவன் சமுத்திரத்தை நோக்கியவாறு தன்னுடைய பாதையில் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வயோதிப மாலுமி தன்னுடைய வாயில் புகைச்சுருட்டின் அடிக்கட்டையோடு, "என் உயரிய மனிதரே, நீர் எங்கே போகிறீர்?" என்று கேட்டான். 44. அதற்கு அவனோ, "நான் சமுத்திரத்தண்டைக்கு சென்று கொண்டிருக்கிறேன்" என்றான். மேலும் அவன், "அதைக் குறித்து அதிகம் எழுதியிருக்கிறேன், அதைக் குறித்து மற்றவர்கள் கூறினதையும் அறிந்திருக்கிறேன். ஆனால நானோ ஒருபோதும் அதைக் கண்டதேயில்லை" என்று கூறி, "ஓ, நான் சமுத்திரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை அறியும்போது மிகவும் உணர்வார்வமடைந்திருக்கிறேன்" என்றான். மேலும் அவன், "ஓ, அதனுடைய உப்பு நீரை வாசனை பார்க்கவும், அதனுடைய பேரளவைக் காணவும், அதன் மேல் வெள்ளை நுரையுள்ள அலைகள் கொந்தளிப்பதையும், நீலவானம் தன்னை பிரதிபலிப்பதையும், அதன் மேல் நீளமான சிறகுகளும், தோலடியும் உடைய கடற்பறவைகள் பறப்பதை காணவும், ஓ, அதை காணுவதைக் குறித்த சிந்தனையிலே நான் உணர்வார்வமடைந்துள்ளேன்" என்றான். 45. அப்பொழுது அந்த வயோதிப மாலுமியோ, "நான் அதில் அறுபது வருடங்களுக்கு முன்னர் பிறந்தேன், ஆயினும் நான் அதைக் குறித்த எந்த அழகையும் காண்கிறதில்லை" என்றான். பாருங்கள், அவன் அதை அதிகமாக, அது அவனுக்கு சாதாரணமாய் ஆகும் அளவிற்கு அவன் அதைக் குறித்து மிகவும் அதிகமாகவே பார்த்துவிட்டிருந்தான். 46. இப்பொழுது இன்றைக்கு பெந்தெகொஸ்தே சபையோடு உள்ள காரியமும் அதுவேதான். தேவன் அவர்களுக்கு சாதாரணமாகுமளவிற்கு அது மிக அதிகமாகவே தேவனைக் குறித்து கண்டுள்ளது. அதைச் செய்ய ஒருபோதும் அனுமதிக்காதே! 47. இங்கு அண்மையில் கென்டக்கியில் உள்ள லூயிவில்லில், நான் வந்த இந்தியானா, ஜெபர்ஸன்வில்லிருந்து அதற்கு குறுக்கே ஒரு ஆறு உள்ளது. ஒரு பெண்மணி ஒரு மலிவு விலைக்கடைக்குள் நடந்து சென்று கொண்டிருந்தாள், அவள்...ஒரு சிறு பையனை தன்னுடைய கரங்களில் வைத்திருந்தாள். அவள் விற்பனை பொருளக பிரிவுகளுக்கு சென்று கொண்டு, மட்டு மீறிய வெறுப்பு உணர்வு கொண்ட இசிப்பு நோய் கொண்டவளாகிக் கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஒன்றை எடுத்து அதை அந்த சிறுபையனிடம் கொடுப்பாள். அவனோ வெறுமனே உட்கார்ந்து கண்ணிமைக்காமல் முறைப்போடு விழித்துப் பார்ப்பான். உடனே அவள் மற்றொரு பொருளக பிரிவுக்குச் சென்று, ஏதோ ஒன்றை எடுத்து அதை அந்த சிறுபையனிடம் கொடுப்பாள், அவனும் அப்படியே முறைப்போடு பார்த்து விழிப்பான். பின்னர் சற்று கழித்து அவள் ஒரு மணியை எடுத்து அதை ஆட்டி கலகலவென ஒலியெழுப்பத் துவங்கினாள். அப்பொழுதும் அந்தப் பையன் அப்படியே கண்ணிமைக்காமல் முறைத்துப் பார்த்து விழித்தான். அவள் தன்னுடைய கரங்களை மேலே உயர்த்திக் கொண்டு கூக்குரலிட்டு அழத்துவங்கினாள். அந்த மலிவு விலைக்கடையில் உள்ள ஜனங்கள் அவளை கவனித்துக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் கோளாறு என்ன என்பதை கண்டறியும்படி அவளிடம் சென்றனர். 48. அப்பொழுது அவன், "நான்...என்னுடைய சிறுபையன் இவன்" என்றும், "இவனுக்கு மூன்று வயது மட்டுமே ஆகிறது" என்றும் கூறினாள். மேலும் அவள், "திடீரென்று சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அவன் அப்படியே உட்கார்ந்து ஒரு வெற்றிடத்தையே முறைத்துப் பார்த்தான்" என்றாள். அதன் பின்னரே, "நான் அவனை மருத்துவரிடம் கூட்டிச் சென்றேன்" என்றும், அப்பொழுது மருத்துவர், "குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கான மருந்து சீட்டை எழுதிக்கொடுத்தார்" என்றும் கூறினாள். அதன் பின்னர், "மருத்துவர் என்னிடத்தில், இன்றைக்கு அவன் சற்று மேலாக இருப்பதாக அவர் எண்ணினதாக என்னிடம் கூறினார்" என்றாள். ஆனாலும், "அவன் கொஞ்சம்கூட மேலான நிலையில் இல்லையே" என்றாள். மேலும், "நான் ஒரு சிறுபையனை அவனுடைய வயதில் கவர்ந்திழுக்கக்கூடிய, கவனம் செலுத்தக் கூடிய ஒவ்வொரு பொருளையும் அவனுக்கு முன்பாக அசைத்து காண்பித்து விட்டேன். ஒரு சிறு பிள்ளையை அதனுடைய வயதில் கவரக்கூடிய ஒவ்வொரு பொருளையுமே நான் அவனுக்கு முன்பாக அசைத்துக் காண்பித்து விட்டேன். ஆனாலும் அவனோ வெறுமனே உட்கார்ந்து வெற்றிடத்தையே முறைத்துப் பார்க்கிறான்" என்று கூறினாள். மேலும் அவள், "அவன் சிறிதும் முன்னேற்ற மடையாமலிருக்கிறான்" என்றாள். 49. அது பெந்தெகொஸ்தே சபையைப் போன்ற ஏதோ காரியமாய் உள்ளது. தேவன் அவர்களுக்கு முன்பாக வேதத்திலுள்ள ஒவ்வொரு வரத்தையும் அசைத்துக் காண்பித்திருக்கிறார். ஆனால் அவர்களோ ஏதோ காரியம் தவறாயிருப்பதைப் போன்று அப்படியே உட்கார்ந்து வெற்றிடத்தையே முறைத்துப் பார்க்கின்றனர். நண்பர்களே இது காலதாமதமாவதற்கு முன்னர் நாம் விழித்தெழும் நேரமாயிருக்கிறது. தேவன் உங்களுடைய கவனத்தை கவர்ந்திழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாலொழிய அவர் அந்த வரங்களை அசைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவன் ஒரு தேசத்திலிருந்து ஒரு தேசத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தார். 50. அதைப்போல இப்பொழுதும் அவர் செய்து கொண்டிருக்கிறார். அவர் சபையில் இருந்து மணவாட்டியை கொண்டு வந்து ஸ்திரீயினுடைய வித்தாகிய மீதியானவர்களை விட்டுவிடப் போகிறார். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சபையிலிருந்து வெளியே கொண்டுவரப்படுவர். மாம்சப் பிரகாரமான சபையானது உபத்திரவத்தினூடாக செல்லும்படியாக இங்கேயே தரித்திருக்கும். அந்த தெரிந்து கொள்ளப் பட்டவர்கள், சில நேரங்களில் "தெரிந்தெடுக்கப் பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், மீதியானவர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். 51. அப்பொழுது அவர் அதை எப்படி செய்தார் என்பதை கவனிப்போமாக. ஏனென்றால் அவர் தம்முடைய வழியில் செய்யும் காரியங்களை ஒருபோதும் மாற்றுகிறதேயில்லை. தேவன் காரியங்களைச் செய்யும் ஒரு வழியை உடையவரா யிருக்கிறார். அந்தவிதமாகவே அவர் அதைச் செய்கிறார். அதுவே எப்பொழுதும் சரியான வழியாயிருக்கிறது. அவர் அதை எப்படி செய்தார் என்றும், அவர் அதை செய்த முறையையும் பாருங்கள். அப்பொழுதே நாம் இதைக் குறித்த ஒரு கணநேர காட்சியை புரிந்துகொள்ள முடியும். 52. இப்பொழுது நான் நிச்சயமாகவே முன் நடந்தவைகளை மாதிரிகளாக ஒப்பிட்டுப் பார்ப்பவனாயிருக்கிறேன். எனக்கு கல்வியறிவு கிடையாது. அவர் என்ன செய்தார் என்பதை காணும்படி நான் பின்னோக்கிப் பார்க்க வேண்டியதா யிருக்கிறது. நாம், "பழைய ஏற்பாடு வரப்போகிற காரியங்களின் ஒரு நிழலாய் இருந்தது" என்றே கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஆகையால் நான் இங்கு நோக்கிப் பார்த்து என்னுடைய கரத்தையே ஒருபோதும் காணாதிருந்தால், அப்பொழுது நான் என்னுடைய கரத்தின் நிழலை கண்டு எனக்கு ஐந்து விரல்கள் இருந்ததையும், என்னுடைய கரம் அங்கிருந்தபோது, எனக்கு ஐந்து விரல்கள் இருந்தன என்ற ஒரு நல்ல கருத்தையும் நான் பெற்றுக் கொள்வேன். ஆகையால் அவர்களுக்கு என்ன சம்பவித்தது என்பது தேவன் எப்படி காரியங்களை செய்கிறார் என்பதின் மாதிரிகளாய் இருந்தன. அந்தவிதமாகவே அவர் அதை இப்பொழுதும் செய்கிறார். 53. அந்த விதமாகவே அவர் அதை செய்கிறார். அவர் அதிலிருந்து ஒருபோதும் மாறுகிறதில்லை. ஒவ்வொரு முறையும், வேதம் முழுவதும் அவர் தம்முடைய வழியில் செய்யும் காரியங்களை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. அதே விதமாகவே தொடர்ந்து செய்கிறார். ஏனென்றால் அதைச் செய்யும் அவருடைய முதல் வழியே பரிபூரண வழியாயிருக்கிறது. ஏனென்றால் அவர் வேறு வழியை உடைய வராயிருக்கமுடியாது. காரணம் அவர் பரிபூரணமான வராயிருக்கிறார். அவர், அவருடைய எல்லா வழிகளுமே பரிபூரணமாயிருக்கின்றன. அவர் அதை எப்படிச் செய்தார் என்பதைக் கவனியுங்கள். 54. மோசே பொறுப்பேற்றிருந்த, அவன் கொண்டிருந்த இந்த பணியை ஏற்றுக்கொள்ள முன் நியமிக்கப்பட்டு அழைக்கப்பட்டான். தேவன்... 55. இப்பொழுது நீங்கள் இதை மன்னிப்பீர்களேயானால் நலமாயிருக்கும் என்று நான் கருதுகிறேன். நான் இதை கண்மூடித்தனமாக கூறுகிறதில்லை. நான் இந்த மேடையில் மாத்திரமே கூறுகிறேன். நான்-நான் ஒன்றையும் அறியேன், தேவனைத் தவிர வேறொன்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறதில்லை. இப்பொழுது அங்குதான் நம்முடைய பின்மாரி சகோதரர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்று நான் கருதுகிறேன். பாருங்கள், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கரங்களை வைத்து அவர்களை தீர்க்கதரிசிகளாக்குகின்றனர். இப்பொழுது அது வேதப் பிரகாரமானதல்ல. "தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே." நீங்கள் என்னவாயிருக்கிறீர்களோ, அவ்வாறே பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் என்னவாயி ருக்கிறீர்களோ அவ்வாறே நீங்கள் ஆதியிலும் இருந்தீர்கள். 56. கடந்த நாட்களில் இருந்த பரிசேயர்களை நோக்கிப் பாருங்கள். அவர்கள் கொஞ்சம் வெளிச்சத்தை உடையவர் களாயிருந்தனர். ஏனென்றால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் நியாயப் பிரமாணத்தினால் ஜீவித்தனர். ஆனாலும் அவர்களுடைய இருதயமோ அவ்வளவு கருப்பாயிருந்தது. 57. அங்கே ஒரு சிறுபெண், ஒரு வேசி, அவளுடைய முந்தின வாழ்க்கை இங்கே அவ்வளவு இருளானதாயிருந்தது. அவள் துர்கீர்த்தி கொண்டவளாயிருந்தாள். ஆனால் அவளுடைய இருதயத்தில் அவள் ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டிருந்தாள். 58. அப்பொழுது இயேசு, வார்த்தை, காட்சியில் வந்தபோது அந்த பரிசேயர்கள், "இந்த மனிதன் பெயல்செபூலாயிருக்கிறான்" என்றனர். அது என்ன செய்தது? அது அவர்கள் பெற்றிருந்த கொஞ்சம் வெளிச்சத்தையும் இருட்டாக்கிற்று. 59. இயேசு, "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டாயிருக்கிறபடியால் அவனுடைய கிரியைகளை நீங்களும் செய்கிறீர்கள்" என்றார். 60. ஆனால் இந்த அற்பமான, அசுத்தமான ஸ்திரீயானவள் வந்தபோது, அவள் தேவனுடைய வார்த்தையை கண்டாள். அவள் அதை அறிந்திருந்தாள். அவள் அதன்படி ஜீவிக்கவில்லை. ஆனால் அவள் அதை அறிந்திருந்தாள். அது அவளிடத்தில் பேசினவுடனே, அவள், "நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன்" என்றாள். அவர்...அவள், "மேசியா இதைச் செய்வார் என்று நான் அறிவேன்" என்றாள். அதற்கு அவர், "நானே அவர்" என்றார். 61. அது என்ன செய்தது? அது கருமையை சுத்தப்படுத்தி முழுவதும் வெண்மையாக்கிற்று. ஏன்? அங்கே ஒரு வித்து, ஒரு முன் குறிக்கப்பட்ட வித்து கிடந்தது. அது உலகத்தோற்றத்திற்கு முன்பான தேவனுடைய சிந்தனையாயிருந்தது. 62. ஒரே ஒரு நித்திய ஜீவனின் உருவம் மாத்திரமே உண்டு. நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னமே தேவனுடைய சிந்தையில் இருந்தீர்கள். நீங்கள் அவருடைய சிந்தையின் தன்மையாயிருக்கிறீர்கள். ஏனென்றால் நித்தியத்திற்கு ஒரு போதும் துவக்கமோ அல்லது முடிவோ இருக்கமுடியாது. நீங்கள் எப்பொழுதுமே தேவனுடைய திட்டத்தின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அது அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. அது இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இன்னும் ஒரு படத்தை நிழலிலிருந்து நிஜ உருவமாக்க வேண்டும். அது மரணமாகும். அப்பொழுது நிழல் நிஜமாகிறது. அப்பொழுது நீங்கள் அவர் நினைத்தப்படியே கிறிஸ்துவோடு மணவாட்டியா யிருக்கிறீர்கள். கணவனும் மனைவியும் போலவே இன்றைக்கு (தேவனும்) கிறிஸ்துவும் சபையும் ஒரே விதமாய் இருப்பர். இப்பொழுது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அழைக்கப் பட்டவர்களாயிற்றே! மோசே, "ஒரு அழகுள்ள பிள்ளையாக" பிறந்தான் என்று வேதம் அதை கூறினது. 63. எரேமியா தீர்க்கதரிசிகளில் ஒருவனாக இருந்தான். தேவன், "நீ உன் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே, நான் உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக கட்டளையிட்டேன்" என்றார். 64. யோவான் ஸ்நானகன், ஏன்? அவனும் வேதத்தில் அடையாளங் கண்டுகொள்ளப்பட்டான். அவனுடைய வருகைக்கு எழுநூற்று பன்னிரென்டு வருடங்களுக்கு முன்னரே ஏசாயா, "அவன் வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தமாயிருந்து, கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுவான்" என்றான். அவருடைய பிரசன்னமாகுதலுக்கு சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னர் மல்கியா, "இதோ நான் என் தூதனை எனக்கு முன்பாக, கர்த்தருக்கு முன்பாக வழியை ஆயத்தம் பண்ண அனுப்புகிறேன்" என்றான் என்பதை நாம் மீண்டும் கண்டறிகிறோம். 65. பாருங்கள், அவன் முன்னரே நியமிக்கப்பட்டிருந்தான். அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டிருந்தால், அந்த பதவிகள் யாவுமே தேவனால் உண்டானதாயிருக்கும். 66. அதற்கென்று அவர்களுக்கு கல்வியளிக்கப்பட்டால் அது போரில் ஈடுபட்டு மாளும் மனித கூட்டமாய் மாத்திரமே இருக்கும். பாருங்கள். அது ஒன்றுமற்றதாய் இருக்க முடியாதே. அது ஒரு ஆகாரச் சீட்டாயிருக்குமானால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய சேஷ்டபுத்திர பாகத்தை ஒரு ஆகார சீட்டிற்காக விற்று, பின்னர் நீங்கள் ஒரு ஸ்தாபனத்தோடு அல்லது ஏதோ ஒரு குழுவோடு செல்லும்படி ஒப்புரவாகி விடுவீர்கள். ஆனால் அது தேவனுடையதாயிருக்குமானால், அப்பொழுது நீங்கள் எதையும் பொருட்படுத்தாமல் அந்த வார்த்தையினால் நிற்பீர்கள். ஏனென்றால் அதனால் நிற்கும்படிக்கே நீங்கள் பிறந்தீர்கள். 67. மோசே, அவனுடைய ஸ்தானத்தை வேறு எவரும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த பணியை வேறு எவரும் செய்ய முடியவில்லை. அவனே அதைச் செய்யும்படி நியமிக்கப்பட்டிருந்தான். 68. சகோதரர்களே, சகோதரிகளே, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யும்படி நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தலைவியாக இருக்கலாம். வேறெதோ ஒன்றாக இருக்கலாம். ஆனால் உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுக்கமுடியாது. தேவனே உங்களுக்கு ஒரு ஸ்தானத்தை உண்டு பண்ணியிருக்கிறார். வேறு ஒருவருடைய ஸ்தானத்தை எடுக்க முயற்சிக்காதீர்கள். அது மாம்சப்பிரகாரமான ஆள் மாறாட்ட மாகும், பாருங்கள், அது உங்களோடு ஏதோ காரியம் தவறாயிருக்கிறது என்பதையே காட்டுகிறது. நீங்கள் என்னவாயிருக்கிறீர்களோ அப்படியே அந்த விதமாகவே இருங்கள், மற்ற வேறெதாகவும் இருக்க வேண்டாம். 69. இப்பொழுது மோசே உரிமைகளையும், அழைப்புகளையும் நிரூபிக்கும்படி தேவன் அடையாளங்களைக் கொடுத்தார் என்று நாம் கண்டறிகிறோம். 70. ஒவ்வொரு உண்மையான அடையாளமும், ஒவ்வொரு உண்மையான அடையாளமும் தேவனிடத்திலிருந்து அனுப்பப் பட்டு, அதற்குப் பின்னே ஒரு சத்தத்தை உடையதாயிருக்கும். இப்பொழுது அதைக் கவனிக்கத் தவறாதீர்கள். பாருங்கள், இதுவே இதன் பேரிலான என்னுடைய கடைசி பாடமாயிருக்கிறது. ஒவ்வொரு உண்மையான அடையாளமும்... இப்பொழுது நாம் தேவனிடத்திலிருந்து அனுப்பப் படாத அடையாளங்களை உடையவர்களாயிருக்கிறோம். சாத்தானால் ஏறக்குறைய அந்தவிதமான எந்த காரியத்தையுமே போலியாக பாவனை செய்து காட்டமுடியும். ஆனால் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு உண்மையான அடையாளமோ, அதற்குப் பின்னே தேவனுடைய சத்தத்தை உடையதாயிருக்கிறது. 71. தேவன், மோசேயினிடத்தில், "அவர்கள் முதலாம் அடையாளத்தை விசுவாசியாமற்போனால், அப்பொழுது அவர்களுக்கு முன்பாக இந்த மற்றொரு அடையாளத்தை செய். அதன் பின்னர் அவர்கள் அதற்கும் செவி கொடுக்கவில்லை யென்றால் அப்பொழுது, அப்படியே தண்ணீரை எடுத்து தரையில் மேல் ஊற்று" என்றார். அது அவர்கள் அங்கே தங்களுடைய சொந்த இரத்தத்தில் தோய்த்தெடுக்கப் படுவார்கள் என்பதற்கு அது ஒரு அடையாளமாயிருந்தது. 72. கவனியுங்கள், அப்படியே அதேவிதமாகவே அவர், "உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். அந்நாளிலே உங்களை புறக்கணிக்கிற அந்த பட்டிணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் சோதோம் கொமோராவுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்" என்றார். 73. இப்பொழுது நாம் சபையில் விளையாடிக் கொண்டிருக்க வில்லை. இது சபையாயிருக்கிறது. கிறிஸ்து சபையாயிருக்கிறார், நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். நாம் காண முடியாத கிறிஸ்துவின் சரீரமாய் அதற்குள்ளாகவே பிறந்திருக்கிறோம். நீங்கள் அதில் சேரமுடியாது. 74. நான் ஏறக்குறைய ஐம்பத்தைந்து வருடங்களாக பிரான்ஹாம் குடும்பத்தோடு இருந்து வருகிறேன். அவர்கள் அந்த குடும்பத்தில் என்னை சேர்ந்து கொள்ளும்படி ஒருபோதும் கேட்டுக் கொள்ளவே இல்லை. நான் ஒரு பிரான்ஹாமாக பிறந்தேன். 75. அந்த விதமாகவே நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்தவனாக பிறந்திருக்கிறீர்களேயன்றி, அதற்குள் சேர்ந்து கொள்ளவில்லை. நீங்கள் அதில் பிறந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் பிறப்பைக் குறித்து பயப்படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு சிறு கரத்தினால் அருமையாக சுத்தம் செய்யும் முறையை அல்லது ஒரு சிறு அட்டையோடு பாடுவது அல்லது கொஞ்சம் தண்ணீர் தெளித்து கைகுலுக்குதலையே உடையவர்களாயிருக்கிறார்கள். அது பிறப்பல்ல. ஒரு பிறப்பு என்பது ஒரு பயங்கரமான காரியமாயிருக்கிறது. ஒரு பிறப்பு என்பது பயபக்தியுண்டாக்கும் ஒன்றாயுள்ளது. அது ஒரு பன்றிப்பட்டியில் இருந்தாலும், அல்லது ஒரு மாட்டுத் தொழுவத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒரு மருத்துவமனை அறையில் இருந்தாலும் சரி, ஒரு பிறப்பு என்பது ஒரு அலங்கோலமாகவே இருக்கிறது. அது உங்களில் இருந்து ஒரு அலங்கோலத்தையே உண்டுபண்ணுகிறது. நீங்கள் எதையுமே விட்டுவிட விரும்புகிறதில்லை. உங்களுக்கு இது, அது அல்லது மற்றது தேவைப்படுகிறதில்லை.ஆனால் கண்ணீர் உங்கள் முகத்தில் இருக்கும் வண்ணத்தைக் கழுவி, உங்களை ஒரு வித்தியாசமான நபராக்கிவிடும். நீங்கள் மீண்டும் பிறந்திருந்தால் அது உங்களிலிருந்து ஒரு அலங்கோலத்தையே உண்டு பண்ணும். ஆனால் நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாய் வருவீர்கள், புரிகின்றதா? அவர்கள் அதை விரும்புகிறதில்லை. அவர்கள் ஏதோ ஒரு எளிதான வழியையே விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எளிதான வழிகளே கிடையாது. அந்த பாடலில் அவன் "நான் கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் அந்த வழியைத் தெரிந்து கொள்வேன்" என்று கூறியது போலவேயிருக்கும். அவர் ஒரு விதை வளர்ச்சிக்காக வைக்கப்படும் கண்ணாடிக் கல செடியாயிருக்கும்படி விரும்புகிறதில்லை. தேவனுடைய ஒவ்வொரு உண்மையான அடையாளமும் தேவனுடைய சத்தத்தால் பின்பற்றப்படுகின்றன. 76. இப்பொழுது ஒரு மனிதன் ஒரு தேசத்திலோ அல்லது எந்த நேரத்திலும் ஒரு அடையாளத்தை கொடுத்தால், அதற்குப்பின் அவன் பேசுகிற அந்த சத்தம் தேவனுடைய வார்த்தை யாயில்லையென்றால், அப்பொழுது அதை கவனித்துப் பார்த்து, அதை விசுவாசிக்க வேண்டாம். ஏதோ ஒரு பண்டைய வேதபாட பள்ளியில் ஒரு மனிதன் எழுந்து, தேவனிடத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டுகிறேன் என்று கூற, அந்த மனிதனுடைய உபதேசமானது நீங்கள் இத்தனை வருடங்களாக கொண்டிருக்கிற அதே பண்டைய வேத சாஸ்திரமா யிருக்குமானால், அப்பொழுது தேவன் அந்த அடையாளத்தை ஒருபோதும் அனுப்பவேயில்லை. அவ்வாறு எப்போதாவது இருந்துள்ளதா என்று வேதத்தில் நோக்கிப் பாருங்கள், வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். அந்த நபர் திரும்பி வந்து, "இப்பொழுது நாம் எல்லோரும் இதில் சேர்ந்து கொள்ள வேண்டும். அது நிலைநாட்டப்பட்ட ஒரு பண்டைய விவகாரமாய் இருந்துவருகிறது" என்று கூறினால், நீங்கள் அதை நம்ப வேண்டாம். நாம் இன்னும் சில நிமிடங்களில் அதற்குள்ளக போகப்போகிறோம், பாருங்கள். வேண்டாம், நீங்கள் அதை நம்ப வேண்டாம். 77. தேவன் எப்பொழுதுமே தம்முடைய அடையாளங்களை ரூபகாரப்படுத்துகிறார். தேவனிடத்திலிருந்து வருகிற அடையாளம் எப்பொழுதுமே தேவனுடைய சத்தத்தையே பேசுகிறது. 78. அது நீங்கள் இருந்து வருகிற அதே பண்டைய வேத பாட பள்ளியாயின், அவர் ஏன் ஒரு அடையாளத்தை கொடுக்க வேண்டும்? நீங்கள் ஏற்கனவே அதற்குள் இருக்கின்றீர்களே? அவர் உங்களை அந்த மூலைக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நிறுத்தும் அடையாளமாயிற்றே! வேகத்தை குறையுங்கள். நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள் கவனிக்கவில்லையென்றால், நீங்கள் அந்த மூலையில் சிக்கிக் கொள்வீர்கள். அங்கே ஒரு கூர்மையான வளைவு உண்டு. நீங்கள் இந்த வளைவை அடியும் முன்னரே உங்களை அழிவிலிருந்து காத்துக்கொள்ள எப்பொழுதுமே அங்கே ஒரு அடையாளம் உள்ளது. ஒரு நல்ல சாலை அமைப்பாளர்கள் அடையாளங்களை கொடுக்கின்றனர். நாம் ஒரு பாதையில் மகிமைக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அந்த அடையாளம் அதே பழைய காரியத்தைப் பேசுமாயின் அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல. 79. தேவன் தம்முடைய ஜனங்களின் கவனத்தை கவர்ந்திழுப்பதற்கு அடையாளங்களை கொடுக்கிறார். அடையாளங்கள், தேவனுடைய அடையாளங்கள் தேவனுடைய ஜனங்களின் கவனத்தை கவர்ந்திழுக்கிறதாயிருக்கின்றன. தேவனுடைய அடையாளங்கள் தேவனுடைய ஜனங்களின் கவனத்தை கவர்ந்திழுக்கும்படிக்கு கொடுக்கப் பட்டிருக்கின்றன. 80. இப்பொழுது இங்கே எரிகின்ற முட்செடியானது தீர்க்கதரிசியை கவர்ந்திழுக்க முயற்சித்த அடையாள மாயிருந்தது. ஏனென்றால் அந்த தீர்க்கதரிசியானவன் தேவனிடத்திலிருந்து விலகி ஓடிப்போயிருந்தான். எனவே தேவன் எரிகின்ற முட்செடியை ஒரு அடையாளமாகக் கொடுத்தார். அவன் இந்த வினோதமான அடையாளத்தைக் கண்டான். அப்பொழுது அவன், "ஒரு முட்செடியானது அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகமல் இருக்கிற இந்த வினோதமான அடையாளம் என்னவென்பதை பார்க்கும்படி நான் அருகில் செல்வேன்" என்றான். இப்பொழுது தேவன் தப்பியோடும் தம்முடைய தீர்க்கதரிசியின் கவனத்தை கவர்ந்து கொண்டிருந்தார். அவர் வேறோருவனை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் அந்த பணிக்காகவே மோசேயை நியமித்திருந்தார். வேறு எவரும் அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. 81. யாத்திரையில் மற்ற சில நபர்கள் அதை செய்ய முயற்சித்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். தாத்தான் எழும்பி அதிலிருந்த ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க விரும்பினான். தேவன் மோசேயினிடத்தில், "உன்னை பிரித்துக் கொள், நான் அவர்களை விழுங்குவேன்" என்றார். புரிகின்றதா? 82. தேவன் ஒரு தனிப்பட்ட நபரோடு தொடர்பு கொள்கிறார். புரிகின்றதா? இப்பொழுது இதை கவனியுங்கள். அவர் தீர்க்கதரிசியை அவனுடைய சரியான ஸ்தானத்தில் பொருத்தும் படி தீர்க்கதரிசியினுடைய கவனத்தை கவர்ந்திழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். எனவே அவர் எரியும் முட்செடியை அடையாளமாகக் கொடுத்தார். 83. அந்த அடையாளத்தை பின்தொடர்ந்த சத்தம் ஒரு வேத பிரகாரமான சத்தமாயிருந்தது என்பதை கவனியுங்கள். "நான் ஜனத்தின் கூக்குரலையும், அவர்களுடைய பெருமூச்சையும், ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலையும் கேட்டிருக்கிறேன். நான் என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன்." ஆமென். அதுவே இதனை தீர்க்கிறது. "நான் வாக்குத்தத்தத்தை நினைவுகூருகிறேன்." அது ஒரு வேத பிரகாரமான சத்தமாய் இருந்தது. "எனவே நான் உன்னை அனுப்புகிறேன். நான் அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்திருக்கிறேன், எனவே நான் உன்னை அனுப்புகிறேன்." 84. நினைவிருக்கட்டும், தேவன் மனிதனுக்கு புறம்பே எந்த காரியத்தையுமே செய்கிறதில்லை. உங்களுக்கு அது தெரியுமா? அதுதான் ஜனங்களை இடறச்செய்கிறது. புரிகின்றதா? 85. அதுதான் இயேசுவைக் குறித்தும் அவர்களை தடுமாற வைத்தது. அவர்கள், "நீ ஒரு மனிதனாயிருக்க உன்னையே தேவனாக்கிக் கொள்கிறாயே" என்றனர். அவர் தேவனாய் இருந்தார். ஆனால் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. "நல்லது, நீ வெறுமனே ஒரு மனிதனாயிருக்கிறாயே" என்றார். 86. அதற்கு அவர், "நீங்கள் தீர்க்கதரிசிகளை, 'தேவர்கள்' என்று அழைக்கிறீர்கள். உங்களுடைய நியாயப்பிரமாணமும் அதை அங்கீகரித்தது. தேவனுடைய வார்த்தை அவர்களிடத்தில் வருகிறபடியினால், நீங்கள் அவர்களை 'தேவர்கள்' என்று அழைப்பீர்களேயானால், நான் தேவனுடைய குமாரன் என்று கூறும்போது நீங்கள் எப்படி என்னை குற்றப்படுத்த முடியும்?" என்று கேட்டார். 87. பாருங்கள், கவனத்தை கவர்ந்திழுப்பதற்கே அடையாளங்கள். கவனம் கவர்ந்திழுக்கப்படுகின்றபோது அது அதேவிதமான பண்டைய முறையாகவே இருக்குமாயின், அப்பொழுது அது தேவனுடையதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 88. ஆனால் இப்பொழுது தேவன் தீர்க்கதரிசியை கவர்ந்திழுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு அடையாளத்தை அவனுக்குக் கொடுத்தார். அப்பொழுது அந்த அடையாளத்தை பின் தொடர்ந்த சத்தம் வேதபிரகாரமான ஒரு சத்தமாய் இருந்தது. "நான் என்னுடைய ஜனங்களை கண்டிருக்கிறேன். நான் அவர்களுடைய கூக்குரலை கேட்டிருக்கிறேன், நான் என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன்." 89. இப்பொழுது தேவன் தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் மூலம் பேசப்போகிறார். அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்ப வேண்டும். ஏனென்றால் வார்த்தை தீர்க்கதரிசியினிடத்திற்கே வருகிறது. "வேதம், அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரர்களுக்கு முதலில் அதை வெளிப்படுத்தாமல் ஒன்றையும் செய்கிறதில்லை" என்று தேவன் தாமே கூறியுள்ளார் என உரைக்கப்பட்டுள்ளது. புரிகின்றதா? ஆகையால் அடையாளம் கொடுக்கப்படுகிறது. வேதவாக்கியம் அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறது. அதுவே அடையாளத்தின் சத்தமாயிருக்கிறது. 90. அந்த அடையாளத்தின் சத்தம் மோசேயினுடையதா என்பதை பார்த்தீர்களா? முதலாவது, அடையாளம் எரியும் முட்செடியாய் இருந்தது; சத்தமோ வேத வாக்கியமாயிருந்தது. 91. மோசே அதை அவருடைய அடையாளமாக ஏற்றுக் கொண்டு, எகிப்திற்கு சென்று, தேவன் அவனுக்கு கூறியிருந்த அடையாளத்தை செய்தான். அந்த அடையாளம் அதற்கு ஒரு சத்தத்தை உடையதாயிருந்தது. எனவே ஜனங்கள் அதை விசுவாசித்து வெளியே வந்தனர். அவர்கள் பவனிசெய்யும் வரையில், அவர்கள் அருமையாக சென்றனர். ஆனால் அவர்கள் அந்த சத்தத்திற்க எதிராக முறுமுறுக்கத் துவங்கினபோதோ, அப்பொழுதே அவர்கள் நின்றுவிட்டனர். 92. இஸ்ரவேலர் பயணம் செய்ததை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் வரவேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள்...நாற்பது மைல்கள் தூரத்தில் மாத்திரமே இருந்தனர். ஆனாலும் அதற்கு சுமார் நாற்பது வருடங்களாக வந்து கொண்டிருந்தனர், ஏன்? அவர்கள் அடையாளத்தை உண்டுபண்ணின சத்தத்திற்கு விரோதமாக முறுமுறுக்கத் துவங்கினதே அதற்கு காரணமாயிருக்கிறது. அவர்கள் சமுத்திரைக்கரையில் மேலே அங்கே சத்தமிட்டுக் கொண்டும், ஆவியில் நடனமாடிக் கொண்டுமிருக்க, மோசேயும் ஆவியில் பாடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் எவ்வளவு அருகில் இருந்தனர் என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து ஒரு சில நாட்கள் செல்ல வேண்டிய தூரத்திலேயே இருந்தனர். ஆனால் அவர்கள் முறுமுறுக்கத் துவங்கி ஏதோ ஒன்றை வித்தியாசமாக செய்ய விரும்பினபோது, அவர்கள் வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் தரித்திருந்து, அதிலேயே அழிந்து போயினர். அது உண்மை. காரணம் அவர்கள் விசுவாசிக்கவில்லை. தேவனோ, "மோசே, அவர்கள் உனக்கு விரோதமாக பேசிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் எனக்கு விரோதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். அது மோசேயினுடைய சத்தமல்ல, தேவனுடய சத்தமாயிருந்தது. 93. இப்பொழுது கவனியுங்கள். யெகோவா தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் மூலம் பேசப் போகின்றார். ஆகையால் அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்ப வேண்டும். அதாவது நீங்கள் அதை பார்க்க விரும்பினால், அது ஆதியாகமம் 15:16-ல் உள்ளது. தேவன் ஆபிரகாமிடத்தில், "உன் சந்ததியார் இந்த அந்நிய தேசத்தில் பரதேசியாய் சஞ்சரிப்பார்கள், நான் அவர்களை ஒரு பலத்தை கரத்தினால் வெளியே கொண்டு வருவேன், எமோரியரின் அக்கிரமம் இன்னும் நிறைவாக்கப்படவில்லை" என்று கூறினார் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர் அளிக்கிற தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களுக்கும், இங்கே அவர் ஒரு எரிகிற முட்செடியின் மூலம் தீர்க்கதரிசியை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறார். 94. இப்பொழுது எரிகிற முட்செடியானது, "மோசே, தேவன் தேவனாகவே இருக்கிறார்" என்று கூறியிருந்திருக்குமானால், அப்பொழுது அவன், "ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று கூறியிருந்திருப்பான். 95. ஆனால் அது, "ஓ, நீ அருமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாய். மோசே நீ அதைத் தொடர்ந்து அப்படியே செய். நீ ஒரு அருமையான ஸ்திரீயை திருமணம் செய்திருக்கிறாய், அவள் ஒரு அழகான குழந்தையா யிருக்கிறாள். நிச்சயமாகவே நீ ஒரு அருமையான குமாரனைப் பெற்றுள்ளாய். தேவனுக்கு மகிமை!" என்று கூறியிருந்தால்! அது அதே பண்டைய வேதபாட பள்ளியாயிருக்கிறது. புரிகின்றதா? 96. ஆனால் அவர் ஏதோ ஒன்றை செய்ய ஆயத்தமாயிருந்தார். ஆகையால் அவர் அந்த மனிதனை கவர்ந்திழுக்க வேண்டியதாயிருந்தது. அவர் அந்த மனிதனுக்கு இரண்டு அடையாளங்களை செய்யும்படிக்கு கொடுத்து, "ஒவ்வொரு அடையாளமும் ஒரு சத்தத்தை உடையதாயிருந்தது" என்றார். அது அவ்வண்ணமே இருக்கிறது என்பதை அது நிரூபிக்கிறது. இப்பொழுது அந்த சத்தங்கள் என்ன உரைத்தன என்பதை கவனியுங்கள். அந்த சத்தங்கள் சிருஷ்டிப்பையும்கூட உண்டு பண்ணிற்றே! யெகோவா அப்பொழுது பேசுவதற்கு ஆயத்தமாயிருந்தார். 97. மீண்டும் ஒரு தீர்க்கதரிசியின் வருகை ஒரு அடையாளமாக இருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்களா? ஒரு தீர்க்கதரிசியின் வருகை அந்த காலத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. 98. இப்பொழுது நான் ஒரு இறைமையில் திருத்தந்தையை குறிப்பிட்டுக் கூறவில்லை. நான் சில விசுவாசமுள்ள போதகர்களை, சில நல்ல நபர்களைக் குறிப்பிட்டு கூறவில்லை. அவர்கள் அருமையானவர்களாயிருக்கிறவர்கள். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள். 99. ஆனால் ஒரு தீர்க்கதரிசியோ ஒரு அடையாளமாய் இருக்கிறான். இங்கே வேதம் அவ்வண்ணமே கூறுகிறது. அந்த அடையாளம் எதைக் குறிக்கிறது? அது அவருடைய வார்த்தையை நிறைவேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற ஒரு அடையாள மாகவும், இந்த தீர்க்கதரிசியினுடைய அடையாளத்தின் சத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு அடையாள மாகவும் இருக்கிறது. 100. கவனியுங்கள், ஒரு தீர்க்கதரிசியின் வருகை நியாயத்தீர்ப்பு சமீபமாயிருக்கிறது என்ற எச்சரிப்பின் அடையாளமாய் இருக்கிறது. உங்களுக்கு அது தெரியுமா? தேசத்தில் ஒரு தீர்க்கதரிசி இருப்பாரேயானால், அப்பொழுது நியாயத்தீர்ப்பு தாக்க ஆயத்தமாயிருக்கிறது. 101. நினைவிருக்கட்டும், அவர் முதலாவது நிச்சயமாகவே தேவனாலும், அந்த நாளுக்கான வார்த்தையாலும் ரூபகாரப் படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே அவர் அடையாளங்களை செய்கிறார். ஆகையால் அந்த அடையாளத் தையும், அவர் என்ன முன்னறிவிக்கிறார் என்பதையும் கவனியுங்கள். அவர் "அது நிறைவேறினால் அப்பொழுது அவனுக்கு செவி கொடுங்கள்" என்றார். எண்ணாகமம் 12:6 "அது நிறைவேறவில்லையென்றால் அதை மறந்துவிடுங்கள்." அது அவர் தருகின்ற ஒரு ஆவிக்குரியப் பிரகாரமான அடையாளமாயிருக்க வேண்டியதாயிருக்கிறது. 102. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருப்பாரேயானால் அவர் ஒரு முறை ஒரு அடையாளமாக எதைக் கொடுக்கிறாரோ, அதையே தொடர்ந்து கொடுக்கிறார். "கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்திற்கு வந்தது." அவர்கள் வார்த்தையாயிருந்தனர். இயேசுவானவர் வந்தபோது, அவர் வார்த்தையாயிருந்தார். வார்த்தையானது இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுத்தது. அது இன்னமும் தொடர்ந்து வகையறுத்துக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். 103. இந்த தீர்க்கதரிசியினுடைய வருகை எப்பொழுதுமே, "நியாயத்தீர்ப்பு சமீபமாயிருக்கிறது" என்ற அடையாளத்தையே கொடுக்கிறது. 104. நாம் ஒரு சில நிமிடங்களுக்காக சற்று அப்படியே நிறுத்துவோமாக. நான் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளமாட்டேன். இப்பொழுது நாம் இரண்டு காரியங்களை சுமார் பத்து நிமிடங்களில் பார்ப்போமாக. சரியாக கூறினால் மீதமுள்ள செய்தி பத்து நிமிடங்கள்தான் இருக்கும். 105. நோவா தேசத்தில்-தேசத்தின் மேல் ஒரு தீர்க்கதரிசியாய், வருகின்ற நியாயத்தீர்ப்பின் ஒரு அடையாளமாக இருந்தான். மோசே தேசத்தில் ஒரு தீர்க்கதரிசியாய், வருகின்ற நியாயத்தீர்ப்பின் ஒரு அடையாளமாக இருந்தான். எலியா தேசத்தில் தீர்க்கதரிசியாய், வருகின்ற நியாயத்தீர்ப்பின் அடையாளமாயிருந்தான். யோவான் தேசத்தில் ஒரு தீர்க்கதரிசியாய், இஸ்ரவேலுக்கு வருகின்ற நியாயத்தீர்ப்பின் ஒரு அடையாளமாயிருந்தான். அவர்கள் முற்றிலுமாக அறுப்புண்டு போயினர். 106. அடையாளத்தை கவனியுங்கள்! அடையாளம் என்ன செய்கிறது? அடையாளம் கவர்ந்திழுத்து, தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஆயத்தப்படுத்தி, நியாயத்தீர்ப்பு தாக்குவதற்கு முன்னமே வழியிலிருந்து விலகச் செய்கிறது. அதைத்தான் நோவா செய்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஆயத்தப்படுத்தினான். அது மற்றவர்களுக்கு என்ன செய்கிறது? அடையாளம், அடையாளத்தின் சத்தம் அவிசுவாசியை ஆக்கினைக்குட்படுத்தி, நியாயத்தீர்ப்பிற்காக அவனை ஆயத்தப் படுத்துகிறது. அது தெரிந்து கொள்ளப் பட்டவர்களையோ தப்பியோடும்படியாக ஆயத்தப்படுத்துகிறது. அதுதான் அடையாளமாயிருக்கிறது. அதற்காகத் தான் அடையாளங்கள் கொடுக்கப்படுகின்றன. வருகின்ற நியாயத் தீர்ப்புகளுக்காகவே அடையாளங்கள் கொடுக்கப்படுகின்றன. தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கே! அவர்களே அதை காண்கிறார்கள். 107. ஒரு உத்தம இருதயத்தோடும், ஒரு அசுத்தமாக்கப் பட்ட சரீரத்தோடும் இருந்த அந்த அற்பமான ஸ்திரீயைப் போன்றும்; ஒரு உத்தம சரீரத்தோடும், ஒரு அசுத்தமாக்கப்பட்ட இருதயத் தோடுமிருந்த அந்த பரிசேயனைப் போலவுமேயாகும். அது ஒருவரை ஆக்கினைக்குட்படுத்தி, மற்றொருவரை இரட்சித்தது. 108. மோசேயைக் காப்பாற்றின அதே நியாயத்தீர்ப்புகள் உலகத்தை ஆக்கினைக்குட்படுத்தியது; அது அவனுடைய பிரசங்கமே. 109. அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஆயத்தப் படுத்துகிறது. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எதற்காக ஆயத்தமாயிருக்கிறார்கள்? அவர்கள் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு அடையாளத்தைக் காணும்பொழுது, அது அங்கே இருக்க வேண்டியதாயிருக்கிறதா என்று அவர்கள் வேதத்தில் நோக்கிப் பார்த்து, "ஆம், இதோ அது இருக்கிறதே" என்பார்கள். அது என்ன? விரைவில் முடிவு செய்யப்பட இருக்கிறது நியாயத்தீர்ப் பேயாகும். ஆகையால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அந்த சத்தத்திற்கு செவி கொடுக்கிறார்கள். 110. ஆனால் தெரிந்து கொள்ளப்படாதவர்களே அதை அசட்டை செய்து, "அது அர்த்தமற்றது. தொடர்ந்து இப்படியே செல்வோம். நாம் அதே பண்டைய வேத சாஸ்திர பள்ளியையே தெரிந்து கொள்வோம்" என்கிறார்கள். புரிகின்றதா? அந்தவிதமாகவே அவர்கள் லூத்தரினுடைய நாட்களிலும் செய்தனர். அந்தவிதமாகவே அவர்கள் வெஸ்லியினுடைய நாட்களிலும் செய்தனர். அந்தவிதமாகவே இப்பொழுதும் செய்கிறார்கள். அந்த விதமாகவே, அவர்கள் எப்பொழுதும் செய்திருக்கிறார்கள். 111. ஆனால் இது ஒரு அடையாளமாயிருக்கிறது. இந்த அடையாளத்தை பின்தொடருகிற ஒரு சத்தம் உண்டு. அந்த சத்தம் ஒரு வேதப்பிரகாரமான சத்தமாக அடையாளங் கண்டு கொள்ளப்படுகின்றது. இப்பொழுது அதை மறந்து போகாதீர்கள். இப்பொழுது அதைத் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொண்டேயிருங்கள். ஏனென்றால் நான் மீண்டும் உங்களை காணாமலே போகலாம். 112. நான் இங்கு எங்காவது வந்து என்னுடைய எல்லா சகோதரர்களையும் ஒன்று சேர்க்க முடிந்தால், அப்பொழுது அவர்களுக்கு எழுப்புதல்கள் நடைபெறாமலிருக்கும்போது, ஒரு கூடாரம் அமைத்து, அமரவைத்து, நாள்தோறும் அதை போதித்து, அது உண்மையிலேயே உள்ளே நன்கு பதியும் வரையில் போதிக்கும் ஒரு வழியை நான் உடையவனாயிருக்க விரும்புகிறேன். ஆனால் அவர் அதை அனுமதிக்கமாட்டார். எனவே நான் அதை நினைக்கவில்லை. பாருங்கள். நாம் முடிவிற்கு மிகவும் அருகில் இருக்கிறோம். நாம் இப்பொழுதே முடிவில் இருக்கிறோம் என்பதை நான் விசுவாசிக்கிறேன். 113. அங்கே என்னுடைய புத்தகத்தில் நான் அதை தொடர்ச்சியாக எழுதி வைத்துள்ளேன். 1933ம் வருடம் ஒரு நாள் காலையில் நான் மேய்ப்பனாயிருந்த ஒரு பாப்டிஸ்டு ஞாயிறு சிறுவர் வேதபாட பள்ளிக்கு, ஒரு சிறுவர் வேதபாட பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் வந்து, முடிவு காலத்தை எனக்கு காண்பித்து, சம்பவிக்கப்போகும் ஏழு காரியங்களையும் எனக்கு காண்பித்தார். நான் அவைகளைக் குறித்து எழுதி வைத்தேன். அது பழமையான மஞ்சள் நிறத்தாளில் உள்ளது. 114. ஜெர்மானியர்கள் பிரஞ்சு எல்லையோர ஜெர்மன் அரண் வரிசையை (Siegfriend Line) எப்படி கட்டுவார்கள் என்றும் அமெரிக்கர்கள் அதில் எப்படி ஒரு பெரிய வீழ்ச்சியை அடைவார்கள் என்றும், அந்த எல்லையோர அரண் வரிசை கட்டப்படுவதற்கு பதினோரு வருடங்களுக்கு முன்பே எனக்கு சரியாக கூறப்பட்டது. 115. எப்படி முசோலினி எழும்புவான் என்றும், எப்படி அவன் எத்தியோப்பியாவிற்கு செல்வான் என்றும், எத்தியோப்பியா எப்படி "அவனுடைய காலடிகளில் விழும்" என்பதும் எனக்கு கூறப்பட்டது. அவன் கவிழ்க்கப்பட்டு, அவனுடைய சொந்த ஜனங்களே அவன் மீது காறி உமிழ, அவன் அவமானமாக மரித்துப்போவான் என்றும் கூறப்பட்டது. 116. மேலும் நான், "கம்யூனிசம், பாஸிசம், நாஸிஸம் என்ற மூன்று தனிக்கொள்கைகள் உண்டாகும் என்றும், அவைகள் ரூஷ்யாவிலிருந்து எழும்பி கம்யூனிசத்தில் முடிவுறும்" என்றும் கூறினேன். மேலும் அது கத்தோலிக்கத்தை அழிக்கும். அது அழிக்கிறதா என்பதை பாருங்கள்! 117. நான், "குறிப்பிடத்தக்க பெரிதான முன்னேற்றங்கள் சம்பவிக்குமே!" என்றேன். மேலும் நான், "மோட்டார் வாகனங்கள் ஒரு முட்டையைப் போன்ற வடிவில் காணப்பட்டு வீதியில் ஓடுவதை நான் காண்கிறேன். நெடுஞ்சாலையில் ஏதோ ஒரு விதமான ஒரு கட்டுப்பாட்டினால் கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஜனங்கள் அதை வழிநடத்த வேண்டியதில்லை. நான் ஒரு அமெரிக்க குடும்பத்தினர் ஒரு காரின் பின்புற இருக்கையில் அமர்ந்து சதுர கட்டங்கள் போட்ட பலகையில் கழுங்குகளை வைத்து விளையாடும் விளையாட்டை விளையாடக் கண்டேன்" என்றும் கூறினேன். அவர்கள் இப்பொழுது அந்தக் காரை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அதை இயக்க நெடுஞ்சாலைகளில் அதற்குரிய வசதிகளை உடையவர் களாயிருந்தால் நலமாயிருக்குமே. அந்த சிறு வோல்ஸ் என்ற வாகனம் ஒரு பரிபூரண முட்டை வடிவில் சரியாக அதேவிதமாகவே இருக்கிறது. அது மற்ற எல்லா கார்களைக் காட்டிலும் வித்தியாசமானதாயுள்ளது. 1933-ல் கார்கள் எந்தவிதமாக காணப்பட்டன என்றும், இப்பொழுது எப்படி காணப்படுகின்றன என்றும் உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா? 118. அதன் பின்னர் ஸ்திரீகளை வாக்களிக்க அனுமதிப்பதையும், அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் அந்த தரிசனம் மீண்டும் முன்னறிவித்தது. இந்த தேசம் எப்படியாய் இஸ்ரவேல் தேசத்தைப் போன்ற ஒரு மாதிரியைக் கொண்டதாயிருந்து, இவர்கள் இந்த தேசத்திற்கு வந்து, இங்கே குடியிருந்தவர்களை துரத்திவிட்டு இத்தேசத்தை சுதந்தரித்துக் கொண்டனர். இஸ்ரவேலர் தாவீது, சாலமோன் மற்றும் தேவபயங்கொண்டிருந்த ஒரு சில இராஜாக்களை முதலில் உடையவர்களாக இருந்தனர். அதற்குப்பின் சற்று கழித்து அவர்கள் ஆகாபை காட்சியில் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவனுக்கு வாக்களித்தனர். அப்பொழுது சபையானது உலகப்பிரகாரமானதாகிவிட்டது. நாமும் ஒரு லிங்கனையும், ஒரு வாஷிங்டனையும் உடையவர்களாயிருந்தோம். ஆனால் இன்றைக்கு என்ன உள்ளது என்பதை நோக்கிப் பாருங்கள். அடுத்த காரியம் எங்கே உள்ளது? நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 119. இது இயற்கையில் அதேவிதமான ஒரு அடையாளமாக இருக்கிறது. இது தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஆயத்தப்படுத்துகிறது. அவிசுவாசியையோ நியாயத்தீர்ப் பிற்கென்று ஆக்கினைக்குட்படுத்துகிறது. 120. வேதம், எண்ணாகமம் 12:6ல், "இந்த தீர்க்கதரிசி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாயிருந்து அவன் கூறுகிறது நிறைவேறுமானால் அவனுடைய எச்சரிப்பிற்கு செவி கொடுங்கள். ஏனென்றால் அப்பொழுது அது மனிதனல்ல என்று ரூபகாரப்படுத்துகின்றது" என்று கூறியுள்ளது. ஒரு-ஒரு தீர்க்கதரிசி ஒரு மனிதனாயிருக்கிறான். ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்திலிருந்து உண்டாகிற சத்தமோ ஒரு வேத பிரகாரமான சத்தமாயிருக்கிறது. அது ரூபகாரப் படுத்துகின்றது. அதன் பின்னர் அது ஒரு எச்சரிப்பாயிருக்கிறது. 121. வேதாகமம் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது என்பது நினைவிலிருக்கட்டும். அது 2 பேதுரு 1:21-ல் கூட கூறப் பட்டுள்ளது. மேலும் அது எபிரேயர் 1:1-ல் கூட கூறப்பட்டுள்ளது. 122. அக்கினி ஸ்தம்பமானது மோசேக்கு அடையாள மாயிருந்தது. சத்தமோ பேசப்போவதாயிருந்தது. அக்கினி ஸ்தம்பமானது சத்தம் பேசப்போவதாயிருந்தது என்பதையே காண்பித்தது. அது ஒரு அடையாளமாய், ஒரு அக்கினி ஸ்தம்பமாயிருந்தது. ஜனங்களாகிய நீங்கள் அது அண்மையில் ஹூஸ்டனில் தோன்றியதை நினைவுகூரத்தான் வேண்டும். 123. மோசே ஒரு தீர்க்கதரிசியாய், இஸ்ரவேலுக்கு ஒரு அடையாளமாயிருந்தான். அந்த வாக்குத்தத்தமோ கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட ஆயத்தமாயிருந்தது. மோசே வந்து ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தை செய்தபோது, அவன் அப்பொழுது அவர்களை ஒன்று சேர்ப்பான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 124. ஒவ்வொரு முறையும் தேவனுடைய வார்த்தையானது ஒழுங்குமுறையில் மாறாமல் எவ்வளவு பரிபூரணமா யிருக்கிறது. நான் கடந்த இரவு கூறியிருந்ததுபோலவே, ஊரீம் தும்மீம் மற்றும் ஒவ்வொரு காரியமும் எப்படியாய் எப்பொழுதுமே தேவனுக்கு மறு உத்தரவளித்திருக்கின்றன. 125. நாம் அப்படியே ஒரு நிமிடம் மீண்டும் யோனா என்ற ஒரு தீர்க்கதரிசியை எடுத்துக் கொள்வோமாக. நான் இங்கே யோனாவின் முதலாம் அதிகாரத்தை, இங்கே முதலாம் அதிகாரத்தில் உள்ள அவனுடைய தீர்க்கதரிசனத்தை எழுதி வைத்தேன். மீனின் வயிற்றிலிருந்து வந்த யோனா ஒரு அடையாளமாயிருந்தான். பாருங்கள், அந்த ஜனங்கள் அஞ்ஞானிகளாயிருந்தனர். அவர்கள் சமுத்திர தேவர்களை வழிபட்டனர். அவர்களுடைய சமுத்திர தேவன் ஒரு மீனாயிருந்தது. 126. இப்பொழுது அநே ஜனங்கள் யோனாவை குற்றம் சாட்ட முயற்சிக்கின்றனர். நானோ எப்பொழுதும் யோனாவிற்காகவே ஆதரித்துப் பேசுவேன். யோனா கர்த்தருடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்கவில்லை. "நல்ல மனிதனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்." நாம், "அவன் ஒரு யோனாவா யிருக்கிறான்" என்று கூற விரும்புகிறோம். ஆனால் ஒருமுறை அதனுடைய தகுதி என்னவென்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம். அவன் நினிவேக்குப் போக வேண்டிய வனாயிருந்தான் என்பதை நான் அறிவேன். ஆனால் தேவன் அவனை தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. எனவே அவர் சமுத்திரத்தின் மேல் கொந்தளிப்பை உண்டாக்கியிருந்தார். 127. அப்பொழுது யோனாவோ, "என் கைகளையும், கால்களையும் கட்டுங்கள். இந்த கொந்தளிப்பு உண்டாகக் காரணமானவன் நான்தான்" என்றான். அவர்கள் அவனை வெளியே தூக்கி எறிந்தனர். அப்பொழுது தண்ணீரினூடாக நீந்திக் கொண்டிருந்த ஒரு மீன், ஒரு பெரிய மீன் யோனாவை விழுங்கிற்று. விஞ்ஞானம் அதை நம்புவது கடினம் என்பதை நான் அறிவேன். 128. இங்கே சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கெண்டக்கியில் உள்ள லூயிவில்லில் அவர்கள் ஒரு திமிங்கலத்தை திறந்த வண்டியில் வைத்திருந்தனர். அங்கே தலையுச்சியில் தட்டையாகவும், கழுத்து வரை நீளமான முடியுடைய ஒருவன் இருந்தான். அவன் ஜனங்களை எப்படி சமாளித்து கட்டுப்படுத்த வேண்டும் என்பதை அறிந்த அதிக புத்தி சாதுரியமுள்ள வனாயிருந்தான். அவன் வேதம் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறது என்பதை கூற முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன், "திமிங்கலம் யோனாவை விழுங்கினது என்ற பண்டைய வேத பழமொழியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் எனபதை நீங்கள் அறிவீர்கள்" என்றான். மேலும் அவன், "பாருங்கள், நீங்கள் அதனுடைய தொண்டையினூடாக ஒரு பந்தைக்கூட விழுங்க வைக்க முடியாது. ஏனெனில் அதனுடைய தொண்டை மிகவும் சிறியது. அப்படியிருக்க ஒரு முழு வளர்ச்சியடைந்த மனிதன் எப்படி அதனுடைய வயிற்றுற்குள் சென்றிருக்க முடியும்?" என்று கேட்டான். மேலும் தொடர்ந்து, "நீங்கள் பாருங்கள், அது ஒரு பண்டைய பழமொழியாக உள்ளதே! அவைகளைப் போன்றவைகளை முழுமையாகக் கொண்டதே வேத மாயிருக்கிறது" என்றும் கூறினான். 129. அது என்னுடைய சிந்தனைக்கு மிகவும் மிஞ்சினதாயிருந்தது. எனவே நான், "ஐயா, நான் அங்கே ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன்" என்றேன். அதற்கு அவனோ, "நீர் என்னதான் கூறவுள்ளீர்?" என்று கேட்டான். 130. அப்பொழுது நான், "நீங்கள் பாருங்கள், நீங்கள் வேதத்தை சரியாக வாசிக்காதிருக்கிறீர்கள்" என்றேன். பின்னர் நான், "அது ஒரு விசேஷித்த மீனாயிருந்தது என்றே வேதம் கூறியுள்ளது. 'தேவன் அவனை விழுங்கும்படிக்கு ஒரு பெரிய மீனை ஆயத்தம் பண்ணியிருந்தார்.' இது அவனை விழுங்கும் படிக்கு ஒரு விசேஷித்த விதமாக உண்டாக்கப் பட்டிருந்தபடியால் அது அவனை விழுங்கிற்றே! அது ஒரு சாதாரண மீனாயிருக்கவில்லை. தேவன் வழக்கத்திற்கு மாறான ஒரு வேலையை செய்யப் போவதாயிருந்தபடியால், அவர் வழக்கத்திற்கு மாறாக ஒரு மீனை உண்டாக்கி இருந்தார்" என்றேன். புரிகின்றதா? அப்பொழுது அவன் அதைக் குறித்து அதற்கு மேல் ஒன்றுமே கூறவில்லை. ஆகையால் இது தேவன் கொண்டிருந்த ஒரு விசேஷித்த காரியமாயிருந்தது. 131. ஒரு சமயம் ஒரு சிறுபெண் கூடாரத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவளுடைய சிறிய முகமானது ஒரு தோலுரிக்கப்பட்ட வெங்காயம் போன்றிருக்குமளவிற்கு தன்னுடைய சிறிய முடியை மழமழப்பாக சீவி பின்னலிட் டிருந்தாள். அவள் ஒரு வேதாகமத்தோடு போய்க் கொண்டிருந்தாள். 132. ஊடிகாவில் ஜிம் டோர்ஸி எனும் பெயர் கொண்ட ஒரு வயோதிகன் இருந்தான். அவன் ஒரு மத நம்பிக்கையற்றவனாயும், ஒரு பண்டைய போர் வீரனுமாயிருந்தான். அவன் தேவனிடத்தில் விசுவாசமில்லாதவனாயிருந்தான். அப்பொழுது அவன், "வாலிப ஸ்திரீயே, நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டானாம். அதற்கு அவன், "ஐயா நான் வீட்டிற்கு போய்க் கொண்டிருக்கிறேன்" என்றாளாம். மேலும் அவன், "நீ உன்னுடைய கரத்தில் கொண்டு செல்வது என்ன?" என்று கேட்டானாம். அதற்கு அவள், "இது ஒரு வேதாகமம்" என்றாளாம். அப்பொழுது அவன், "நீ அதை விசுவாசிக்காதே, நீ அதை விசுவாசிக்கிறாயா?" என்று கேட்டானாம். மேலும் அவன்... அதற்கு அவளோ, "ஆம், ஐயா, நான் அதை விசுவாசிக்கிறேன்" என்றாளாம். 133. மேலும் அவன், "திமிங்கலம் யோனாவை விழுங்கினதைக் குறித்து அங்குள்ள அந்த கதையை நீ நம்புகிறாயா?" என்று கேட்டானாம். அதற்கு இவளோ, "ஏன்? நிச்சயமாகவே நான் அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன்" என்றாளாம். 134. அப்பொழுது அவன், "நீங்கள் விசுவாசம் என்றழைக்கிற அந்த விசுவாசத்தைத் தவிர வேறெந்த வழியில் நீ நிரூபிக்கப் போகிறாய்?" என்று கேட்டானாம். அதற்கு அவள், "ஏன்? நான் பரலோகத்திற்கு செல்லும் போது நான் யோனாவைக் கேட்பேன்" என்றாளாம். பார்த்தீர்களா? அப்பொழுது அவனோ, "அப்படியானால் அவன் அங்கு இல்லையென்றால் என்ன செய்வாய்?" என்று கூறினானாம். 135. உடனே அவள், "அப்படியானல் நீ அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்" என்று கூறிவிட்டாளாம். ஆகையால் அதுவே ஒரு நல்ல அழகான நேரடி பதிலாயிருந்தது என்று நான் எண்ணினேன். எனவே அதுவே அதற்குரிய சரியான பதில் என்று நான் கருதுகிறேன். 136. திமிங்கலம் யோனாவை விழுங்கினது என்று வேதம் கூறியிருந்தால் நான் அதை விசுவாசிப்பேன். அவரால் அதை ஆயத்தம் பண்ண முடிந்திருக்கும். தேவன் எதை கூறினாரோ அதை செய்ய அவர் வல்லவராயிருக்கிறார். அவர் எப்பொழுதுமே தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார். ஆகையால் நாம் யோனாவை, அவனைக் குறித்து...பரியாசம் செய்கிறோம்... 137. ஆனால் ஒரு மீன் நீந்திக் கொண்டிருக்கும்போது, அதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்ததுண்டா? அது தன்னுடைய இரையை தேடிக்கொண்டிருக்கும். அப்பொழுது அது அதனுடைய இரையை உண்ட பிறகு தண்ணீருக்கு அடியில் சென்று தன்னுடைய துடுப்புகள் அடியிலிருக்க இளைப்பாறிக் கொண்டிருக்கும். உங்களுடைய தங்கநிற மீன்களை போஷித்த பிறகு என்ன சம்பவிக்கிறது என்பதை கவனியுங்கள். அவைகள் தங்களுடைய சிறு வயிறு நிரம்பியவுடனே, கீழே சென்று தங்களுடைய துடுப்புகள் தரையில் படிந்திருக்கும்படி இளைப்பாறும். 138. இந்த பெரிய ஆயத்தம் பண்ணப்பட்டிருந்த மீன் வந்து இந்த தீர்க்கதரிசியை விழுங்கிற்று. அவன் சமுத்திரத்தின் அடியில் சென்றான். அது நாற்பது அடி ஆழத்தில் அங்கே இருந்திருக்கலாம். அவன் சமுத்திரத்தின் நாற்படி அடி ஆழத்தில் அங்கே இருந்திருக்கலாம். அவன் சமுத்திரத்தின் ஆழத்தில் தானும் இளைப்பாறும்படிக்கே சென்றான். 139. இப்பொழுது நாம் எப்பொழுதுமே யோனாவைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் "இப்பொழுது எனக்காக ஜெபிக்கப்பட்டது. ஆயினும் என்னுடைய கரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனக்காக ஜெபிக்கப்பட்டது. ஆனால் நான் எந்தவித முன்னேற்றத்தையும் உணரவில்லை" என்கின்றனர். எனவே நீங்கள் யோனாவைக் குறித்து எப்போதும் குறை கூறாதீர்கள். 140. இப்பொழுது அவனுக்கிருந்த அறிகுறிகளை நோக்கிப் பாருங்கள். இப்பொழுது முதலாவது அவன் சமுத்திர புயலில் இருந்தான். தேவன் அவனை அனுப்பியிருந்த திசையில் இருந்து விலகியிருந்தான். அவனுடைய கரங்களும், கால்களும் கட்டப்பட்டிருந்தன. அவன் ஒரு புயலில், கொந்தளிக்கும் சமுத்திரத்தில் வீசியெறியப்பட்டான். அப்பொழுது ஒரு மீன் அவனை விழுங்கி சமுத்திரத்தின் அடிப்பாகத்திற்கு சென்றது. அவன் மீனினுடைய வயிற்றில் உள்ள உமிழ்நீரில் கழுத்தில் கடற்பாசிகள் சுற்றியிருக்க அங்கே படுத்துக் கொண்டிருந்தான். அவன் இந்த வழியாய் நோக்கிப் பார்த்திருந்தாலும் அது மீனினுடைய வயிறாகவே இருந்திருக்கும். அவன் அந்த வழியாய் நோக்கிப் பார்த்திருந்தாலும் அது மீனினுடைய வயிறாகவே இருந்திருக்கும். நீங்களோ அறிகுறிகளைக் குறித்து பேசுகிறீர்கள். அவனும் அதையே உடையவனாக இருந்திருக் கலாம். ஆனால் அவன் என்ன கூறினான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவனோ, "அவைகள் பொய்யான மாயை களாயிருக்கின்றன. நான் இனிமேல் அவைகளை நோக்கிப் பார்க்கமாட்டேன். ஆனால் இன்னும் ஒருவிசை நான் உம்முடைய பரிசுத்த ஆலயத்தையே நோக்குவேன்" என்றான். 141. ஏனென்றால் ஒரு ஆலய பிரதிஷ்டையில் ஜெபித்த பூமிக்குரிய இயற்கையான மனிதனாகிய சாலமோன், "கர்த்தாவே உம்முடைய ஜனங்கள் எங்காவது தொல்லை யிலிருந்து இந்த பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பார்த்து ஜெபித்தால், அப்பொழுது பரலோகத்தில் இருந்து நீர் அதை கேட்பீராக" என்றான். 142. சால்மோன் ஜெபித்திருந்ததில் யோனா விசுவாசங் கொண்டவனாயிருந்தான். மூன்று பகல் மூன்று இரவுகளுக்குப் பின் தேவன் அவனை மீனின் வயிற்றிலிருந்து விடுவித்தார். அவர் அங்கே கீழே பிராணவாயு கூடாரத்தை வைத்திருந் திருக்கலாம். அவர் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அவனை மூன்று பகல்கள் மற்றும் மூன்று இரவுகளும் வார்த்தையின்படியே உயிரோடே வைத்திருந்தார். வார்த்தை சரியாயிருக்கிறது. 143. அந்த சூழ்நிலைகளுக்குள்ளான யோனாவால் மனிதன் உண்டாக்கியிருந்த கூடாரத்தை மீண்டும் நோக்கிப் பார்க்க முடிந்ததென்றால், இன்றிரவு நீங்களும், நானும் நம்முடைய சிறு அறிகுறிகளுக்காக தம்முடைய சொந்த இரத்தத்தோடு மாட்சிமை பொருந்தியவருடைய வலது பாரிசத்தில் நம்முடைய அறிக்கையின் பேரில் வேண்டுதல் செய்கிறவராய் அங்கே நிற்கிற இயேசு என்ற ஆலயத்தை எவ்வளவு அதிகமாக நோக்கிப் பார்க்க வேண்டும். யோனாவை குற்றப் படுத்தாதீர்கள். உங்களோடுள்ள கோளாறு என்னவென்பதையே நோக்கிப் பாருங்கள். "தேவன் அவ்வண்ணமாக கூறினாரே" என்ற வாக்குத்தத்தத்தையே நோக்கிப் பாருங்கள். நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளா யிருப்பீர்களேயானால், "தேவன் அவ்வண்ணமாக கூறியுள்ளாரே!" என்பதையே நோக்கிப் பார்ப்பீர்கள். அவர் வாக்குப்பண்ணினார், அது இதனைத் தீர்க்கிறது. 144. கவனியுங்கள். எல்லா ஜனங்களும் அங்கே மீன் பிடித்துக் கொண்டும், தங்களுடைய வலைகளை வெளியே இழுத்துக் கொண்டுமிருந்தனர். அப்பொழுது கொஞ்சம் கழித்து அவர்களுடைய கடற்தேவனான மீன் கரையை நோக்கியவாறு விரைந்து வந்தது. அப்பொழுது எல்லோருமே முழங்காற் படியிட்டனர். காரியங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். அது கரையை அடைந்தவுடனே தன்னுடைய நாக்கை வெளியே நீட்டினது. அது அவ்வாறு செய்தபொது, இதோ மீனினுடைய வாயிலிருந்து அந்த தீர்க்கதரிசி வெளியே நடந்து வந்தான். அந்த தீர்க்கதரிசியே! அவர்களுடைய தேவன் அந்த தீர்க்கதரிசியை கரையின் மேல் கக்கினது. அவர்கள் மனந்திரும்பினர் என்பதில் வியப்பொன்று மில்லையே. புரிகின்றதா? 145. அது ஒரு அடையாளமாயிருந்தது. மீனினால் விடுவிக்கப்பட்டிருந்த யோனா ஒரு அடையாளாமாயிருந்தான். அவன் என்ன செய்தான்? அது தேவனிடத்திலிருந்து வந்த ஒரு அடையாளமாயிருந்தது. சத்தம் என்ன கூறினது? இன்னும் நாற்பது நாட்களுக்குள், மனந்திரும்பு அல்லது அழிந்துபோ. தேவனுடைய அடையாளம்; தேவனுடைய சத்தமாயிற்றே! எப்பொழுதுமே தேவன் ஒரு அடையாளத்தை அனுப்புகிறபோது, தேவன் தம்முடைய சத்தத்தை அந்த அடையாளத்தின் பின்னே அனுப்புகிறார். கவனியுங்கள், "மனந்திரும்புங்கள் இல்லை யென்றால் இன்னும் நாற்பது நாட்களுக்குள் இந்த முழு பட்டணமும் அழிந்துபோகும்." 146. நானூறு வருடங்களாக ஒரு தீர்க்கதரிசியும் இல்லாமலிருந்து அதன் பின்னரே தீர்க்கதரிசியாகிய யோவான் பூமியின் மீது தோன்றினான். நானூறு வருடங்களுக்குப் பிறகு உண்டான அவனுடைய வருகையே அடையாளமாகும். அது கண்டிப்பில்லாத நேரமாயிற்றே! 147. இப்பொழுது நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருப்பீர் களேயானால் நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள். தேவன் உங்களுடைய புரிந்து கொள்ளுதலை திறந்தருள்வாராக. இதுவோ எவ்வளவோ காலமாக இருந்து வருகிறதே? 148. நானூறு வருடங்களாக இஸ்ரவேலுக்கு ஒரு தீர்க்கதரிசியும் இல்லை. சபைகள் உருக்குலைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னரே இங்கே யோவான காட்சியில் வருகிறான். யோவான் ஒரு தீர்க்கதரிசியாய், அவனுக்குப் பிறகு மேசியா பேசப் போகிறார் என்பதற்கு ஒரு அடையாளமாயிருந்தான். கவனியுங்கள். ஏனென்றால் மல்கியா 3-ல், "நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் ஜனங்களுக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான்" என்று கூறப்பட்டுள்ளது. 149. யோவானை நோக்கிப் பாருங்கள், அவனுக்குள் சுயநலமே இல்லாதிருந்தது. அவன் எந்த மகிமையையும் ஒரு போதும் எடுத்துக் கொள்ளவேயில்லை. அவர்களோ அவனை மேசியாவென்று அழைக்க முயற்சித்தனர். ஆனால் அவனோ, "நான் அவருடைய பாதரட்சைகளை அவிழ்க்கிறதற்கும் பாத்திரன் அல்ல" என்றான். 150. ஆனால் இயேசுவானவர் தோன்றினவுடனே, அவர் ஒரு அடையாளத்தை, ஒரு அக்கினி ஸ்தம்பத்தை உடைய வராயிருந்தார். அவருக்கு மேலே ஒரு ஒளி ஒரு புறாவைப் போல வந்து இறங்க, ஒரு சத்தம், "இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்று உரைத்தது. 151. கவனியுங்கள், யோவான் உடனடியாக, "அவர் பெருக வேண்டும், நான் சிறுக வேண்டும்" என்றார். அவன் சபையை கிறிஸ்துவுக்கு அளித்தான். ஆமென். 152. அது இந்த கடைசி நாட்களில் மீண்டும் நிகழும் என்று நமக்கு கூறப்பட்டிருக்கிறதே! ஒரு செய்தி வரப்போவதாக இருக்கிறது. அது மேசியாவை ஜனங்களுக்கு அறிமுகப் படுத்திவைக்கும். அது அப்பொழுது அவர்கள் திகைத்து நின்றதுபோல இவர்களும் திகைத்து நிற்குமளவிற்கான அத்தகைய ஒரு வழியில் இருக்கும். அவர் அதை வாக்குப்பண்ணினார். மத்தேயுவின் அடுத்த அதிகாரம் மல்கியாவைக் குறித்து நமக்கு கூறுகிறது. கவனியுங்கள். 153. அவர்கள் அதைக் குறித்து கேட்டனர். யோவானுடைய சுபாவம் எலியாவின் ஆவியில் அவனை அடையாளங்காட்டியது. இப்பொழுது இரண்டு தீர்க்கதரிசிகளையும் கவனியுங்கள். 154. இப்பொழுது எலியா இஸ்ரவேலரின் காலத்தில், ஒரு குழப்ப நேரத்தில் எழும்பின ஒரு மனிதனாயிருந்தான். 155. ஆகாப் இராஜாவாயிருந்தான். எல்லா ஸ்திரீகளும் யேசபேலை பின்பற்றி பரியாசம் செய்தனர். அநேகமாக இன்றைக்கு நாம் காண்கிற தலைமுடியை கத்தரித்துக் கொள்ளுதல் மற்றும் ஒவ்வொரு காரியமும் இதேவிதமாக இருந்திருக்கும். எல்லோருமே யேசபேலை பின்பற்றிச் சென்றிருந்தனர். போதகர்களோ, "அது அருமையாக இருக்கிறது, அவர்கள் தனியாகவே இருக்கட்டும். அவர்கள் அதை செய்யட்டும்" என்று எண்ணினர். 156. அந்த நேரத்தில் எலியா எனும் பெயர்கொண்ட ஒரு மனிதனை தேவன் வனாந்திரத்திலிருந்து எழும்பினார். அவன் எங்கிருந்து வந்தான் என்பதையும்கூட நாம் அறியோம். அவனை அடையாளங்காட்டும்படியாக எந்த வேத பாட பள்ளியிலும் அவன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆனால் தேவன் அவனை எழுப்பினார். அப்பொழுது அவன் அந்த எல்லா காரியங்களையும் கண்டனம் செய்தான். அவன் அந்த முழு ஸ்தாபன முறைமைகளையும் கண்டித்தான். 157. இன்றைக்கு அவன் காட்சியில் வருவானேயானால் அவன் நம்முடைய ஸ்தாபன அமைப்பு முறைமைகளையும் கூட கண்டனம் செய்வான். 158. அவன் ஒவ்வொரு யேசபேலையும் கண்டித்துரைத்தான். முடிவில் அவள் தீர்க்கதரிசியை வெட்டிப்போடவிருந்தாள். யோவானுக்கு நேர்ந்ததுபோலவே யேசபேல் அவனைக் கொல்லப்போவதாக இருந்தபோது அவன் ஓடிப்போய் புதர்செடியின் கீழே படுத்துக்கொண்டான். அவள் அவனை வெறுத்தாள். 159. மீண்டும் வனாந்திரத்திலிருந்து யோவான் வந்தபோது, அவன் ஒரு வனாந்திரப்பிரியனாய் விவாகம், விவாகரத்து மற்றும் மறுமணம் செய்தல் போன்ற காரியங்களைக் கொண்ட நவீன ஸ்திரீகளை சரிப்படுத்தும் ஒரு செய்தியோடு வந்து அந்த காரியங்களை துண்டு துண்டாக்கினான். அவன் எந்த வேதபாட பள்ளியிலிருந்தும் வரவில்லை. அவன் தேவனிடத்திலிருந்து வந்தான். அவன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு மனிதனாய் இருந்தான். அவன் நவீன ஸ்திரீகளுக்கு எதிராக அவர்களை கடிந்து கொண்டான். அவன் ஒருபோதும் எதனோடும் ஒப்புரவு ஆகாதவனாயிருந்தான். ஆனால் அவன் சாதாரணமாக, காலம் சமீபமாயிற்று, மேசியா பேசப்போகிறார் என்று கூறினான். அதை நோக்கிப் பாருங்கள். 160. இப்பொழுது இன்றைய இந்த நவீன தீர்க்கதரிசிகளில் சிலர் அவர்களுடைய யேசபேல்கள் தங்களுடைய முடிகளை வெட்டிக் கொள்ளவும், குட்டைக்கால் சட்டைகளை அணிந்து கொள்ளவும், புகைபிடிக்கவும், அவர்கள் விரும்புகிற எந்த காரியத்தையும் செய்துகொள்ளும்படி அனுமதித்து, அவர்களை எல்லா வழிகளிலும் வழிநடத்தும் இவர்களோடு எலியாவினுடைய முதலாம் வருகையின் நேரத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். மேலானது என்று கூற ஒன்றுமே கிடையாதே. அவள் அவனை விட்டு விட்டு மற்றொருவனை சேர்த்துக் கொள்வாள். மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளினால் அவர்களை சுற்றிச்சுற்றி வழிநடத்துகிறார்கள். அது ஒரு அவமானமாய் மனிதனின் கோட்பாடுகளாயிருக்கிறது. அவர்கள் அதை செய்வதினால் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தனமாக்கு கிறார்கள். ஏனென்றால், அவர்கள் சபைகளில் சேர்ந்து கொண்டு, கிறிஸ்தவர்களாய் இருப்பதாக இன்னமும் உரிமை கொண்டாடி தங்களுடைய உரிமைகளை பற்றிக்கொண்டு, அவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள் என்று கூறி தொடர்ந்து செல்கிறார்கள். அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் அவர்கள் அப்பொழுதும் செய்தனர். 161. ஆனால் நினைவிருக்கட்டும். அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் தேவன் மல்கியா 4-ல் மீண்டும் வார்த்தையை நிறைவேற்றுவதாக வாக்குப்பண்ணினார். அது உண்மை. இன்றைக்கு நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நோக்கிப் பாருங்கள். யோவானின் காலத்திலும் அது அவ்வண்ணமாகவே இருந்தது. அது மற்ற காலங்களிலும் அவ்வண்ணமாகவே இருந்தது. 162. இந்த எளிமையான வயோதிக நபரான ஆமோஸ் எழும்புவதை நோக்கிப் பாருங்கள். ஒரு எளிமையான வயோதிக நபர். அவன் எங்கிருந்து வந்தான் என்பதை நாம் அறியோம். அவன் ஒரு மந்தையை மேய்ப்பவனாயிருந்தான். தேவன் ஆடுகளின் மேய்ச்சல் வெளிகளிலும், மாடுகளின் மேய்ச்சல் வெளிகளிலும் அவனிடத்தில் பேசிக்கொண்டு அவனுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அவன் சமாரியாவிற்கு வந்தபோது, அவன் எழுந்து அந்நாளிலிருந்த அந்த குன்றின் மீது ஏறி, அங்கிருந்து கீழ்நோக்கிப் பார்த்தான். அப்பொழுது அந்த சூரியன் அவனுடைய வழுக்கைத் தலையில் பிரகாசித்தது. அவனுடைய மீசைகள் நரைத்திருக்க, அவனுடைய கண்கள் ஒன்றுசேர நோக்கியவாறு ஒளிர்ந்தன. அவனுடைய தேவ பக்தியான கண்களின் இமைகள் காண முடியாமல் படபடவென்று சிமிட்டின. அங்கு வந்து பார்வையிடுகின்ற சுற்றுலா பயணிகளின் காட்சிகளி னிமித்தமாக அல்ல, அந்த முழு பட்டணமும் பாவத்திற்குள்ளானதினிமித்தமாகவே அவ்வாறு செய்தன. 163. அடையாளம் கண்டுகொள்ளப்படாமலிருக்கிற இந்த எளிமையான நபர் யார்? ஆம், அது ஆமோஸ் தீர்க்கதரிசியாகும். அவன் இரண்டாம் யெரொபெயாமின் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தான். அவன் ஜனங்கள் எந்த காரியத்தையும் செய்யும்படி அனுமதித்த ஒரு சீர்கேடானவ னாயிருந்தான். அதில் இருந்த ஆசாரியர்கள் யாவரும் அவ்வாறே இருந்தனர். அவர்கள் அருமையான ஆடைகளை உடுத்தியிருந்தனர். அவர்களுடைய ஸ்திரீகளோ ஒழுக்கங் கெட்டவர்களாயிருந்தனர். அவர்கள் தாங்கள் விரும்புகிற எந்த விதத்திலும் உடை உடுத்தியிருந்தனர். சுற்றுலா பயணிகளோ எல்லா இடங்களிலும் அந்த அழகான ஸ்திரீகளையும், அவர்களுடைய மட்டுமீறிய நடத்தைகளையும் காண கூட்டம் கூட்டமாக திரண்டிருந்தனர். 164. அப்படியே மற்றொரு நவீன அமெரிக்காவும் உள்ளது. தேவனுடைய ஜனங்களாயிருக்க வேண்டியவர்கள் அவ்வாறாக உள்ளனரே. அதைப் பற்றி எவருமே ஒன்றுமே கூறுகிறதில்லை. அது ஜனங்களின் மேல் காணப்படுகின்ற ஒரு இரக்கமற்ற கெடுபிடியைப் போன்று தென்படுகிறது. 165. இப்பொழுது இன்றைக்கு பதினெட்டு வருடங்கள் கடந்து விட்டதே! என்னுடைய மகள் ரெபேக்காளுக்கு இன்றைக்கு பதினெட்டு வயதாகிறது. நான் பதினெட்டு வருடங்களாக இந்த தேசத்தினூடாக கடந்து சென்று இந்த காரியங்களை கண்டித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் வருடா வருடம் நான் திரும்பி வரும்போது, நான் முதன் முதலாக கண்டிக்கத் துவங்கினபோது இருந்ததைக் காட்டிலும் அதிகமான ஸ்திரீகள் தலைமுடியை வெட்டிக் கொண்டவர்களாகவே காணப் படுகின்றனர். 166. சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு மகத்தான, அருமையான, நன்கு அறியப்பட்ட, உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்டிருக்கிற மனிதனாக விளங்கும் புகழ்பெற்ற பெந்தேகோஸ்தே பிரசங்கியார் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது அவர்..."சகோதரன் பிரான்ஹாமே, நான் என்னுடைய கரங்களை உங்கள் மீது வைத்து உங்களுக்காக ஜெபிக்கட்டும்" என்றார். அதற்கு நானோ, "நான் சுகவீனமாக இல்லையே" என்றேன். 167. அப்பொழுது அவர், "ஆனாலும் ஏதோ காரியம் தவறாயிருக்கிறது" என்றார். மேலும், அவர், "சகோதரன் பிரான்ஹாம், நீர் உம்முடைய ஊழியத்தை பாழ்படுத்திக் கொள்வீர். எவருமே ஒத்துழைப்பு கொடுக்கப்போகிறதில்லை. பிரசங்கிமார்கள் உம்மோடு ஒத்துழைப்பு அளிக்காதிருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஏனென்றால் நீ அந்தவிதமாக ஸ்திரீகளை கடிந்து கொள்கிறீர்" என்றார். மேலும் அவர், "ஜனங்கள் உம்மை ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கிறார்களே" என்றார். அதற்கு நானோ, "நான் ஒருபோதும் என்னை தீர்க்கதரிசி என்று கூறினதில்லையே" என்றேன். 168. அப்பொழுது அவர், "ஆனால் அவர்கள் உம்மை தீர்க்கதரிசி என்று கருதுகிறார்களே" என்றார். மேலும் அவர், "நானும் அதே காரியத்தை விசுவாசிக்கிறேன்" என்றார். அதன் பின்னும் அவர், "நீர் வியாதியஸ்தருக்காக ஜெபியும். ஆனால் ஸ்திரீகளை அப்படியே தனியாக விட்டுவிடுங்கள். நீர் அவர்களுடைய உணர்வுகளை புண்படுத்துகிறீர்" என்றார். நான் "எப்படி?" என்று கேட்டேன். 169. அதற்கு அவர், "அவர்கள் வைத்திருக்கிற குட்டை தலைமுடி மற்றும் மற்ற காரியங்களைக் குறித்துப் பேசுகிறீர்" என்றார். அப்பொழுது நான், "அது தவறாகத்தானே இருக்கிறது" என்றேன். 170. வேதம், "தன்னுடைய தலைமுடியை வெட்டிக்கொள்கிற ஒரு ஸ்திரீயை அவளுடைய கணவன் அவளை விவாகரத்தில் தள்ளிவிட உரிமை உண்டு" என்று கூறியுள்ளது. முற்றிலும் சரியே. ஏனென்றால், "அவள் தன்னுடைய தலையை கனவீனப்படுத்துகிறாள்." அதைத்தான் வேதம் கூறியுள்ளது. இப்பொழுது நீங்கள் அதை விரும்புகிறீர்களா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் 1 கொரிந்தியரில் வேதம் அதைத் தான் கூறியுள்ளது. 171. [ஒலி நாடாவில் காலியிடம்] வெளிப்புறத்தில் தோல் தெரியுமளவிற்கு இறுக்கமான தோலாடை அணிகிறார்கள். அதன்பின்பு அவர்கள்-அவர்கள் வந்து, "ஏன்? திருவாளர் பிரான்ஹாம் அவர்களே, அந்தவிதமான ஆடைகளை மட்டுமே அவர்கள் விற்கிறார்கள்" என்கின்றனர். 172. ஆனால் அவர்கள் இன்னமும் துணிகளையும், தையல் இயந்திரங்களையும் விற்கிறார்களே. எனவே அதற்கு சாக்குப் போக்கே கிடையாது. ஆமிஷ் மற்றும் டன்கார்டு பிரிவின ஸ்திரீகள் இன்னமும் அவ்வறு துணிகளைத் தைத்து அணிகிறார்களே. நிச்சயமாகவே. [சபையார் கரங் கொட்டுகின்றனர்] என்ன சம்பவிக்கிறது? அவர்கள் அவைகளை வாங்கி அவ்விதமாக தைத்து தொடர்ந்து அணிந்து கொள்கிறார்களே. 173. ஒரு ஸ்திரீ, "திருவாளர் பிரான்ஹாம் அவர்களே, நான் குட்டைக் கால் சட்டைகளை அணிந்து கொள்கிறதில்லை. நான் அணிந்து கொள்கிறது...என்னவென்றால் முழங்கால் வரையுள்ள இறுக்கமான கால்சட்டைகளையே அணிந்து கொள்கிறேன், ஆம்" என்றாள். [ஒரு சகோதரன், "இரு சக்கர மிதிவண்டி ஓட்டும் ஆண்களும், பெண்களும் முழங்கால் வரை அணிந்து கொள்ளும் இறுக்கமான கால்சட்டை" என்கிறார்-ஆசி.] மேலும், "நான் அவைகளையே அணிந்து கொள்கிறேன்" என்றாள். 174. நான், "அது இன்னும் மோசமானவை" என்றேன். அதன் பின்னர், நான் "வேதம், 'ஒரு புருஷனுடைய உடையை ஒரு ஸ்திரீ அணிவது அருவருப்பாயிருக்கிறது' என்று கூறுகிறதே" என்றேன். இப்பொழுது இது இந்த ஐக்கிய நாடுகளில் என்ன விதமான ஒரு அருவருப்பான காட்சியாய் காணப்படுகிறது. பார்த்தீர்களா? அது உண்மை. 175. சகோதரியே, நான் உனக்கு ஒரு காரியத்தை கூறட்டும், நீ உன்னுடைய கணவனுக்கும் அல்லது உன்னுடைய ஆண் சிநேகிதனுக்கும் ஒரு களங்கமில்லாத லீலிபுஷ்பத்தைப் போல இருக்கலாம். ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளிலே நீ விபச்சாரம் செய்ததற்காக பதில் கூறப்போகிறாய். இயேசு, "ஒரு ஸ்திரீயை இச்சையாக பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று" என்று கூறியுள்ளாரே. எனவே அந்த பாவியானவன் உன்னை நோக்கிப் பார்த்திருப்பானேயானால், அப்பொழுது நீயே நியாயத்தீர்ப்பின் நாளில் பதில்கூற வேண்டியவளாயிருக்கிறாய். நீ அவனுக்கு உன்னையே கவர்ச்சிகரமான காட்சியளித்துவிட்டாய். நீயே அவனுடைய மனதிற்குகந்ததாய் காட்டுகிறாய். ஹூ-ஹூ. 176. ஒரு தேவ பக்தியுள்ள ஸ்திரீ ஏன் அதைப் போன்ற ஆடையை அணிய விரும்ப வேண்டும்? அப்படியிருந்தும் நீ அந்நிய பாஷையில் பேசி, தரையின் மேலும் கீழும் ஓடின காரணத்தால் நீ பரிசுத்த ஆவியை உடையவளாயிருக்கிறாய் என்று உரிமை கோருகிறாய். அதனை அஞ்ஞானிகளும், மேய்ச்சல் தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடோடி இனத்தவர்களும் செய்வதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் பரிசுத்த ஆவியோ தூய்மையானதாகவும், பரிசுத்தமானதாகவும், கறை படாததாயும் இருக்கிறது. நிச்சயமாகவே. 177. இந்த மனிதன், "நீர்...நீர் ஒரு தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டும் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். அப்படியிருக்க அவர்கள் எப்படி மகத்தான ஆவிக்குரிய வரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், எப்படி தேவனுக்கான காரியங்களை செய்ய வேண்டும் என்பதையும் நீர் ஏன் போதிக்கக் கூடாது? நீர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால், நீர் ஏன் அவர்களுக்கு போதிக்கக்கூடாது?" என்று கேட்டான். 178. அதற்கு நான், "அவர்கள் தங்களுடைய மொழியின் முதல் எழுத்துக்களாகிய A B C-யைக்கூட கற்றுக் கொள்ளாதிருக் கையில், நான் எப்படி அவர்களுக்கு குறிக்கணக்கியலை கற்றுத்தர முடியும்?" என்று கேட்டேன். A B C என்ற ஆங்கில அடிப்படை எழுத்துகளின் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? (Always Believe Christ) "எப்பொழுதும் கிறிஸ்துவை விசுவாசிப்பது என்பதாகும்." ஹூ-ஹூ. நீங்கள் அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? பாருங்கள், நீங்கள் இங்கே கீழே உள்ள வழியில் துவங்குவதற்குப் பதிலாக அங்கே மேலேயுள்ள வழியில் துவங்க விரும்புகிறீர்கள். 179. தேவன் தம்முடைய சபையை இயேசு கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின் மேல் கட்டுவார். அது வேதமாயிருக்கிறது. அதற்கு புறம்பேயுள்ள மற்ற எல்லா அஸ்திபாரங்களும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணல்களாகவே இருக்கின்றன. தேவன் மாறுகிறதில்லை. அவருடைய சுபாவமும் மாறுகிறதில்லை. 180. அவர் ஸ்திரீயை புருஷனிலிருந்து வித்தியாசமாகவும், புருஷனை ஸ்திரீயிலிருந்து வித்தியாசமாகவுமே உண்டாக்கினார். அவர் அவர்களை வித்தியாசமாகவே உடுத்தி, அந்த விதமாகவே அவர்கள் தரித்திருக்கும்படி விரும்புகிறார். புரிகின்றதா? ஆனால் ஸ்திரீகளோ புருஷனைப் போல காணப்படவும், புருஷன் ஸ்திரீயைப் போல காணப்படவும் விரும்புகின்றனர். ஓ! என்னே! எப்பேர்ப்பட்ட ஒரு தாறு மாறாக்குதல்! அது...முழு காரியமும், அது ஜனங்களின் மேல் இறுகபற்றிக் கொண்டதுபோல் காணப்படுகிறது. எனவே உங்களால் அதை மாற்றமுடியாது. அது ஒரு பெரிய பூதம்போல், ஒரு பெரிய கருமை நிறம் போல் காணப்படுகிறது. நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் ஆவியில் புரிந்து கொண்டால் நலமாயிருக்கும். ஒரு பூதம் அவர்களைப் பற்றி பிடித்துள்ளது. அவர்களால்-அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாது. அளவுக்கதிகமான நவீன திரைப்பட காரியங்கள், அளவுக்கதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இன்னும் அளவுக்கதிகமான மற்ற அர்த்தமற்ற காரியங்களும் அவர்களைப் பிடித்துள்ளன. ஒவ்வொரு காரியத்திலும் நாம் கறைப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஆகையால், "தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் நிமித்தமாக கர்த்தர் காரியத்தை சீக்கிரமாக நிறைவேற்றி முடிக்காவிட்டால் ஒருவனும் தப்பிப் போவதில்லை" என்று கூறப்பட்டிருப்பதில் வியப்பொன்று மில்லையே. 181. நீங்களோ, "நான் அதை இதற்கு முன்பு அறிந்ததேயில்லை" என்று கூறினீர்கள். நல்லது, ஆயினும் இப்பொழுது நீங்கள், இப்பொழுதிலிருந்து அறிந்திருக்கிறீர்கள், புரிகின்றதா? அது...நான் அதை நிறுத்திக்கொள்வது மேலானது. நாம் திரும்பிச் செல்வோமாக. கவனியுங்கள். 182. யோவான் ஒரு அடையாளமாயிருந்தான். தேவன் முதன் முறை அதை செய்தவிதமாகவே, அதேவிதமாகவே அவர் அதை மீண்டும் செய்வார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் அதை வாக்குப்பண்ணியுள்ளார். இப்பொழுது தேவன் எந்த நேரத்திலும் அப்படிப்பட்ட ஒரு காரியத்திற்காக ஒரு கூட்ட ஜனங்களை ஒருபோதும் உபயோகித்ததேயில்லை. 183. ஒரு சமயம் ஆகாப் என்னும் பெயர் கொண்ட ஒரு பெரிய மனிதனைக் கொண்ட ஒரு கூட்டம் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் தனக்கு...அவன் தனக்கு இஸ்ரவேலின் நானூறு தீர்க்கதரிசிகளை உடையவனா யிருந்தான். இப்பொழுது, அவர்கள் அஞ்ஞான தீர்க்கதரிசிகளாய் இருக்கவில்லை. இஸ்ரவேலின் நானூறு தீர்க்கதரிசிகள். அவர்கள் யாவருமே தங்களுடைய பட்டத்தையும், மற்ற எல்லா காரியங்களையும் உடையவர் களாயும், ஒரு பெரிய வேதபாட பள்ளியையும் உடையவர்களாயிருந்தனர். 184. அப்பொழுது யோசபாத் எனும் பெயர் கொண்ட தேவ பக்தியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன் யூதாவின் இராஜாவாயிருந்தான். அப்பொழுது அவன் அங்கு வந்தான். அங்கே தான் ஒரு விசுவாசி அவிசுவாசியோடு கலந்ததாயுள்ளது. காரியங்கள் தவறாய் போயின. 185. அப்பொழுது அவன், "கிலேயாத்திலுள்ள ராமோத்" என்றான். இப்பொழுது இதை கவனியுங்கள், அது எவ்வளவு உண்மையாயிருக்க முடியும். மேலும் அவன், "அங்கே உள்ள கிலேயாத்திலுள்ள ராமோத் நமக்கு சொந்தமானது. அங்கே உள்ள அந்த தேசத்தின் ஒரு பகுதி நம்முடையதாயிருக்கிறது" என்றான். யோசுவா நிலங்களை பங்கிடுகையில் அதை இஸ்ரவேலருக்கு கொடுத்திருந்தான். ஆனால் பெலிஸ்தி யர்களும், அஞ்ஞானிகளும் வந்து அதை அவர்களிடத்தில் இருந்து எடுத்துக் கொண்டனர். ஆனால் இவனோ, "அது நமக்கு உரியதாயிருக்கிறது" என்றான். 186. இப்பொழுது எப்படி என்பதை கவனியுங்கள். அடிப்படையில் ஜனங்களால் சரியாயிருக்க முடியும். ஆயினும் அதை தவறவிடுகிறார்கள். உண்மையிலேயே அந்த காரியம் இஸ்ரவேலருக்கு சொந்தமானதாய் இருந்தது. ஆனால் சகோதரனே, தேவனுடைய எல்லா வாக்குத்தத்தங்களுமே, "அவர்கள் கர்த்தருக்கு முன்பாக நடப்பார்களேயானால்" என்ற நிபந்தனைகளின் பேரிலேயே இருக்கின்றன. பாருங்கள். 187. இப்பொழுது இங்கே பாருங்கள், அவன், "நீர் என்னோடு வருவீரா என்றும், அந்த தேசத்தை திரும்ப எடுத்துக் கொள்ள எனக்கு உதவி செய்வீரா என்றும், இஸ்ரவேலருக்கு சொந்தமான கோதுமைகளினால் அங்கே உள்ள பெலிஸ்திய பிள்ளைகள் தங்களுடைய வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார்களே?" என்றும் கேட்டிருந்தான். அது வேதப்பிரகாரமாக உண்மையே. எனவே அவன், "போய் அவைகளைக் கைப்பற்ற எனக்கு உதவி செய்யும்" என்றான். 188. அதற்கு இவன், "நல்லது, என்னே..." என்றான். அங்கேதான் அவன் ஒரு கண்மூடித்தனமான தவறை செய்தான். "என்னுடைய இரதங்கள் உம்முடைய இரதங்கள், என்னுடைய மனிதர் உம்முடைய மனிதரைப் போன்றவர்களே. எனவே நான் உம்மோடு செல்வேன்" என்றான். 189. அப்பொழுது யோசபாத் சிந்திக்கத் துவங்கினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவன், "நாம் போவதற்கு முன்பு இதைக் குறித்து கர்த்தரிடத்தில் கலந்தாலோசிக்க வேண்டியதில்லையா?" என்று கேட்டான். 190. அதற்கு ஆகாப், "ஓ, உண்மைதான், நிச்சயமாகவே. ஹூம், ஹூம், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், நான்-நான் அதைக் குறித்த சிந்தனையை உடையவனாயிருக்க வேண்டுமே" என்றான். அப்பொழுது அவன், "எங்கேயாகிலும் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறானா?" என்று கேட்டான். 191. அதற்கு இவன், "ஓ நிச்சயமாகவே, நான்-நான் இங்கே அவர்களுடைய வேதபாடசாலை ஒன்றை-ஒன்றை வைத்திருக்கிறேன். அது நீர் எப்போதும் பார்த்ததிலேயே மிகச் சிறந்ததாகும். அவர்கள் எல்லோரும் அருமையான ஆடைகளை அணிகிறார்கள். அவர்கள் உயரிய மெருகேற்றப்பட்ட வேத பண்டிதர்களாயிருக்கிறார்கள், நான் அவர்களை மிகவும் துல்லியமாக கல்வி பயிலச் செய்திருக்கிறேன். நாம் போய் அவர்களை அழைத்து வருவோம்" என்றான். 192. ஆகையால் அவர்கள் அங்கே கீழே சென்றனர். அவர்கள் யாவரும் ஒன்றாகக் கூடினர். அவர்கள் மாய்மாலக்காரர் களாயிருக்கவில்லை. அவர்கள் ஜெபித்தனர், ஜெபித்தனர், அவர்கள் ஒரு தரிசனம் காணும்வரை ஜெபித்தனர். 193. அதன் பின்னரே அவர்கள் மேலே வந்தனர். அவர்களில் ஒருவன் தனக்கு இரும்பினால் இரண்டு பெரிய கொம்புகளை உண்டு பண்ணினான். அதன் பின்னர், "நீர் பெலிஸ்தியரை இதினால் நெருக்கப் போகிறீர் இல்லை அசீரியரை தேசத்தைவிட்டு துரத்தப்போகிறீர்" என்றான். மேலும் அவன், "கர்த்தர் உரைக்கிறதாவது, போம், கர்த்தர் உம்மோடு இருக்கிறார்" என்றான். அதன் பின்னர் அவர்களில் ஒவ்வொருவனும் ஏக மனதோடு ஆவிக்குள்ளாகினர். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளோ, "போம், கர்த்தர் உம்மோடு இருக்கிறார்" என்றனர். ("அது வேத பிரகாரமானதா யிருக்கிறதா?" என்று நீங்கள் கேட்கிறீர்களா?) "தேவன் இந்த சுதந்திரத்தை அந்த ஜனங்களுக்கு கொடுத்தார். ஆனால் அதை சத்துரு இப்பொழுது உடையவனாயிருக்கிறான். நீங்கள் அதை கைப்பற்றும்படி செல்ல உரிமை உண்டு." இப்பொழுது பெந்தேகொஸ்தேக்களே, நீங்கள் இங்கு ஒரு பாடத்தை புரிந்து கொள்ளும்படி நான் விரும்புகிறேன். 194. ஆனால் யோசபாத் தேவபக்தியுள்ள ஒரு மனிதனாயிருந்தான். எனவே அவன், "ஆயினும் ஏதோ ஒரு சிறு தவறு உள்ளதே" என்றான். மேலும் அவன், "இன்னும் உங்களிடத்தில் வேறு யாராகிலும் உண்டா?" என்று கேட்டான். 195. அவன், "இங்கே நிற்கிற நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நானூறு தீர்க்கதரிசிகளுக்குப் பிறகு இன்னும் யாராவது ஒருவர் உண்டா?" என்று கேட்டான். அவர்கள் அத்தனை பேர்களுமே இங்கே அடித்தளத்தில் இருந்தவர்களாயிருக்கிறார்கள். "அப்பொழுது அவர்கள் ஏகமனதாய் நின்று, 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று கூறினர். திரும்பிப்போய், 'யோசுவா அந்த தேசத்தை எங்களுக்குக் கொடுத்தான். அது எங்களுடையதாயிருக்கிறது. எனவே போய் அதைக் கைப்பற்றுவோம்' என்று கூறுங்கள்" என்றனர். 196. ஆனால் யோசபாத்தோ, "வேறொருவன் இருக்கிறானா?" என்று கேட்டான். அவன், "கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி இன்னும் வேறு யாராவது ஒருவன் இருக்கிறானா?" என்று கேட்டான். 197. அதற்கு அவன், "ஓ, இன்னும் ஒருவன் இருக்கிறான், ஆனால் நான் அவனை வெறுக்கிறேன்" என்றான். ஹூ-ஹூ, ஹீ-ஹீ. மேலும் தொடர்ந்து, "அவன் இம்லாவின் குமாரனாகிய மிகாயா" என்றான். அது மட்டுமின்றி, "நான் அவனை வெறுக்கிறேன், அவன் எப்பொழுதுமே என்னைக் குறித்து பொல்லாங்கான காரியங்களையே கூறிக்கொண்டிருக்கிறான்" என்றான். அதற்கு இவன், "இராஜாவே அவ்வாறு கூறவேண்டாம். போய் அவனை அழைத்து வாருங்கள்" என்றான். 198. அப்பொழுது அவர்கள் அங்கே சில தூதுவர்களை அனுப்பினர், அவர்களில் சிலர், "இப்பொழுது மிகாயாவே, நான் உனக்கு ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன். இப்பொழுது அவர்கள் உம்மை விலக்கிவிட்டனர். அண்மையில் ஐக்கியத்திலிருந்தும் உம்மை விலக்கிவிட்டனர். ஏனென்றால் நீர் எப்பொழுதும் ஜனங்களண்டை மோசமான காரியங்களையே கூறிக்கொண்டிருக்கிறீர். இப்பொழுது நீர் உம்முடைய ஐக்கிய அட்டையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நீர் அவர்கள் கூறுகிற அதே காரியத்தை கூறும். ஓ, அப்பொழுது அவர்கள் உம்மை பொறுப்பில் அமர்த்திக் கொள்வார்கள்" என்றனர். 199. ஆனால் அவன் உண்மையாகவே ஒரு தீர்க்கதரிசியாக இருக்க நேர்ந்தது. அப்பொழுது அவன், "தேவன் என் வாயில் அருளுவதை மாத்திரமே நான் உரைப்பேன் என்று தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்" என்றான். ஓ! தேவன் அந்த மனிதனை ஆசீர்வதிப்பாராக. அப்பொழுது அவன், "இன்றிரவு வரை காத்திருங்கள், கர்த்தர் என்னிடத்தில் என்ன சொல்கிறார் என்று நான் பார்ப்பேன்" என்றான். 200. அடுத்த நாள் காலை, "யுத்தத்திற்கு போங்கள், ஆனால் இஸ்ரவேலரெல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் மலைகளிலே சிதறடிக்கப்பட்டதைக் கண்டேன்" என்றான். அப்பொழுது அவன் தன்னுடைய தரிசனத்தை எடுத்து, எலியா என்ன கூறினான் என்பதோடும், ஆகாபிற்கு என்ன சம்பவித்திருந்தது என்பதோடும், அதை ஒப்பிட்டுப் பார்த்தான். சபிக்கப்பட்டிருந்தவனை எப்படி அவன் ஆசீர்வதிக்க முடியும்? எவ்வளவாய்...இருந்தாலும் கவலையில்லை... 201. நாம் ஒரு தேவபக்தியுள்ள தேசமாயிருக்கிறோம். பெந்தேகொஸ்தே சபை, பாப்டிஸ்டு, மெத்தோடிஸ்டு போன்றவைகளும் ஒரு கிறிஸ்தவ சபையாகத்தான் இருக்கின்றன. ஆனால் தேவன் சபித்திருக்கிறதை நீர் எப்படி ஆசீர்வதிக்க முடியும்? நீங்களோ, "நான்-நான் இதில் சேர்ந்துவிட்டேன். நான் இதை செய்தேன்" என்று கூறினாலும் எனக்கு கவலையில்லை. அதற்கு அதனோடு ஒரு காரியமும் சம்பந்தமேயில்லை. நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை நோக்கிப் பாருங்கள். பெந்தேகோஸ்தேக்கள் எவ்வாறு தடைகளை நீங்கிவிட்டனர் என்பதை நோக்கிப் பாருங்கள், வழக்கமாக நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்பதை நோக்கிப் பாருங்கள். இப்பொழுது நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதையும் நோக்கிப் பாருங்கள். கண்கள், கண்கள் குருடாக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லையே. 202. அப்பொழுது அவன், ஆகாப்...இந்த ஆசாரியன் அவனை வாயில் அடித்தான். மேலும் அவன், "அவனை சிறையில் வையுங்கள்" என்றான். ஆகாப், "அங்கே பின்னால் உள்ள உட்காவலறையில் அவனை வையுங்கள். நான் சமாதானத்தோடு திரும்பி வரும்போது, நான் இந்த நபரை பார்த்துக் கொள்வேன்" என்றான். 203. அதற்கு மிகாயா, "நீ திரும்பி வருவாயானால், தேவன் என்னிடத்தில் பேசியிருக்கவேயில்லை" என்றான். ஹூ-ஹூ? பார்த்தீர்களா? அங்கே ஒரு தீர்க்கதரிசி இருந்தான். அங்கே ஒரு அடையாளம் இருந்தது. அங்கே அவனுடைய சத்தம் இருந்தது. எனவே அதற்கு கீழ்ப்படிய தவறினபோது, அது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தது. 204. இன்றைக்கு பரிசுத்த ஆவியே நம்முடைய தீர்க்கதரிசியாய் இருக்கிறார். அவருடைய சத்தத்தைக் கேட்க தவறுகிறீர்களா? அவர் இந்த காரியங்களை கூறுவார் என்று வேதத்தில் அவர் அடையாளங் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கிறாரே! 205. தேவன் இந்த ஒரு மனிதனோடேத்தான் தொடர்பு கொண்டார். இது, தேவன் குழுக்களோடு ஒருபோதும் தொடர்பு கொள்கிறதில்லை. அவர் ஒரு மனிதனோடு தொடர்பு கொள்கிறார். எலியா ஒரு குழுவாயிருக்கவில்லை. யோவான் ஒரு குழுவாயிருக்கவில்லை. அவர்கள் ஒரு குழுவாகவோ அல்லது ஒரு ஸ்தாபனமாகவோ இருக்கவில்லை. அவர்களில் ஒருவனும் அவ்வாறிருக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவருமே அப்படிப்பட்ட காரியத்தை கடிந்து கொண்டனர். அது உண்மையே. யோவான், "ஆபிரகாம் எங்களுக்கு தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவரா யிருக்கிறார்" என்றான். 206. கடைசி கால அடையாளம் கடைசி கால சத்தத்தை உடையதாயிருக்கும். கடைசி கால அடையாளம் வேதத்தில் முன்னுரைக்கப்பட்டிருக்கிறபடியே இருக்கும். கடைசி கால சத்தம் கடைசி கால அடையாளத்தையே பின்தொடருகிறது. அது சரியாக வேத வாக்கியத்தில் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டிருக்கும். அது வாக்குப்பண்ணப்பட்டிருக்கிற வேத வாக்கியமாயிருக்கும். 207. இப்பொழுது கடைசி கால அடையாளம் என்னவாயிருக்கும் என்றும், அது சோதோமில் இருந்தது போன்ற ஒரு வாக்குத்தத்தமாய் இருக்கும் என்பதையும் நாம் லூக்கா 17-ல் வாசித்திருக்கிறோம். நாம் இயற்கையாகவே சோதோமை உடையவர்களாயிருக்கிறோம். அப்படியிருக்க நாம் ஏன் இங்குள்ள ஆவிக்குரிய அடையாளத்தை விசுவாசிக்க முடியவில்லை. லூக்கா 17 அடையாளமாயிருக்கிறதையும், மல்கியா 4 சத்தமாயிருக்கிறதையும் குறித்த வேத வாக்கியங் களையும் கூட உங்களால் காணமுடிந்தால் நலமாயிருக்கும். அடையாளமானது இருதயத்தில் இரகசியங்களை அறிய தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டதை போன்றிருந்தது. மல்கியா 4ன் சத்தம் ஜனங்களை அவர்களுடைய பிரமாணங்களிலிருந்து பிதாக்களின் விசுவாசத்தை திருப்பிக் கொண்டிருக்கிற தாயிருந்தது. அதுவே அடையாளமாகும். 208. என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நான் முடிக்கப்போகிறேன். நிச்சயமாகவே அடையாளங்கள் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் சத்தமோ, ஓ, இல்லை. சத்தம் அந்த அடையாளத்தை பின் தொடருகிறது. ஆனால் அவர்கள் அதனோடு எதையும் செய்ய விரும்புகிறதில்லை. ஆம். 209. வியாதியஸ்தரை சுகப்படுத்தும்படியான இயேசுவின் அடையாளத்தை மேசியாவாக, அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஓர் நாள் அவர், "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்றார். 210. ஓ, என்னே, அந்த சத்தம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அப்பொழுது அவர்கள், "நீ உன்னை தேவனோடு சமமாக்கிக் கொள்கிறாய்" என்றனர். அதற்கு அவர், "நான் தேவனுடைய குமாரனாயிருக்கிறேன்" என்றார். 211. மேலும், "ஓ, என்னே எப்படி தேவன் ஒரு குமாரனை உடையவராய் இருக்க முடியும்? பாருங்கள்? தேவன் ஒரு குமாரனை உடையவராயிருக்கிறார் என்பது நம்ப முடியாததாயுள்ளதே!" என்றனர். 212. ஆனால் நீங்கள் பாருங்கள். அவர்கள் அந்த அடையாளத்தையும், வியாதியஸ்தரை சுகப்படுத்த முடியும் என்பதையும், ஓ, அது அற்புதமாயிருந்தது என்பதையும், அது சிறந்ததாயிருந்தது என்பதையும் விசுவாசித்தனர். ஆனால் சத்தத்திற்கு வரும்போது, அவர்கள் அந்த சத்தத்தை விசுவாசிக்க விரும்பவில்லை. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அதை வெளியே தள்ளிவிட்டனர். 213. என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவருக்கு அதே காரியம் செய்யப்படும் என்று வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில் வேதம் நமக்கு கூறுகிறது. அவர் சபையின் புறம்பே இருந்தார். அது வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையா யிருக்கிறது. அவர் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையா யிருந்தார். அவர் இன்னமும் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகவே இருக்கிறார். 214. உங்களால் லூக்காவில் உள்ள சோதோமின் அடையாளத்தை விசுவாசிக்க முடியுமென்றால், உங்களால் அதை விசுவாசிக்க முடியுமென்றால், பின்னை ஏன் மல்கியா 4-ன் சத்தத்தை விசுவாசிக்க முடியாது? பாருங்கள், நீங்கள் ஏன் விசுவாசிக்க முடியாது? அது ரூபகாரப்படுத்தப்பட முடியும். அது செய்யப்படக் கூடிய ஒரே வழி...அடையாளம் நிரூபிக்கப்பட முடியும். ஆனால் நீங்கள் அந்த சத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். 215. மோசே ஒரு ஆவிக்குரிய அடையாளத்தைப் பெற்று பிதாக்களின் வாக்குத்தத்தத்திற்கு ஜனங்களை திரும்ப அழைக்கும்படிக்கு அங்கே செல்ல மாம்சப்பிரகாரமாக கட்டளையிடப்பட்டான். 216. மல்கியா 4 ஜனங்களை திருப்புவதாயிருக்கிறது, "பிதாக்களின் விசுவாசத்திற்கு திருப்புவதாயிருக்கிறது." ஓ, குருடரே, சிதறடிக்கப்பட்டோரே, உங்களுடைய சொந்தத்திற்கு திரும்புங்கள். 217. முடிக்கும்போது, நான் இந்த கடைசி கருத்தினை, இதை கூறவுள்ளேன். தீர்க்கதரிசியோ, "சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்" என்றான். பாருங்கள், அவன், "பகல் அல்லது இரவு என்று அழைக்கப்பட முடியாத ஒரு நாள் உண்டாயிருக்கும்" என்றான். இப்பொழுது கவனியுங்கள். நான் முடிக்கப்போகிறேன். ஒரு நாள் உண்டு...இது ஆழமாக பதியட்டும். இன்றிரவு இந்த அரங்கத்தில், இந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருடைய இருதயத்திலும் தேவன் இதை பதிய வைப்பாராக. தீர்க்கதரிசியோ, "பகல் என்றோ அல்லது இரவு என்றோ அழைக்கப்பட முடியாத ஒரு நாள் உண்டாயிருக்கும். அது மப்பும், மழைக்கால, மந்தாரமுமான நாளாயிருக்கும்" என்றும், ஆனாலும், "சாயாங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாயிருக்கும்" என்றான். 218. இப்பொழுது நினைவிருக்கட்டும். எப்பொழுதும் கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்கில் மறைகிறது. நாகரீகம் சூரியனை பின்தொடர்ந்திருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள். கவனியுங்கள். கிழக்கில் உதிக்கிற அதே சூரியனே மேற்கில் மறைகிற சூரியனாயிருக்கிறது. இப்பொழுது நாகரீகமானது கிழக்கும் மேற்கும் சந்தித்திருக்குமட்டாய் சரியாக சூரியனோடு பயணம் செய்திருக்கிறது. நாம் மேற்கு கரையில் இருக்கிறோம். கிழக்கும் மேற்குமே. 219. நினைவிருக்கட்டும், சுவிசேஷமும் அதே விதமாகவே பயணம் செய்திருக்கிறது. அது கிழக்கில் எழும்பினது. இயேசு கிறிஸ்துவின் வருகை, குமாரன், (Son) சூரியன் அல்ல (Sun), குமாரன், தேவ குமாரன் கிழக்கத்திய ஜனங்களுக்கு கிழக்கில் எழும்பினார். 220. இப்பொழுது ஜனங்கள் சபையில் சேர்த்து கொண்டு, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, "நல்லது, நாங்கள் ஒரு சபையை உடையவர்களாயிருப்போம். நாங்கள் இதைக் கட்டுவோம். நாங்கள் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டுவோம். நாங்கள் கல்வி பயிலச் செய்வோம். நாங்கள் ஒரு வேத பாடபள்ளியை பெற்றுக்கொள்வோம் என்பதை காணுவதற்கு போதிய வெளிச்சமுடைய ஒரு நாளாகவே இருந்து வருகிறது" என்கின்றனர். அவர்கள் அதை செய்யவே போதிய வெளிச்சமுடையவர்களாயிருக்கிறார்கள். 221. ஆனால் நினைவிருக்கட்டும், வேதம் கூறியுள்ளது. வேதத்தில் கர்த்தருடைய தீர்க்கதரிசியானவன், "கிழக்கில் உதித்த அதே சூரியனே மேற்கில் சாயங்கால நேரத்தில் மீண்டும் பிரகாசிக்கும். சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்" என்று கூறினது கர்த்தர் உரைக்கிறதாகவே இருக்கிறது. 222. அவர் என்ன செய்வார்? அவர் சரியாக லூக்கா 17-ம் அதிகாரத்தில் அவர் கூறனதையே செய்கிறார். "கடைசி நேரத்தில் மனுஷகுமாரன் கிழக்கில் இருந்தவிதமாகவே, அதே குமாரனாக பிரகாசித்து, அதே வல்லமையில், அதே பரிசுத்த ஆவியானவராய் அதே காரியத்தை செய்யும் மாறாதவராய் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்." 223. அதே சூரியன் பயணம் செய்திருக்கிறது. அதே குமாரன் பயணம் செய்திருக்கிறார். கிழக்கினூடாக பவுலிலிருந்து வந்து, ஜெர்மனிக்குள்ளாக தாவி மார்டின் லூதர் மீது சென்று மீண்டும் அவருடைய அடுத்த இழுப்பின் மேல் தாவினது. அதன் பின்னர் இங்கிலாந்தில் ஜான் வெஸ்லியண்டைக்கு வந்து, பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலினூடாக ஐக்கிய நாடுகளுக்கு, பெந்தேகொஸ்தேவினிடத்திற்கு வந்தது. இப்பொழுது பெந்தே கொஸ்தேதானே சீர்கேடடைந்திருக்கிறது. நாமோ கரையில் இருக்கிறோம். 224. அவர்கள் ஒவ்வொருவரும் ஆதியிலே செய்தது போலவே ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். தேவன் சபித்த ஸ்தாபனத்தையே ஏற்படுத்திக் கொண்டனர். பெந்தேகொஸ் தேக்களும் மற்ற எல்லோருமே அதை செய்தனர். 225. ஆனால் அவர், "சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும். சாயங்காலத்தில் ஒரு அடையாளம் எழும்புவதாய் இருக்கும்" என்றார். நண்பர்களே இதை தவறவிடாதீர்கள். இதை தவறவிட வேண்டாம். இப்பொழுது அதே குமாரன் அதே வெளிச்சத்தைக் கொடுப்பார். அதே சூரியனே அதே வெளிச்சத்தைக் கொடுக்கிறது. அதே குமாரன் அதே குமாரனுடைய வெளிச்சத்தைக் கொடுப்பார். 226. இப்பொழுது அது என்னுடைய கருத்து அல்ல. வேதம் அதை கூறுகிறது என்று அறிந்தவர்களாய் இங்குள்ள ஒவ்வொரு வரும் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். [சபையோர், "ஆமென்" என்கிறார்கள்] அது முற்றிலும் சரியே. 227. இப்பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடியும். அது உங்களைப் பொறுத்ததாயிருக்கிறது. தேவ குமாரனை விசுவாசியுங்கள். இயேசு கிறிஸ்து மரித்துவிடவில்லை. அவர் உயிரோடிருக்கிறார். அவர் தாழ்மையான நிலையில் தாழ்மையாக இருக்கிறார். அவர் எப்பொழுதுமே அந்த விதமாகவே வாசஞ்செய்தார். மேலே போகும் வழி கீழேயுள்ளது. உங்களை தாழ்த்துங்கள். உங்களுடைய விரைப்பான கருத்துகளை விலக்கிவிட்டு, கர்த்தராகிய இயேசுவை விசுவாசியுங்கள். அடையாளத்தைப் பார்த்து, அதன் பின்னர் சத்தத்தை விசுவாசியுங்கள். ஓ, சிதறடிக்கப்பட்டோரே, உங்களுடைய சொந்தத்திற்கே திரும்புங்கள். நம்முடைய தலையை நாம் தாழ்த்துவோமாக. 228. மோசேயோடு இருந்ததுபோன்று கரத்தில் இருந்த முதலாம் அடையாளத்தின் சத்தத்ததை அவர்கள் விசுவாசிக்க வில்லையென்றால், அப்பொழுது இரண்டாம் அடையாளத்தை விசுவாசிப்பார்கள். ஆகையால் அவர்கள் இந்த அடையாளத்தை விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது தண்ணீரை சமுத்திரத்திலிருந்து அல்லது கடலிலிருந்து எடுத்து (தண்ணீர் ஜீவனுக்கு பாவனையாக உள்ளது) அதை தரையிலே ஊற்று, அப்பொழுது அது இரத்தமாகும். 229. பரலோகப் பிதாவே, இது உண்மையாகவே இப்பொழுது காலதாமதமாயிருக்கிறது. ஆனால் சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும் என்று நீர் வாக்குரைத்தீர். ஜனங்கள் அதன் பேரில் தியானிக்கும்போதும், வார்த்தையின் மூலம் அதை ஆய்ந்து படிக்கும்போதும், எங்களுடைய சுவிசேஷ சத்தமானது அவர்களுடைய இருதயங்களுக்குள் ஆழமாக பதிவதாக. 230. கர்த்தாவே, இந்த கூட்டத்தினரை ஆசீர்வதியும். இந்த ஜனங்களை ஆசீர்வதியும். இந்த செய்தியானது இந்த ஜனங்களை சென்றடையும்போது, இந்த செய்தியை காணாதபடி சாத்தானே குருடாக்கியிருந்தான் என்பதை அறிந்தவர்களாய் இங்கே பசியோடும், நெருக்கப்பட்டும், உதைத்துத்தள்ளப்பட்டிருக்கிற ஏழையான பிள்ளைகளாய் இங்கே அமர்ந்திருப்பவர்களைப் பாரும். இன்றிரவு அவர்கள் ஏகமனதோடு இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பார்களாக. அவர் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளார் என்று இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பார்களாக. அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசிப்பார்களாக. 231. நீர், "அவர்கள் நினையாத நேரத்திலே மனுஷகுமாரன் வருவார்" என்றீர். 232. சபையானது அதிக பணத்தையும், இலட்சக்கணக்கான டாலர்களைக் கொண்ட கட்டிடங்களையும் தன்னுடைய பெறுமானமாகப் பெற்றிருக்கிறது. பிதாவே, இன்றைக்கு அவர்கள் இந்த பெரிய சவகிடங்குகளில் அமர்ந்து கொண்டு உலகத்தைப் போன்றிருக்க பாவித்து, "தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருக்க" முயற்சிப்பதைப் பார்க்கிலும், முற்காலத்தில் இரட்சண்ய சேனை கூடாரத்தைப் போன்று மூலையில் பழைய முரசை வைத்துக் கொண்டு, தங்களுடைய கரத்தில் ஒரு தொப்பியோடும், எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு கஞ்சிரா எனும் கருவியை இசைத்துக் கொண்டிருக் கிறவர்களாய் அவர்கள் இருப்பதே மேலானதாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். 233. கர்த்தாவே, இன்றிரவு இன்னும் ஒரு விசை இதை அருளும் கர்த்தாவே, சிம்சோன், "கர்த்தாவே, இன்னும் ஒரு விசை, இன்னும் ஒரு விசை" என்று கதறினதுபோன்றே கதறுகிறேன். நீரே கிறிஸ்து என்றும், தேவனுடைய குமாரன் என்றும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் அறியப்படுவதாக. அவர்கள் இந்த அடையாளத்தை காணும்படியாகவும், அவர்கள் அந்த சத்தத்தை விசுவாசிக்கும்படியாகவும் எங்கள் மத்தியில் உம்மை அடையாளங்காட்டுவீராக. நான் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 234. நாம் துரிதமாக ஒரு ஜெபவரிசையை அழைக்கப் போகிறோம். இது உண்மையிலேயே இப்பொழுது நாம் கலைந்து செல்ல வேண்டியிருந்த நேரமாயிருந்ததை நான் கண்டேன். ஆனாலும் நாம் ஒரு ஜெப வரிசையை வெறுமனே, ஒரு சிறு ஜெப வரிசையை ஏற்படுத்துவோமாக. அதன் பின்னர் நாம் நாளை துவங்குவோம். 235. அவன் இன்றைக்கு ஜெப அட்டைகளை கொடுத்திருக்கிறான். ஆகையால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஜெப அட்டைகளைக் கொடுக்கிறோம். எனவே அவர்கள் ஒவ்வொருவரும் வருவதற்கான ஒரு தருணத்தை பெற்றுக் கொள்ள முடியும். இது ஒரு விநோதமான நேரமாயுள்ளது. ஜெபவரிசையில் வருவது உங்களை சுகப்படுத்துகிறதில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் இங்கு மேடைக்கு வந்து சுகமடைகிறவர்களைக் காட்டிலும் அங்கேயே அமர்ந்திருந்து சுகமடைகின்றவர்களே எப்பொழுதும் அதிகமாயிருக்கின்றனர் என்பதை எவருமே அறிவர். பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் சர்வ வியாபியாயிருக்கிறார். அவர் விசுவாசிகளை மட்டுமே கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான், அவர் அவர்களை சுகப்படுத்தமுடியும். 236. பவுல் என்ற ஆங்கில பெயரில் உள்ள P என்ற எழுத்துடைய ஜெப அட்டைகளே கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே நாம்...ஒன்றிலிருந்து அழைப்போமாக. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நீங்கள் விரும்பினால் அவர்கள் இங்கே எழும்பி நிற்கட்டும். அவர்களுடைய ஜெப அட்டை பவுல் என்ற ஆங்கில எழுத்தில் உள்ள P என்ற எழுத்தைக் கொண்ட ஒன்று முதல் பத்து வரை உள்ளவர்களே, உங்களால் எழும்பி நிற்க முடிந்தால் இந்த பக்கத்தில் இங்கே எழும்பி நில்லுங்கள். அப்படி உங்களால் எழும்பி நிற்க முடியவில்லையென்றால், அப்பொழுது நாங்கள் உங்களுக்கு உதவி செய்யும்படி வேறு யாரையாவது அனுப்புவோம். பத்து, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு...சரி இன்னும் இரண்டு உள்ளதே. எட்டு, ஒன்பது, பத்து சரி. பத்து முதல் பதினைந்து வரை, பத்து முதல் பதினைந்து வரை, இன்னும் ஐந்து உள்ளன. பதினைந்து முதல் இருபது வரை, நான் காணும்படி நீங்கள் எழும்பி நிற்க முடிந்தால் நலமாயிருக்கும். இருபது முதல் இருபத்தைந்து வரை, இப்பொழுது நீங்கள் எங்கேயிருந்தாலும் நாங்கள் காண்போமாக. இப்பொழுது இன்னும் ஒரு சில நிமிடங்களுக்கு கூட்டத்தின் ஏனைய பகுதியினர் மெய்யான பயபக்தியோடு இருப்பார்களாக. அது ஜெப அட்டை P, ஒன்று முதல் இருபத்தைந்து வரையாக இருக்கட்டுமே. அப்படித்தானே? இருபத்தைந்து வரை, ஒன்று முதல் இருபத்தைந்து வரை, 237. இப்பொழுது ஒவ்வொருவரும் மெய்யான பயபக்தி யோடிருங்கள். தேவனுக்கும், செய்திக்கும் அதிகப்படியான மரியாதை செலுத்துங்கள். நீங்கள் அதனை ஒரு நிமிடம் கவனித்து ஆலோசனை செய்யும்படி தேவனுக்கு கடமைப் பட்டிருக்கிறீர்கள். 238. இப்பொழுது அவர்கள் ஜனங்களை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஆயத்தமாயில்லையென்றால்...அவர்கள் ஒரு ஜெப அட்டையை வைத்திருப்பார்களாயின், அவர்கள் எல்லோரும் வரிசையாக யில்லாதபடியால், அவர்கள் அதை கண்டறிந்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் அதை எனக்குச் சொல்லுவார்கள். அதன் பின்னர் அவர்கள்...அப்பொழுது யாராவது ஒருக்கால் செவிடாக இருக்கிறார்களா அல்லது யாரவது கேட்க முடியாதவர் களாயிருக்கிறார்களா என்பதை நாம் பார்ப்போம். 239. நண்பர்களே, அந்த ஜெப அட்டைகளை உடையவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை நான் அறியேன். அந்த பையன் இங்கு வருகிறான்...(யார் ஜெப அட்டைகளை கொடுத்தது? நீயா அல்லது பில்லியா? பில்லியா?) அவன் வருகிறபோது, ஜனங்களுக்கு முன்பாக அந்த ஜெப அட்டைகளை வரிசைப்படியில்லாமல் கலவையாக்கி, அதன் பிறகே உங்களுக்கு ஒரு ஜெப அட்டையை கொடுக்கிறான். அவன் வந்து உங்கள் எல்லோரையும் அமரச்சொல்லி உங்களுக்கு ஒரு ஜெப அட்டையைக் கொடுக்கிறான், பார்த்தீர்களா? எனவே அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதை நான் அறியேன். பாருங்கள், நான் இந்தக் குழந்தையை இங்கே மேலே கொண்டுவரும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களைக் குறித்து எனக்குத் தெரியாது. அதை அறிந்து கொள்ள எந்த வழியும் எனக்குக் கிடையாது. தேவன் அதை நியமிக்க வேண்டுமென்று விரும்புகிற விதத்தில் அதை அவர் நியமிக்கிறார் என்று நான் யூகிக்கிறேன். 240. இப்பொழுது உங்களில் மற்றவர்கள் ஜெப அட்டைகளை வைத்திருக்கவில்லை. ஆகையால், "நான் ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கவில்லை. ஆனால் நான் சுகவீனமாயிருக்கிறேன்" என்று கூறுகிறவர்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இந்த கட்டிடத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்... இப்பொழுது இங்கே மிக அதிகமான அளவிலான ஜனங்கள் இல்லை. எனவே அதற்கேற்றபடி பார்த்தால், நாளை ஜெப வரிசையில் ஜெபிக்க அதிக நேரம் ஆகாது. சுகவீனமாய் இங்கே உள்ளேயும், வெளியிலேயும் நின்று கொண்டிருப்பவர்கள் சுமார் இருபது பேர்கள் மட்டுமே உள்ளனர். 241. அது நல்லது, நீங்கள் அந்தவிதமாக ஏற்று கொள்வதைக் காண நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் உங்களுடைய விசுவாசத்தைக் குறித்து நினைத்ததைக் காட்டிலும் அதிக விசுவாசம் உங்களுக்கு இருந்திருக்கலாம். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொண்டிருந்தால், உங்களுடைய் ஜெப அட்டையை எறிந்து விடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதுவே உண்மையான கலப்படமற்ற விசுவாசமாயிருக்கிறது. உங்கள் மேல் எவரும் கைகளை வைக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மேல் கரங்களை வையுங்கள். 242. இப்பொழுது இன்றிரவு இங்குள்ள நீங்கள் ஜெப வரிசையில் வரப்போவதில்லையென்றால், நீங்கள் இந்த சம்பவத்தை விசுவாசியுங்கள். அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை அந்த ஸ்திரீ தொட்டபோது அவர் திரும்பி அவள் தன்னைத் தொட்டதை அவர் அடையாளங்கண்டு கொண்டார் என்ற சம்பவத்தை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? நிச்சயமாகவே நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். 243. இப்பொழுது எபிரேயர் 4-ல், "அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய் இப்பொழுது இருக்கிறார்" என்று வேதம் கூறியுள்ளதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், "ஆமென்" என்கின்றனர்] நல்லது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரேயானால், அவர் அதேவிதமாக செயல்படமாட்டாரா? ["ஆமென்."] இங்கே ஒவ்வொரு இரவும் அவர் அந்த விதமாகவே செய்திருக்கிறாரல்லவா? ["ஆமென்."] எத்தனைபேர் மற்ற கூட்டங்களில் இருந்து கொண்டு அவர் அதைச் செய்கிறதை பார்த்திருக்கிறீர்கள்? சற்று எழும்பி நில்லுங்கள். ["ஆமென்."] நிச்சயமாக. பார்த்தீர்களா? உலகத்தைச் சுற்றிலும் செய்துள்ளாரே! உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார், அவர் அறிந்திருக் கிறாரே! 244. இப்பொழுது நான் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பாருங்கள். நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? புரிகின்றதா? உங்கள் மீது எவருடைய கரங்களும் வைக்கப்படாமலே, "இயேசு கிறிஸ்துவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். நான் இப்பொழுது உம்மை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். இதனுடைய பணியானது செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்" என்ற ஒரு மெய்யான தேவனுடைய பொருளை நீங்கள் கூற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதன் பின்னர் அந்த வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு, உங்களுடைய அறிக்கையை அறிக்கையிட்டு, அதனோடு முன்னோக்கி நடந்து வாருங்கள். அப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்பதை கவனியுங்கள். புரிகின்றதா? என்ன சம்பவிக்கிறது என்பதை கவனியுங்கள். புரிகின்றதா? இப்பொழுது நீங்கள் அதைத்தான் செய்யும்படிக்கு நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாம் விசுவாசிக்க வேண்டிய உண்மையான வழி அதுவேயாகும். 245. நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? யாரோ ஒருவர், ["நான்கு மற்றும் பத்தொன்பது" என்கிறார்] எண் நான்கு, ஜெப அட்டை எண் நான்கு மற்றும் ஜெப அட்டை எண் பத்தொன்பது விடப்பட்டுள்ளன. ஜெப அட்டை நான்கு. யாரையாவது பாருங்கள். உங்களுக்கு பக்கத்திலுள்ளவர்களுடைய அட்டைகளைப் பாருங்கள். ஜெப அட்டை எண் நான்கையும், பத்தொன்பதையும் பாருங்கள். சரி, ஒரு வினாடி காத்திருங்கள். பாருங்கள் நான் அவரை அழைக்காம லிருந்தால் அப்பொழுது நான் அதன்பேரில் ஒரு எதிர்தாக்குதலைப் பெற்றுக் கொள்வேன். நீங்கள் பாருங்கள். என்ன கூறுகிறீர்கள்? என்ன கூறுகிறீர்கள்? ["நான்கு."] எண் நான்கு உங்களுக்கு கிடைத்து விட்டதா? அப்படியானால் எண் ஒன்பதைக் குறித்து...இன்னும் எண் பத்தொன்பது கிடைக்கவேயில்லை. என்ன கூறுகிறீர்கள்? ["நான்கும் சேர்ந்தே"] ஜெப அட்டை எண் நான்கும் கூட இன்னும் கிடைக்கவில்லை. பத்தொன்பதும் கிடைக்க வில்லையே. எனவே நீங்கள் வரிசையில் வரும்போது யாராவது அவைகளை வைத்திருக்கின்றார்களா என்பதைப் பாருங்கள். இல்லையென்றால் பாருங்கள், இது ஒருக்கால்... பாருங்கள்... எவரேனும்...அந்த சிறு குழந்தைக்கு ஒரு ஜெப அட்டை கிடைத்துவிட்டதா? சரி பாருங்கள், இல்லை...இது அந்த எண் அல்ல. இங்கே சக்கர நாற்காலியில் உள்ள இந்த பெண்மணி ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கிறாளா? அவளுடைய எண்ணை சரி பாருங்கள். இதுதான்-இதுதான் அவளுடைய எண்ணா? ஒரு கட்டிலின் மேல் இருக்கும் பெண்ணா ஹு? அவர்கள் அதை கண்டுபிடித்துவிட்டனர். அவைகள் யாவும் இப்பொழுது உள்ளேயிருக்கின்றன. சரி.சரி இப்பொழுது-இப்பொழுது ஜெப அட்டையை வைத்திருக்கிற ஜனங்களே, அவைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் தேவனுடைய கிருபையினால் உதவி செய்யப் போகிறோம். 246. இப்பொழுது நண்பர்களே, இது கடைசி இரவாக இருக்கிறபடியால் நாம் இதை செய்யவுள்ளோம். ஏனெனில் நாளைய தினம் என்பது ஞாயிறு பிற்பகலாயிருக்கிறது. ஆகையால் நாம் நம்மையே அமைதிப்படுத்திக் கொள்வோமாக. இப்பொழுது நீங்கள் பெற்றுள்ள எல்லா அவிசுவாசங்களையும், அர்த்தமற்ற எல்லா கருத்துகளையும் எடுத்து, அதை தரையின் மீது வைத்து, அது இருந்தவிதமாகவே அதன் மீது உங்களுடைய பாதத்தை வையுங்கள். அதன் பின்னர், "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கப் போகிறேன்" என்று கூறுங்கள். எத்தனை பேர் அதை செய்வீர்கள்? [சபையோர், "ஆமென்" என்கின்றனர்] உங்களுக்கு நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 247. இப்பொழுது ஒருவரும் செல்ல வேண்டாம். அப்படியே அமைதியாக உட்கார்ந்து விசுவாசியுங்கள். இந்தவிதமாக கவனியுங்கள். இப்பொழுது பாருங்கள். 248. என்ன நடைபெற்றிருக்கிறது என்பதை முன்னறியக் கூடியதும், என்ன நடைபெற்று வந்துள்ளது, அது எப்படி இருக்கிறது அல்லது அது என்னவாயிருக்கும் என்பதை கூறக்கூடியதே எப்பொழுதும் தேவனுடைய அடையாளம் என்று அறியப்பட்டு வருகிறது. நாம் அதை அறிவோம். அந்தவிதமாகவே தீர்க்கதரிசிகளும் அறிந்து கொள்ளப்பட்டனர். அந்தவிதமாகவே இயேசுவும் மேசியாவென்று அறியப்பட்டார். அப்பொழுது அவர் மேசியாவாக இருந்ததுபோலவே இன்றைக்கும் அவர் பூமியின் மேலிருந்தபோது கொண்டிருந்த ஒரு சரீரத்தைத் தவிர மற்றபடி அதே மேசியாவாகவே இருக்கிறார். அவர் என்னுடைய சரீரத்தையும், உங்களுடைய சரீரத்தையும் உபயோகப்படுத்தும்படி தம்முடைய ஆவியை திரும்ப அனுப்பினார். இப்பொழுது உங்களால் இதை செய்ய முடியாதிருக்கலாம். ஆனால் ஒரு சந்ததியில் ஒன்று உண்டு என்பதை நாம் வேதத்தில் அறிந்திருக்கிறோம். ஆனாலும் பாருங்கள், ஆனால் அதே சமயத்தில் உங்களால் அதை விசுவாசிக்க முடியும். எனவே உங்களால் செய்ய முடிந்த மற்ற காரியங்களை நீங்கள் ஒவ்வொருவருமே பெற்றுள்ளீர்கள். 249. என்னுடைய விரலானது என்னுடைய கண்ணாயிராத காரணத்தால், அது என்னுடைய விரலாய் இனி இருக்கப் போவதில்லையென்று தீர்மானித்தால் என்னவாகும்? இந்த கரமானது, "நான் இனிமேல் மேலே உயர்த்தப்போவதில்லை. ஏனென்றால் நான் ஒரு கண்ணாகவோ அல்லது ஒரு காதாகவோ இல்லாத காரணத்தால் நான் ஒரு கரமாக இருக்கமாட்டேன்" என்று கூறினால் என்னவாகும்? ஏன்? அது என்னுடைய சரீரத்தையே ஊனமுள்ளதாக்கிவிடுமே! நீங்கள் என்னவாயிருக்க வேண்டுமென்று தேவன் உங்களை பொருத்துகிறாரோ அதேவிதமாகவே நீங்கள் இருங்கள். 250. எத்தனையோ முறை நான் ஓரல் ராபர்ட்ஸையும், பில்லி கிரஹாமையும், டாமி ஆஸ்பார்னையும் வியந்து பாராட்டியிருக்கிறேனே! 251. அந்த மனிதர்களில் சிலர் அங்கு சென்று, "தேவனுக்கு மகிமை! இதை விசுவாசியுங்கள்" என்கிறார்களே! விடாபிடி கொண்ட விசுவாசம். அதன்பின்னர் அங்கிருந்து அவர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் சோர்வின்றி கடந்து சென்றுவிடுகிறார்கள். 252. பில்லி கிரஹாமோ ஒரு செய்தியோடு நின்று, ஒரு சில நிமிடங்கள் ஜனங்களண்டை உரையாடி, "உங்களுடைய தீர்மானத்தை செய்து, பீடத்தண்டை வாருங்கள்" என்கிறார். அப்படியே அங்கேயே நிற்கிறாரேயன்றி மற்றொரு அசைவையும் ஒருபோதும் உண்டு பண்ணுகிறதில்லை. அவர், "பில்லி, நீர் ஏன் அதை செய்கிறீர்" என்றார். 253. மேலும், "என்னுடைய செய்தி சென்றுவிட்டது. அது தேவனிடத்திலிருந்து வந்தது" என்றார். அது உண்மையே. 254. அவர் சரியாக சோதோமாகிய சபையில் இருக்க வேண்டிய பிரகாரமாய் இருக்கிறார். அவருடைய பெயர் ஆபிரகாம் என்ற ஆங்கில எழுத்துக்களின் முடிவில் உள்ள ஹாம் என்ற பெயரோடு முடிவடைகிறது. ஆறு எழுத்துகள். ஆபிரகாம் என்பதோ ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்களைக் கொண்டதா யிருக்கிறது. பாபிலோனில் அங்கிருந்த அந்த சபையின் செய்தியாளனைப் பாருங்கள். நிச்சயமாகவே, தேசத்திலே மனந்திரும்புதலின் செய்தியை பில்லி கிரஹாமைப் போல் மேடையில் முழக்கமிட்டு பேசுகிற மனிதன் ஒருவனும் இல்லை. அவர் அங்கே நிற்கிறார். அதன்பின்னர் அங்கிருந்து நடந்து சென்று ஒரு துண்டு இறைச்சி துண்டையும், சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொண்ட பாலையும் அருந்திவிட்டு படுக்கைக்குச் செல்கிறார். அதெல்லாம் சரிதான். 255. ஆனால் நீங்கள் பிசாசுகளோ நின்று போராட வேண்டியதாயிருக்கிறதே. ஒரு சமயம் லாங் பீச் (Long Beach) என்ற இடத்தில் நானும், சகோதரன் ஜேக்கும்...உங்களுடைய தகப்பனாரும் அங்கே நின்று கொண்டிந்தார். 256. அங்கே திரு.ஃபுல்லர், (Fuller) சார்லஸ் புல்லர் என்ற ஒரு அருமையான சகோதரன் நின்று பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அங்கே அந்த பிற்பகலில் சுமார் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஜனங்கள் இருந்தனர். அப்பொழுது நாங்களும் அவருடைய கூட்டத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அவருக்குப் பிறகு நான் அந்த அரங்கத்தை வாடகைக்கு எடுத்திருந்தேன். அவர் அங்கு நின்று ஒரு அருமையான சொற்பொழிவை ஆற்றினார். அது மட்டுமின்றி, "இங்கே யாராவது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அப்பொழுது இரண்டு இல்லை மூன்று பேர் தங்களுடைய குழந்தைகளின் பிரதிஷ்டைக்காக வந்தனர். ஒரு ஸ்திரீயோ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக கூறினாள். அப்பொழுது உதவிக்காரர்களில் ஒருவர் மேலே வந்து ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு திரும்பிப் போய் உட்கார்ந்து கொண்டார். பின்னர் கரங்களை குலுக்கி, திரும்பி வெளியே சென்றனர். அவர்கள் அவருடைய அறிவாற்றலுள்ள, நன்கு உடை உடுத்தியிருந்த ஜனக்குழுவினராய் அங்கிருந்து நடந்து சென்றனர். 257. இங்கே உள்ளே வருகின்ற என்னுடையவர்களோ, சாதாரணமான எளிமையான இறுகிய மேற்சட்டைகளோடும், சக்கர நாற்காலிகளோடும், குருடராயும், முடமாயும், நொண்டியாயும், ஊனமுற்றவர்களுமாகவே வருகின்றனர். அப்பொழுது உங்களுடைய விசுவாசமானது அந்தவிதமான ஏதோ ஒன்றை சந்திக்க வேண்டியதாயிருக்கிறதே! 258. இப்பொழுது இங்கே கிறிஸ்து இருக்க வேண்டும் என்று நான் உரிமை கோரியிருக்கிறேனா? இப்பொழுது அவிசுவாசிகள் சுற்றி அமர்ந்து கொண்டு, ஒரு குற்றத்தைக் கண்டறிய விரும்பி, பாருங்கள், வெறுமனே ஒரு குற்றத்தை கண்டறிய முயற்சிக்கின்றனர். 259. நினைவிருக்கட்டும், இங்கே அண்மையில் டொரன்டோவில் (Toronto) நாங்கள் அங்கே நின்று பிரசங்கித்துக் கொண்டும், வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டுமிருந்தோம். அப்பொழுது நான் ஒரு வினோதமான ஆவியைத் தொடர்ந்து உணர்ந்தேன். அது என்னுடைய இடது புறத்தில் அமர்ந்து கொண்டிருந்தது. நான் அதைத் தொடர்ந்து கவனித்தேன். அங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஒரு கூட்டமானது அவன் என்னை மனோவசிய முறையில் மயக்கம் வருவிக்க அங்கே உள்ளேவரும்படி அவனுக்கு கூலி கொடுத்திருந்தனர். அவன் இராணுவ முகாம்களுக்கு சுற்றிச் சென்று, அங்குள்ள இராணுவ வீரர்களுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு நாயைப்போல குரைத்து இன்னும் மற்ற காரியங்களையும் மனோவசிய முறையில் செய்வான். நான் அந்த பொல்லாத ஆவியை உணர்ந்தேன். ஆனால் அது எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அதன்பின்னர் நான் அந்த கறுத்த நிழலைக் கண்டேன். அப்பொழுது நான் ஒரு சில நிமிடங்கள் அப்படியே காத்திருந்தேன். உடனே நான், "பிசாசின் பிள்ளையே, இந்தவிதமான ஒரு காரியத்தைச் செய்யும்படி பிசாசானவன் ஏன் உன்னுடைய மனதை குருடாக்கியிருக்கிறான்? நீ தேவனை மேற்கொள்ளும்படியாகவும், தேவனுடைய ஆவிக்கே சவாலிடும் படியாகவும் வந்திருக்கிறபடியால், அவர்கள் உன்னை இங்கிருந்து தூக்கிச் செல்வார்கள்" என்றேன். அவன் அப்பொழுதே அவனுடைய இருக்கையில் பக்கவாதத்திற்குள் ளானவனானான். அவன் இன்னமும் முடக்கு வாதமுடைய வனாகவே இருக்கிறான். புரிகின்றதா? 260. நாம் சபையில் விளையாடக்கூடாது. எத்தனைபேர் கூட்டங்களில் இருந்து, இதுபோன்ற காரியங்கள் சம்பவிக்கிறதை பார்த்திருக்கிறீர்கள்? இதுபோன்ற காரியங்கள் சம்பவிக்கிறதை நீங்கள் அறிவீர்களா? நிச்சயமாக, அது உண்மை. நினைவிருக்கட்டும், பயபக்தியாயிருங்கள். இப்பொழுது இங்கு இதுதான் முதல் நபர் என்று நான் கருதுகிறேன். அது சரியா? 261. இப்பொழுது பாருங்கள், இந்த கடைசி நாட்களில் என்ன சம்பவிக்க வேண்டியுள்ளது என்பதை சரியாக நான் உங்களுக்கு கூறி பிரசங்கித்திருக்கிறேன். இப்பொழுது அது சம்பவிக்கு மானால், அப்பொழுது அது ஒரு அடையாளமாயிருக்கிறது. அந்தவிதமாகத்தான் அடையாளமானது இருந்தது. அதன் பின்னர் அந்த அடையாளத்தைப் பின்தொடருகிற சத்தத்தை விசுவாசியுங்கள். புரிகின்றதா? 262. இப்பொழுது இங்கே ஒரு ஸ்திரீ இருக்கிறாள். முற்றிலும் புதியதாக வந்திருப்பவர்களாகிய உங்களுக்கு இது பரிசுத்த யோவான் 4-ல், நம்முடைய கர்த்தராகிய இயேசு ஒரு ஸ்திரீயை கிணற்றண்டையிலே சந்தித்ததைப் போன்றிருக்கிறது. அவர்கள் அதற்கு முன்பு தங்களுடைய ஜீவியத்தில் ஒருவரையொருவர் சந்தித்ததே கிடையாது. ஆயினும் அவளுடைய தொல்லையென்னவென்பதை அவர் அந்த ஸ்திரீயினிடத்தில் கூறினார். அப்பொழுது அது மேசியா வாயிருந்தது என்பதை அவள் அடையாளங் கண்டுகொண்டாள். உங்களுக்கு அந்த சம்பவம் தெரியுமல்லவா? இங்கே அது மீண்டும் நிகழ்கிறது. அதாவது ஒரு மனிதனும், ஒரு ஸ்திரீயும் சந்திக்கிறார்கள். இப்பொழுது இவள் அந்த ஸ்திரீயாயிருக்கவில்ல, நானும் அந்த மனிதனாயி ருக்கவில்லை, ஆனால் அவரோ இன்னமும் மாறாத தேவனாகவே இருக்கிறார். புரிகின்றதா? இப்பொழுது இயேசு, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும்கூட செய்வீர்கள்" என்று பரிசுத்த யோவான் 14:12 ல் கூறினார். 263. இப்பொழுது ஸ்திரீயே, உன்னை அறியாதிருக்கிறேன். நீ அங்கே எதற்காக நின்று கொண்டிருக்கிறாய் என்பதைக் குறித்த ஒரு உட்கருத்தும் என்னிடத்தில் இல்லை. அது குடும்பப் பிரச்சனையாக இருக்கலாம். அது வேறு யாரோ ஒருவருக்காக இருக்கலாம். நீ வியாதியாயிருக்கலாம். அது ஒருக்கால்...நீ ஏதோ ஒரு காரியத்தை வைத்துக்கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கலாம். அப்படியாயின், என்ன சம்பவிக்கிறது என்பதை கண்டறிவோம். புரிகின்றதா? நீ ஏதோ ஒரு காரியத்தை போலியாக நடித்துக் காட்டிக் கொண்டிருக்கலாம். அது என்னவாயிருந்தாலும் எனக்குத் தெரியாது...நீ ஒரு உண்மையான விசுவாசியாயிருக்கலாம். அதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் அதை அறிந்திருக்கிறார். ஆனால் அவர் உனக்கு உண்மையை கூறினாரா அல்லது இல்லையா என்பதை நீ அறிந்து கொள்வாய், நீ அறிந்து கொள்ளமாட்டாயா? அது உண்மையா யிருக்குமானால் நீ அதை அறிந்து கொள்வாய். 264. இப்பொழுது பாருங்கள், அந்தவிதமாகவே உன்னுடைய விசுவாசத்தை உடையவளாயிருக்கிறாய், நீ இங்கு எப்படி வர விரும்புகிறாய்? இப்பொழுது எவரேனும் இது தவறாயிருக்கிறது என்று விசுவாசிப்பீர்களாயின், நீங்கள் இங்கு வந்து இந்த நோயாளியை அழைத்துச் செல்லுங்கள், இங்கு வந்து மற்றவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். ஆகையால் நீங்கள் அதை செய்யாவிடில், அப்பொழுது என்னை குற்றப் படுத்தாதீர்கள். புரிகின்றதா? 265. சகோதரியே, அப்படியே ஒரு நிமிடம், இப்பொழுது இங்கே பாருங்கள். இப்பொழுது எனக்கு உங்களைக் குறித்து எந்தவிதமான ஒரு உட்கருத்தும் கிடையாது. நீங்கள் அங்கே வெறுமனே ஒரு ஸ்திரீயாக நின்று கொண்டிருக்கிறீர்கள். 266. இப்பொழுது வேதாகமத்தின் மூலமாக நான் நிரூபித்திருக்கிற தேவ குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த கடைசி நாட்களில் அவர் திரும்ப வந்து தம்முடைய ஆவியின் பரிபூரணத்தில் தம்மை வெளிப்படுத் துவதாக வாக்குப்பண்ணியுள்ளார். 267. அப்படியே சபையானது வளர்ந்து கொண்டே வருவது போன்றுள்ளது. அது ஒரு மனித சரீரமானது பாதத்திலிருந்து தொடை வரை வளர்ந்து, பின்னர் தலை வரை வளர்வது போன்றே உள்ளது. தலையே சரீரத்திற்கு பிரதானமாயிருக்கிறது. முதலாம் சபையிலிருந்து சரீரமானது வளர்ந்திருக்கிறது. அது வளர்ந் திருக்கிறது. சீர்திருத்தங் களிலிருந்து இப்பொழுது வரை வளர்ந் திருக்கிறது. அது நீதிமானாகுதலினூடாக, பரிசுத்தமாகு தலினூடாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினூடாக வளர்ந்திருக்கிறது. இப்பொழுது தலையானது (கிறிஸ்து) சரீரத்தண்டைக்கு, கிறிஸ்துவின் சரீரத்தண்டைக்கு வந்து கொண்டிருக்கிறது. அவர் ஒருவரே அதை அறிந்தவரா யிருக்கிறார். என்னுடைய கரத்திற்கு செயல்படத் தெரியாது. அது தலையினால் அறிந்து கொள்ளுகிறது. ஆனால் அவர் ஒருவரே அதை அறிந்திருக்கிறார். அந்த காரணத்தினால்தால் அவர் வார்த்தையாயிருக்கிறார். 268. நான் அந்த வார்த்தை அல்ல. நான் ஒரு மனிதனாயிருக்கிறேன். ஆனால் நீங்கள் பாருங்கள். அவர் இந்த சரீரத்தை உபயோகப்படுத்துகிறார். ஏனென்றால் அவர் இந்த சரீரத்தை பரிசுத்தப்படுத்த மரித்தார். எனவே அவர் இதை உபயோகப்படுத்தும்படியாக ஒரு வரத்தைக் கொடுக்கிறார். அதாவது வெறுமனே அதை இயக்கும்படி இயந்திர தளவாடத்தை இழுப்பது போன்றே உள்ளது. அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவர் புது பொறுப்பேற்றுக் கொள்கிறார். 269. ஆகையால் நீங்கள் செய்திருக்கிறதையும், நீங்கள் எதற்காக இங்கிருக்கிறீர்கள் என்பதையும் அல்லது உங்களைக் குறித்த ஏதோ காரியத்தை அவர் விளக்கினால் அல்லது அதை உங்களிடத்தில் கூறினால் அப்பொழுது நீங்கள் அதை விசுவாசிப்பீர்கள். அப்பொழுது கூட்டத்தாரும் அதே காரியத்தை விசுவாசிப்பார்களல்லவா? [சபையோர், "ஆமென்" என்கிறார்கள்] தேவனாகிய கர்த்தர் அதை அருளுவாராக. 270. இப்பொழுதும் நான் இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் தேவனுடைய மகிமைக்காக என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுது அப்படியே அமர்ந்திருங்கள். அங்குமிங்கும் இடம் பெயர வேண்டாம். 271. அப்படியே ஒரு விநாடி இங்கே நோக்கிப் பாருங்கள். பேதுருவும் யோவானும் அந்த வாசலண்டை கடந்து சென்ற போது, "என்னை நோக்கிப் பார்" என்று கூறியது போன்றே கூறுகிறேன். வேறு வார்த்தைகளில் கூறினால் நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன் என்பதற்கு கவனம் செலுத்துங்கள் என்பதாகும். புரிகின்றதா? இயேசு அந்த ஸ்திரீயினிடத்தில் ஒரு சில கேள்விகளைக் கேட்டார். "எனக்கு தாகத்திற்குத் தா." 272. பாருங்கள், நான் அதே காரியத்தையே பிரசங்கித்து வருகிறேன். பிதாவானவர் என்னை இங்கு பேட்டன் ரோகுக்கு (Baton Rouge) அனுப்பினார். எனவே நான் இங்கிருக்கிறேன். 273. அவர் சமாரியாவினூடாக செல்ல வேண்டியதாயுள்ளது என்று பிதாவானவர் கூறினார். எனவே அவர் அங்கு அமர்ந்திருந்தார். அங்கு முதலில் அவரிடத்தில் வந்தது ஒரு ஸ்திரீயாய் இருந்தது. அவர் அந்த ஸ்திரீயின் பேரில் ஒரு அடையாளத்தை செய்தபோது, முழு பட்டணமே மனந்திரும்பியது. அது என்ன ஒரு வித்தியாசமாயிருக்கிறது... 274. அவர் இன்றிரவு அதே காரியத்தை செய்வாரானால், பேட்டன் ரோகில் (Baton Rouge) உள்ள எல்லோருமே மனந்திரும்புவார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? நான் அதைக் குறித்து சந்தேகப்படுகிறேன். நீங்கள் சந்தேகப்படவில்லையா? நான் நிச்சயமாகவே சந்தேகப் படுகிறேன். ஆனால் நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். எப்போதும் அறியப்பட்டிருந்த பொல்லாங்கைக் காட்டிலும் இப்பொழுது அதிக பொல்லாங்கு காணப்படுகிறது. 275. இப்பொழுது உங்களுடைய நிலைமைகளைப் பாருங்கள். நீங்கள் இங்கே ஜெபிக்க வேண்டும் என்பதற்காகவே இருக்கின்றீர்கள். முற்றிலும் சரியே. நீங்கள் ஒரு தொண்டைக் கோளாறினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையானால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அது மாத்திரமல்ல, ஆனால் நீ அங்கு உள்ள யாருக்காகவோ ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது ஒரு குழந்தைக்காகவே, அந்த குழந்தை தொண்டையில் ஒரு மோசமான நிலைமையை உடையதாக இருக்கிறது. அந்த குழந்தையினுடைய மோசமான நிலைமை என்னவென்றால், அதற்கு தொண்டையில் சதை வளர்ச்சி காணப்படுகிறது. தேவன் அந்தக் குழந்தையையுங்கூட சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? உன்னுடைய கரத்தில் உள்ள அந்த கைக்குட்டையே அதற்கு ஒரு சாட்சியாகும். இப்பொழுது அதைக் குறித்து சந்தேகப்படாதே. போய் அந்த கைக்குட்டையை குழந்தையின் மீது வை. சந்தேகப்படாதே. முழு இருதயத்தோடு விசுவாசி. தேவன் உங்கள் இருவரையும் சுகப்படுத்துவார். [அந்த சகோதரி, "அவருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா!" என்கிறார்] உங்களால் அதை செய்யமுடியுமா? ["இயேசுவே! உமக்கு நன்றி, இயேசுவே!"] ஆகையால் நீ போ, கர்த்தர் உன்னோடிருப்பாராக. ["தேவனுக்கு மகிமை"] அல்லேலூயா. நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நாமும் கூட அன்னியர் களாயிருக்கிறோம். 276. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார், "ஆமென்" என்கின்றனர்.] அது அடையாளமாயிருக்கிறது. இப்பொழுது சத்தமோ, "வார்த்தைக்கு திரும்புங்கள்" என்பதாயுள்ளது. 277. உங்களுக்கு தெரியவில்லையா? அவர் பேசுகிறார். அவர் உங்களைக் குறித்த ஏதோ காரியத்தை என்னிடம் கூறுவாரானால், அப்பொழுது நான் உங்களுக்கு கூறியிருந்த அந்த வார்த்தையானது ரூபகாரப்படுத்தப்படும் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? அதுவே-அதுவே அதனைக் குறித்த ரூபகாரப்படுத்துதலாயிருக்கிறது. புரிகின்றதா? அவர் அதை செய்தார் என்று நான் கூறினேன். அது தீர்க்கதரிசன மாயிருக்கிறது. இப்பொழுது தீர்க்கதரிசனமானது நிறை வேறுமானால் அப்பொழுது அவர், "அதற்கு செவிகொடுங்கள்" என்றார். 278. நீங்கள் மட்டுமீறிய நரம்புத்தளர்ச்சி நிலையை அடைந்து, அந்த நரம்புத்தளர்ச்சியினால் நீங்கள் அவதியுற்றுக் கொண்டி ருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு கட்டி உண்டாயிருக்கிறது. அந்தக்கட்டி உங்களுடைய காலின் மேல் உள்ளது. அது உண்மை. இல்லையா? [அந்த சகோதரி, "ஆம்" என்கிறார்] இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ["ஆம் ஐயா."] அப்படியானால் உங்களுடைய வீதியில் செல்லும்போது விசுவாசமாக செல்லுங்கள். நீங்கள் விசுவசிக்கிறபடியே அது உங்களுக்கு ஆகட்டும். 279. நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். தேவனால் உங்களுடைய தொல்லைகளை என்னிடத்தில் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்னை நோக்கிப் பாருங்கள். உங்களுக்கு தொல்லைகள் உண்டு. ஆனால் நீங்கள் உண்மையிலேயே வேறு யாரோ ஒருவருக்காகவே நின்று கொண்டிருக்கிறீர்கள். அது உங்களோடு கரம் உயர்த்தின அந்த நபரே. அது ஒரு சகோதரியாகும். அது உண்மை. இப்பொழுது உங்களுடைய சகோதரியோடுள்ள கோளாறு என்னவென்பதை தேவனால் எனக்கு கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? அவளுக்கு இருதயக்கோளாறு உண்டு. அது உண்மை. இப்பொழுது அவள் சுகமடையப்போகிறாள் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய விசுவாசத்தின்படியே அது உங்களுக்கு ஆகக்கடவது. 280. வாருங்கள் பெண்மணியே, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? உங்களுடைய கோளாறு என்னவென்பதை அல்லது நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை அல்லது ஏதோ காரியத்தை தேவனால் எனக்குக் கூறமுடிந்தால் அது உங்களை விசுவாசிக்கச் செய்யுமா? நீங்கள் என்னை அறிந்திருக் கிறீர்கள்...ஆனால் நான்-நான்-நான் உங்களை அறியேன். அது அவர் வாக்குரைத்த வார்த்தையின்படியே எனக்குள் அவருடைய தனி சிறப்புப் பண்புகளை அடையாளங் கண்டு கொள்வதாயிருக்கும். [அந்த சகோதரி, "நான் அதை அப்படியே விசுவாசிக்கிறேன்" என்கிறாள்] நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ["ஆம், ஆமென்."] 281. நீங்கள் வேறொருவருக்காகவும் இருக்கிறீர்கள். உனக்கு உன்னுடைய வயதுடைய ஒரு ஸ்திரீக்கு இருக்கும் தொல்லைகளைப் போலவே உனக்கும் தொல்லைகள் உண்டு. ஆனால் உன்னுடைய முக்கியமான சிந்தனை வேறு யாரோ ஒருவரைப் பற்றினதாயிருக்கிறது. உன்னுடைய வாஞ்சை தேவனண்டை உள்ளது. நீ உனக்காக தேவனை தேடிக் கொண்டிருக்கவில்லை. வேறு யாரோ ஒருவருக்காகவே தேடிக் கொண்டிருக்கிறாய். அது ஒரு தேவ மனிதனாகும். அது உன்னுடைய கணவனாயிருக்கிறது. அவர் இருதயக்கோளாறு உடையவனாயிருக்கிறார். அவர்...தேவன் அவனை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? போய் அதை விசுவாசி. நீ விசுவாசித்திருக்கிறபடியே, அது அவ்வண்ண மாகவே உனக்கு ஆகட்டும். 282. இப்பொழுது நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், முழு பிரசங்க நேரத்திலுமே பாருங்கள், அது, அது எப்போதுமே இருந்தவிதமாகவே இருந்தது. ஆனால் இப்பொழுது மூன்று அல்லது நான்கு பேர்கள் ஜெபவரிசையில் கடந்து சென்றிருக்கிறபடியால், என்னால் இங்கு நிற்கமுடியவில்லை. புரிகின்றதா? பாருங்கள், அப்படியே முழு கூட்டத்தினரும் இங்கே வெண்மையான பாலைப்போன்று காணப்படுகின்றனர். புரிகின்றதா? இயேசு, "என்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்றது" என்றார். ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டதே அவரிடத்திலிருந்து வல்லமையை கொண்டு சென்றதென்றால், அவரோ தேவ குமாரன், ஆனால் அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியாகிய என்னைக் குறித்து என்ன? 283. அவர், "நான் செய்கிற கிரியைகளை நீங்கள் கூடச் செய்வீர்கள். இதைப் பார்க்கிலும் அதிக கிரியைகளை செய்வீர்கள்" என்றார். யாக்கோபு அரசனின் மொழிபெயர்ப்போ, "பெரிய கிரியைகள்" என்று கூறுகிறது. ஆனால் நீங்கள் மூல மொழி பெயர்ப்பை எடுத்துக் கொள்வீர்களேயானால், "நீங்கள் இதைப் பார்க்கிலும் அதிக கிரியைகளைச் செய்வீர்கள்" என்றே கூறப்பட்டுள்ளது. எவருமே பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. அவர் மரித்தோரை எழுப்பினார். அவர் இயற்கையை நிறுத்தினார், மற்றும் எல்லா காரியங்களையுமே செய்தார். ஆனால் அவர், "நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், நீங்கள் இதைப் பார்க்கிலும் அதிக கிரியைகளைச் செய்வீர்கள்" என்றார். 284. "உலகம் என்னைக் காணாது, ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனெனில் நான்..." பாருங்கள், "நான்," நான்-நான் என்பது ஒரு தனிப்பட்ட பிரதி பெயராயிருக்கிறது. "நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்." ஆகையால் அது அந்த மனிதனல்ல. அது கிறிஸ்துவாயிருக்கிறது. 285. அதை கூறிக்கொண்டிருக்கிற நானே சற்று நேரத்தில் ஒருவிதமான நடுக்கத்திற்குள்ளாகி, பின்னரே என்னுடைய சுய நினைவை அடைகிறேன். நீங்கள் கொஞ்ச நேரத்தில் சுயநினைவற்று ஒரு இடத்தில் இருப்பீர்கள்...அது நீங்கள் அங்கு மேலேயிருக்கும்போதோ அல்லது இங்கே கீழேயிருக்கும் போதோ அல்ல, அது இடைப்பட்ட நிலையிலேயாகும். எத்தனை பேர்கள் அதை புரிந்து கொள்கிறீர்கள்? நீங்கள்-நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்றே கருதுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். நானும் கூட புரிந்து கொள்கிறேன். 286. புலவர்களும், தீர்க்கதரிசிகளும் எப்பொழுதுமே இயற்கைக்கு மேம்பட்ட உணர்ச்சி கொண்ட நரம்புக் கோளாறு உடையவர்களாகவே இருக்கின்றனர் என்பதை நீங்கள் எப்போதாவது அறிந்திருக்கிறீர்களா? எத்தனைபேர் அதை அறிவீர்கள்? 287. எத்தனை பேர் வில்லியம் கூப்பர் (William Cowper) என்ற மகத்தான ஆங்கில புலவரைக் குறித்து வாசித்திருக்கிறீர்கள்? அவர், "இம்மானுவேலின் இரத்தக்குழாய்களில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்றுண்டே" என்று எழுதினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் அந்தப் பாடலை எழுதின பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அண்மையில் நான் அவருடைய கல்லறையின் அருகில் நின்றேன். அவர் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாராம். 288. அமெரிக்க சபைகளுக்கு மிகச் சிறந்த பாடல்களை அளித்த ஸ்டீபன் ஃபாஸ்டரைக் (Stephen Foster) குறித்து எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அவர் அதை தலையில் பெற்றிருந்தாரேயன்றி இருதயத்தில் அல்ல. ஒவ்வொரு முறையும் ஆவியின் ஏவுதல் அவருக்கு உண்டாகும்போது, அவர் அப்பாடல்களை எழுதுவார். அதன்பின்னர் அந்த ஆவியின் ஏவுதல் அவரைவிட்டு நீங்கின பிறகு, அவருக்கு என்ன செய்வதென்றே தெரியாதாம். எனவே அவர் இழக்கப்பட்டார். அவர்-அவர்-அவர் ஒரு குடிகாரனாய் இருந்து வந்தார். முடிவிலே அந்த ஆவியின் ஏவுதல் அவரைவிட்டு வெளியேறத் துவங்கினபோது, ஒரு ஊழியக்காரன் என்றழைக்கப்பட்ட அவர் ஒரு கத்தியை எடுத்து தற்கொலை செய்துகொண்டார். அது உண்மை. 289. தீர்க்கதரிசி எலியாவை நோக்கிப் பாருங்கள். அவன் அங்கு சென்றபோது வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தான். முதலாம் நாளிலே வானத்திலிருந்து மழையை வரவழைத்தான். அதன் பின்னர் வானங்களை அடைத்து அவை எல்லாவற்றையும் செய்தான். அதன்பின்னர் ஆவியின் ஏவுதல் அவனைவிட்டுச் சென்ற போது, அவன் வனாந்திரத்திற்குள்ளாகச் சென்று மரிக்க விரும்பினான். தேவன் அவனை கண்டறிந்து நாற்பது நாட்கள் கழித்து குகைக்குள்ளாக அழைத்துக் கொண்டார். அது உண்மையா? 290. தீர்க்கதரிசி யோனாவைப் பாருங்கள், அவன் தன்னுடைய செய்தியை அளித்த பிறகு அவன் மேலே சென்று குன்றின் மீது அமர்ந்து அவன் மரிக்கும்படி தேவனிடத்தில் கேட்டுக்கொண்டான். ஹு-ஹு. "உம்முடைய ஊழியக்காரன் சமாதானமாய் போகட்டும்," 291. ஜனங்கள் அதை புரிந்து கொள்கிறதில்லை. இல்லை, இல்லை, நீங்கள் புரிந்து கொள்ளமாட்டீர்கள். நானும் அதை விளக்கிக்கூற முடியாது. மற்றெந்த மனிதனுமே அதை விளக்கிக் கூறமுடியாது. நீங்கள் தேவனை விளக்கிக் கூறமுடியாது. தேவன் விஞ்ஞான ஆராய்ச்சியினால் அறிந்து கொள்ளப் படுகிறதில்லை. தேவன் விசுவாசத்தினால் அறிந்து கொள்ளப்படுகின்றார். நாம் அவரை விசுவாசிக்கிறோம். நீங்கள் எப்படி விளக்கிக் கூறமுடியும்? அது எப்படி விசுவாசமாயிருக்கும்? நாம் விசுவாசத்தினால் தேவனை அறிந்து கொள்கிறோம். 292. சபையானது தேர்ச்சியடைந்த செய்தியை கொண்டு வரும்படியான உழைப்பையும், களைப்பையும், கடும் முயற்சியையும் சோதனையையும் ஒருபோதும் அறிந்து கொள்ளாது. ஆனால் அவர் அறிந்திருக்கிறார். என்னுடைய வெகுமதி ஜனங்களிடத்திலிருந்து வருகிறதில்லை. 293. பெண்மணியே இங்கே பாருங்கள். ஆம், துரிதமாக இங்கு பாருங்கள். அந்த ஸ்திரீ மரணத்திற்கேதுவாக நிழலிடப்பட்டிருக்கிறாள். தேவன் அந்த ஸ்திரீயினிடத்தில் உடனடியாக வருகிறதில்லை. என்னால் காணமுடிகிறது... அவளைச் சுற்றி தொங்கிக் கொண்டிருக்கிற கறுத்த நிழலை நீங்கள் காணவில்லையா? உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அவள் மரித்துப் போவாள். இங்கு அண்மையில் அவர்கள் அதைப் போன்ற ஒரு புகைப் படத்தை எடுத்தனர். நான் அதை வீட்டில் வைத்திருக்கிறேன். அவளுக்கு அருகில் ஒரு கறுத்த நிழல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் மரணத்துக்கேதுவாக நிழலிடப்பட்டிருக்கிறாள். 294. அந்த சிறிய பெண்மணிக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையில் அவர்கள் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்தனர். எனவே இப்பொழுது அவள் எல்லாவித சிக்கல்களும் நிறைந்த தொல்லைகளை உடையளாயிருக்கிறாள். ஒரு காரியம் என்னவெனில், நீ எழும்பி நிற்கமுடியாத அளவிற்கு மிகவும் பலவீனமாயிருக்கிறாய். மற்றொரு காரியம் என்னவெனில் சிறுநீர்ப்பையில் இருந்து சீழ் வெளியேறுகிறது. இப்பொழுது நான் வெறுமனே ஏதோ ஒரு காரியத்தை கூறிக் கொண்டிருக்கவில்லை என்பதை நீ காண்கிறாய். புரிகின்றதா? அது உண்மையா யிருக்கிறது. ஆனாலும் பெண்மணியே மருத்துவரும் முயற்சித்தார். நான் அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் அவர் ஒரு பரிகாரமாயிருந்தார். ஆனால் தேவனோ சுகமளிப்பவராயிருக்கிறார். நீ அந்தவிதமாக மரிக்கப் போகிறாய். ஏனெனில் அவரால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் அவர் செய்து விட்டார். நீ அதை விசுவாசிக்கிறாயா? [அந்த சகோதரி, "ஆம்" என்கிறார்.] அப்படியே ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். 295. சர்வ வல்லமையுள்ள தேவனால் எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் மூலமாகவும், எனக்கு சாட்சி பகர்ந்தவரும் ஒரு அக்கினிஸ்தம்ப ரூபத்தில் இருக்கிற தூதனைக் கொண்டு இந்த ஸ்திரீயினுடைய ஜீவனை எடுத்துக் கொண்டிருக்கிற இந்த பிசாசை நான் கடிந்து கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். இப்பொழுது விசுவாசமாய் செல்லுங்கள். உங்களுக்குள்ள எல்லாவற்றோடும் விசுவாசியுங்கள். 296. மற்ற எல்லா காரியங்களைக் காட்டிலும் ஜனங்களை அதிகமாகக் கொல்லுகிற இருதயக்கோளாறு என்ற ஒரு கோளாறு உனக்கு உண்டு. அதுவே முதன்மையான வியாதியாயிருக்கிறது என்று அவர்கள் உரிமை கோருகின்றனர். ஆனாலும் ஐயா அது அல்ல. பாவமே முதன்மையான அவிசுவாச வியாதியாயிருக்கிறது. அந்த இருதயக்கோளாறை சுகப்படுத்த, உங்களை அவரால் சுகப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், "அவரால் சுகப்படுத்த முடியும் என்பதை நான் அறிவேன்" என்கிறார்.] அப்படியானால் போய் அதை விசுவாசியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக். 297. தேவனால் உங்களுடைய முதுகை சுகப்படுத்த முடியும் என்றும், உங்களை சுகப்படுத்த முடியும் என்றும் நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சகோதரியே போய் அதை விசுவாசியுங்கள். உங்களுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை கவனியுங்கள். நீங்கள் சுகத்திற்கான முன்னேற்றமடைவீர்கள். 298. மூட்டுவலி மற்றும் இருதயக்கோளாறு. ஆனால் தேவனால் உங்களை குணப்படுத்தமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, "நான் விசுவாசிக் கிறேன்" என்கிறாள்] உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? ["ஆம் ஐயா."] நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? ["ஆம் ஐயா."] நீங்கள் விசுவாசித் திருக் கிறபடியே, அந்த விதமாகவே அது உங்களுக்கு சம்பவிக்கும். இப்பொழுது போய் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். தேவன் உங்களை சுகமாக்குவார். 299. உங்களுக்கும்கூட ஒரு முதுகுக்கோளாறு உண்டு. இயேசு கிறிஸ்துவினால் உங்களை குணப்படுத்தமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, "ஆம் ஐயா" என்கிறார். ஆம்] இப்பொழுது போய் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். பாருங்கள், நான் உங்களை சுகப்படுத்த முடியாது. 300. சரீர சோர்வோடு கூடிய பெரும் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி மற்றும் மூட்டு வலியும்கூட உனக்கு உண்டு, தேவனால் உங்களை சுகப்படுத்தி குணமாக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் போய் அதை விசுவாசியுங்கள். 301. உங்களை அநேக முறை தொடர்ந்து எழுப்புகிறது இருமலே. ஆனாலும் தேவன் மூச்சுத்தடையுடன் கூடிய இருமல் நோயை குணப்படுத்துகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், "ஆம், ஐயா" என்கிறார்] அவர் இப்பொழுது உங்களை சுகமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? ["ஆம் ஐயா."] தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய விசுவாசத்திற்காக உங்களுக்கு நன்றி. 302. உங்களிடத்தில் நான் ஒரு வார்த்தைகூட கூறாமல், வெறுமனே என்னுடைய கரங்களை உங்கள் மீது வைத்தால் என்னவாயிருக்கும்? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? [அந்த சகோதரன், "விசுவாசிப்பேன்" என்கிறார்.] இங்கே வாருங்கள். அந்த மூட்டுவலி உங்களை விட்டு போகும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என்னுடைய கரங்களை நான் உங்கள்மீது வைக்கிறேன். அது உங்களை விட்டு நீங்கிப்போகிறது. 303. வாருங்கள் சகோதரியே, வாருங்கள், நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? [அந்த சகோதரி, "ஆம் ஐயா. இதற்கு முன்பே நான் கர்த்தரால் சுகமடைந்திருக்கிறேன்" என்கிறாள்.] நல்லது, அது அற்புதமாயுள்ளது. ["அல்லேலூயா!"] ஆகையால் உங்களுடைய இரவு ஆகாரத்தைப் போய் புசியுங்கள். உங்களுடைய வயிறு சரியாயிருக்கும். ["அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!"] 304. அதிகமான முதுகுத்தொல்லை, அது நீண்டகாலமாகவே உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டு வருகிறது. போய் விசுவாசியுங்கள். நீங்கள்...போய், நீங்கள் சுகமடையப் போகின்றீர்கள் என்று விசுவாசியுங்கள். தேவன் உங்களுக்காக அதைச் செய்வார். [அந்த சகோதரன், "தேவன் சுகமாக்கியிருக்கிறார் ஆமென்" என்கிறான்.] ஆமென். அதுதான் இது. ["கர்த்தருக்கு ஸ்தோத்திரம்."] சகோதரனே கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென். 305. தேவன் சுகப்படுத்துகிறபடியால் சர்க்கரை நோய் அவருக்கு ஒரு பொருட்டல்ல. அவரால் அவைகளை சுகப்படுத்த முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, "நான் விசுவாசிக்கிறேன்" என்கிறாள்.] சரி. அதை ஏற்றுக்கொண்டு, இப்பொழுது போய் அவரை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 306. உங்களுக்கும்கூட அது உங்களுடைய இரத்தத்தில் உள்ளது. தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? போய் உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசித்து சுகமாயிருங்கள். 307. அது உங்கள்மேல்பட்டவுடனே, அப்பொழுதே அவர் உங்களை சுகமாக்கிவிட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் சுகமாக்கிவிட்டார். 308. ஸ்திரீகளுடைய கோளாறு. இருதயக்கோளாறு. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, "நான் விசுவாசிக்கிறேன்" என்கிறாள்.] போய், இயேசுவின் நாமத்தில் சுகமடையுங்கள். 309. உங்களுடைய முதுகுத் தொல்லையையும், உங்களுடைய சிறுநீரகங்களையும்...தேவன் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! அப்படியே செல்லுங்கள். நான் சுகமாக்குகிறதில்லை. என்னால் சுகப்படுத்த முடியாது. நான் ஒரு சுகமளிப்பவர் அல்ல. 310. அவருடைய முதுகு தொல்லையைக் குறித்து அவர் கூறினபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள்? உங்களுடைய தொல்லையும்கூட சுகமாகிவிட்டது என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? சரி, அப்படியே போய் அதை விசுவாசியுங்கள், ஆகையால்...அப்படியே போய் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 311. உங்களுடைய தொல்லையையும்கூட, தேவன் உங்களை சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? போய் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசித்தால் தேவன் அதை உங்களுக்கு அருளுவார்...அது எவ்வாறாயினும் நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். 312. தேவன் உங்களையும்கூட சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன்" என்கிறாள்.] சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படியே தொடர்ந்து சென்று உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 313. ஐயா, வாருங்கள், ஒரு வெண்மை நிறமான துளி கீழே விழுகிறது. அதைக் குறித்த நிர்ணயமானது சர்க்கரை நோய் என்பதை காண்பிக்கும். [அந்த சகோதரன், "சர்க்கரை நோய்" என்கிறார்.] அவர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் இரத்தம் செலுத்தப்படுவதற்காக கல்வாரியண்டை செல்வோமாக. விசுவாசத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர் சுகமடைவாராக. ஆமென். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ["முற்றிலும் உண்மை."] 314. இப்பொழுது கூட்டத்தில் உள்ள உங்களில் சிலரைக் குறித்து என்ன? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், "ஆமென்" என்கின்றனர்.] 315. இந்த மாவட்டத்தில் உள்ளவர்களைக் குறித்து என்ன? அந்த சிறு பெண்மணி அங்கே உட்கார்ந்து கொண்டு என்னையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஸ்திரீகளுக்கான தொல்லையினால் அவதியுற்றுக் கொண்டி ருக்கிறாள். தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு சிறு நீலநிற கோட் அணிந் திருக்கிறாள். சரி, இப்பொழுது விசுவாசியுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். அது அப்படியே எளிமையானதாயிருக்கிறது. 316. அந்த பெண்மணி உங்களுக்குப் பின்னாக கருத்த முடியுடன் உட்கார்ந்திருக்கிறாள். அவள், "கர்த்தாவே உமக்கு நன்றி" என்றாள். ஏதோ ஒன்று அவளைத் தொட்டது. அது என்னவென்பதை அவள் அறியவில்லை. சரியாக அந்த பெண்மணிக்கு பின்னாக அமர்ந்துள்ள உங்களை விட்டு அந்த சிறுநீர்ப்பைக் கோளாறானது சென்றுவிட்டது, அப்பொழுதே நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள். அங்குள்ள பெண்மணியே, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிப் பீர்களேயானால் நலமாயிருக்கும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் உங்களுடைய கரத்தை மேலே உயர்த்துங்கள். தேவன் உங்களை சுகப்படுத்துகிறார். இங்கே கீழே உள்ள யாரோ ஒருவரைக் குறித்து என்ன? 317. அங்கே கூட்டத்தில் பின்னால் உள்ளவர்களே, இப்பொழுது உண்மையான பயபக்தியோடிருங்கள். அசையாதீர்கள் பாருங்கள், இந்த வியாதிகள் ஒருவரிடத்திலிருந்து ஒருவரிடத்திற்குச் செல்லும். 318. ஐயா, உங்களைக் குறித்து என்ன? இங்கே இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் இந்த வயோதிக மனிதரைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனால் உங்களை சுகப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு மூட்டுவலி மற்றும் மூச்சுக்குழாய் வீக்கம் உள்ளது. தேவன் அதை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? சரி, உங்களால் விசுவாசிக்கக்கூடுமானால், நீங்கள் கேட்டுக்கொண்டதை பெற்றுக் கொள்ளமுடியும். 319. அவருக்கு அடுத்தபடியாக அமர்ந்துள்ள பெண்மணியே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களும்கூட விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவனால் என்னிடம் கூறமுடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் என்னிடத்திலிருந்து மிகவும் தூரமாய் இருக்கிறீர்கள். இப்பொழுது அப்படியே அவரை விசுவாசியுங்கள். நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறியிருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய உயர் இரத்த அழுத்தம் இறங்கிவிடும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 320. நீங்களும்கூட உங்களுடைய கரத்தை உயர்த்தினீர்கள். நீர் அவளை உற்சாகப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தீர். அது என்னவென்பதை...தேவனால் என்னிடத்தில் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவளுக்கு உதவி செய்ய மிகவும் அருமையானவராக இருந்து வருகின்றீர்கள். இப்பொழுது தேவன் உங்களுக்கு உதவ அருமையான வராயிருப்பார். உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டு வருகிற ஒரு ஆவிக்குரிய பிரச்சனை உங்களுக்கு உண்டு. அது உண்மையென்றால், இந்த விதமாக உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள். இப்பொழுதே அது தீர்ந்துவிடப் போவதாயுள்ளது. அவர் அதை சரிப்படுத்துகிறார். 321. எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களில் எத்தனை பேர் கிறிஸ்தவராயில்லாதிருந்து, இயேசு கிறிஸ்து இங்கே பிரசன்னமாகியிருக்கிறார் என்ற உணர்வுடையவர்களாய் இப்பொழுதே எழும்பி நின்று, "இயேசுவே, நான் என்னை ஒரு பாவியாக அடையாளங்காட்ட விரும்புகிறேன். நீர் என் பாவங்களை எனக்கு மன்னிப்பீரா?" என்று கூற விரும்புகிறீர்கள். உங்களுடைய காலூன்றி எழும்பி நில்லுங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்ப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது...தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. இதை, அவர் உங்களைக் காண்கிறார். நீங்கள் அதைச் செய்யும்போது அவர் உங்களுடைய பெயரை நினைவுகூருகிறார். 322. இங்கே மாடியின் உப்பரிகையில் உள்ளவர்கள் எழும்பி நின்று, "கர்த்தராகிய இயேசுவே நான் அடையாளங் கண்டு கொள்ளப்பட விரும்புகிறேன், நான் அதை விரும்புகிறேன். என்னுடைய ஆத்துமாவிற்கான இரக்கம் எனக்கு வேண்டும்" என்று கூருங்கள். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. "கர்த்தராகிய இயேசுவே எனக்கு இரக்கம் தேவை" என்று கூறுங்கள். 323. நண்பனே, அவர் இங்கிருப்பதை உன்னால் காண முடியவில்லையா? வாலிபனே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வாலிப ஸ்திரீயே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நீ எப்போதும் செய்திருக்கிறதிலேயே மிகவும் மகத்தான காரியமா யிருக்கிறது. இப்பொழுது யாரோ ஒருவர் அதை செய்யாதி ருக்கின்றார். ஆகையால் எழும்பி நின்று, "கர்த்தராகிய இயேசுவே நான் அடையாளங் கண்டு கொள்ளப்பட விரும்புகிறேன், நான் இன்றிரவே என்னை அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று கூறுங்கள். 324. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். 325. நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் இருப்பீர்களா? பெண்மணியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் விரும்புவது...தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, பெண்மணியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 326. நீங்களோ, "அது எந்த காரியத்தையாவது பொருள்படுத்துகிறதா?" என்று கேட்கிறீர்கள். அதுதான் மரணத்திற்கும் ஜீவனுக்குமிடையேயுள்ள வித்தியாச மாயிருக்கிறது. 327. நீங்கள் இங்கு அவருடைய பிரசன்னத்தை அடையாளங் கண்டு கொள்கின்றீர்களா? நீங்கள் அதை கண்டு கொள்கின்றீர்களா? நீங்கள் அதை உணருகின்றீர்களா? பாருங்கள். நீங்கள் அதை காண்கிறீர்கள். அது கிரியை செய்கிறதை நீங்கள் காண்கிறீர்கள். அது அவரேயாகும். அதைத்தான் சரியாக அவர் செய்ததாக கூறினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், "ஆமென்" என்கிறார்கள்.] 328. வேறு யாரோ ஒருவர், "கர்த்தாவே, நான் என்னை ஒரு பாவியாக அடையாளங்காட்ட விரும்புகிறேன். நீர் இப்பொழுது என்னுடைய பாவங்களை எனக்கு மன்னியும்" என்று கூறுகிறார். நீங்கள் ஏற்கனவே நின்று கொண்டிருந்ததால், அப்படியே உங்கள் கரத்தை உயர்த்துங்கள். உங்களில் சிலர் சுவரைச் சுற்றி நின்று கையை உயர்த்துகிறீர்கள்...தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. யாரோ ஒருவர் மேலே மாடியின் உப்பரிகையில் பின்பக்கம் உள்ளவர், "கர்த்தராகிய இயேசுவே, நான் என்னை அடையாளங் காட்ட விரும்புகிறேன். இன்றிரவு உம்முடைய தெய்வீக பிரசன்னத்தில் இரக்கத்திற்காக நான் மன்றாடுகிறேன். இதே தேவன் என்னை நியாயந்தீர்ப்பார் என்று விசுவாசிக்கிறேன். அவருடைய பிரசன்னம் இப்பொழுது இங்கு உள்ளது. அவர் என்னிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும், நான் தவறாயிருக்கிறேன் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறதையும் அவர் அறிந்திருக்கிறார். எனவே நான் எழும்பி நின்று, நான் தவறாயிருக்கிறேன் என்று கூற விரும்புகிறேன். நான் என்னுடைய தவறை அறிக்கை செய்கிறேன். நீர் என்னுடைய இருதயத்தில் என்னை கடிந்து கொண்டிருக்கிறீர்" என்று கூறுகிறார். அந்த காரணத்தினால்தான் நான் என்னுடைய ஜெபவரிசையை நிறுத்தி விட்டேன். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 329. நான் அதை நிறுத்தினதற்காக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது சம்பவிக்க வேண்டியதாயிருந்தது என்பதை நான் அறிந்திருந்த காரணத்தால் நான் அதை நிறுத்தினேன். 330. இப்பொழுது இங்கே மற்றவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் எழும்பி நிற்கமாட்டீர்களா? எழும்பி நின்று, "நீங்கள் தவறாயிருக்கின்றீர்கள்" என்று ஏதோ ஒன்று உங்களுடைய இருதயத்தில் கூறிக்கொண்டிருக்கிறதைக் கூறுங்கள். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. "நான் தவறாயிருக்கிறேன். கர்த்தாவே என்னை மன்னியும். நான் என்னை அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே நான் உம்முடைய பிரசன்னத்தில் எழும்பி நிற்கிறேன். நீர் இங்கு இருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நான்...நீர் இங்கு இருக்க வேண்டியவராயிருக்கிறீர். இது நீர் செய்யும் காரியமாயிருக்கும் என்று நீர் கூறினீர். இப்பொழுது நான்...நான் அந்த அடையாளத்தைக் காண்கிறேன். அது இந்நாளின் அடையாளமாயிருக்க வேண்டியதாயிருக்கிறது என்று எனக்கு விளக்கிக் கூறப்பட்டிருக்கிறதை நான் அறிவேன். மனந்திரும் புவதற்கு திரும்ப அழைக்கின்ற சத்தத்தை நான் கேட்கிறேன். கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன். நான் அந்த அடையாளத்தை விசுவாசிக்கிறேன். நான் அந்த சத்தத்தைக் கேட்கிறேன். 331. இப்பொழுது அந்த சத்தம் உங்களிடத்தில் பேசுகிறதே! ஓ, சிதறடிக்கப்பட்டோரே! ஓ, மார்க்கங் தப்பி அலையும் நட்சத்திரமே, திரும்பு! ஓ, வெளியேற்றப்பட்டிருக்கிற உங்களைத் தான் திரும்புங்கள். இன்றிரவே திரும்புங்கள். 332. நீங்கள் திரும்பமாட்டீர்களா? அப்படியே எழும்பி நின்று, "நான் என்னை ஒரு பாவியாக அடையாளங்காட்டி, இரக்கத்திற்காக மன்றாடுகிறேன்" என்று கூறுங்கள். நீங்கள் யாராவது அதைச் செய்வீர்களா? பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கு மேலே உள்ள மகனே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களைக் காணத் தவறிவிட்டாலும் அவர் தவறமாட்டார். பெண்மணியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் அருமையாக உள்ளது. அது மிகவும் அருமையாக உள்ளது. வேறு யாராவது இருக்கின்றார்களா? அப்படியே தொடர்ந்து...நான் அப்படியே ஒரு நிமிடம் தாமதப்படுத்த விரும்புகிறேன், ஏனென்றால் நான் இன்னமும் இங்கே ஒரு சிறு பாரத்தை உணருகிறேன். பாருங்கள். வேறு யாராவது இருக்கிறார்களா? பெண்மணியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை செய்வதற்கான வழி இதுவேயாகும். அதுதான் இது. வேறு யாராவது, "நான் என்னை அடையாளங்காட்ட விரும்புகிறேன், எனவே நான் அப்படியே எழும்பி நின்று, நான் தவறாயிருக்கிறேன் என்று கூற விரும்புகிறேன். நான் இரக்கத்திற்காக மன்றாடிக் கொண்டிருக்கிறேன்" என்று கூறவுள்ளீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்களா? எனவே நான் மேலும் தொடர்ந்து செல்வதற்கு முன்னர் துரிதமாக எழும்பி, "கர்த்தராகிய இயேசுவே நான் என்னை அடையாளங்காட்ட விரும்புகிறேன்" என்று கூறுங்கள். வாலிப ஸ்திரீயே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 333. உங்களுக்குத் தெரியும், ஒருக்கால் நீங்கள் போய் சேருவதற்கு முன்பு, ஏதோ ஒரு நேரத்தில் அல்லது மற்றெந்த நேரத்திலாவது உங்களுடைய முகத்தில் ஒரு குளிர்ந்த மூடுபனிவரலாம். அப்பொழுது ஏதோ ஒரு காலையில் மருத்துவர் வந்து, உங்களுடைய நாடித்துடிப்பானது குறைந்து கொண்டே வருவதை உணர்ந்து ஒன்றுமே செய்ய முடியாமல் விடப்படலாம். அப்பொழுது குளிர்ந்த மரண அலைகள் உங்களுடைய முகத்தில் மிதப்பதை நீங்கள் உணருவீர்கள். அப்பொழுதே நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை உணருவீர்கள். 334. நினைவிருக்கட்டும். அவர்களால் உங்களை மிகவும் ஆழத்தில் புதைக்க முடியாது. அவர்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால் தேவன், "நான் கடைசி நாளில் மீண்டும் உன்னை எழுப்புவேன்" என்று வாக்குரைத்துள்ளார். பாருங்கள். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." உங்களால் முடிந்தால் யாராவது அந்த வாக்குத்தத்தத்தை அழித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து அதைக் கூறினார். "என் வசனத்தை ('புரிந்து கொண்டு') அதை விசுவாசிக்கிறவனுக்கு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட் பட்டிருக்கிறான்." ஏனென்றால் அவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தேவன் எழுப்பி யிருக்கிற ஒரே பேறான தேவகுமாரன் மேல் விசுவாசம் வைத்திருக்கிறான். அவர் இன்றிரவு இங்கே உயிரோடிருந்து, தம்முடைய உயிர்த்தெழுதலின் தம்முடைய தன்மையைக் காண்பிக்கிறார். 335. அதற்குப் பின்னர் வேறு யாராவது எழும்பி நின்று, "நான் அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறவுள்ளீர்களா? தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சிறிய பெண்மணியே அது மிகவும் அருமையாயிருக்கிறது. அது ஒரு தீரமான காரியமாயுள்ளது. நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 336. இங்கே சற்று நேரத்திற்கு முன்பு நான் பீட அழைப்பைக் கவனித்தேன். ஜனங்கள் மெல்லும் பசை மிட்டாயுடன் மேலே வந்து இந்த பக்கத்தில் ஒருவரோடொருவர் விளையாடிக் கொண்டு நிற்கின்றனர். 337. ஆனால் அந்த ஜனங்களுடைய முகத்தில் காணப்படுகின்ற உத்தமத்தை நீங்கள் கவனித்தீர்களா? அந்த வாலிப ஸ்திரீகள் தங்களுடைய வெட்டப்பட்ட குட்டையான தலைமுடியைக் குறித்தும், அவர்கள் அணிந்துள்ள முகச் சாயத்தைக் குறித்தும் கடிந்து கொள்ளப்பட்ட பிறகும் அந்த முகச் சாயத்தோடும், வெட்டப்பட்ட குட்டையான தலைமுடியோடும் அப்படியே எழும்பி நின்று, "நான் ஒரு பாவி. தேவனே என் மேல் இரக்கமாயிரும்" என்று கூறுகிறார்களே. அது அந்த வித்துக்கள் அங்கே கிடந்ததாயுள்ளன. எனவே அதன் மீது வெளிச்சம் பட்டது. அவர்கள் அதை அறிவர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. 338. இங்கே எழும்பி நின்ற அந்த நபருக்கு அருகில் நின்று கொண்டிருக்கிற ஒவ்வொரு விசுவாசியும் உங்களுடைய கரத்தை அந்த நபர் மீது வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். (நீங்கள் உங்களுடைய கரங்களை வைப்பீர்களா?) எழும்பி நின்றவர்கள் மீது வையுங்கள். அவர்கள் உங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், அந்த சகோதரியின் மீது, அந்த சகோதரன் மீது வைத்து, "நான் என்னுடைய கரத்தை இப்பொழுது உங்கள் மீது வைத்துள்ளேன். நான் ஜெபிக்கப் போகிறேன்" என்று கூறுங்கள். 339. பரலோகப் பிதாவே, இன்றிரவு இங்கே இருக்கின்றவர்கள் உம்மை விசுவாசிக்கிறார்கள். நீர், "சில விதைகள் வழியருகே விழுந்தன" என்றும், "பறவைகள் வந்து அதை பட்சித்தன, மற்றவைகள் கற்பாறையான நிலங்களிலும், முள்ளிலும், முட்செடியிலும் விழுந்தன. ஆனால் சில நல்ல செழிப்பான நிலத்தில் விழுந்தன" என்றும் கூறினீர். இன்றிரவு உம்முடைய பிரசன்னம் இங்கிருக்கிறபடியால், இன்றிரவு இங்குள்ள அநேகர் மீது நீர் தேவனுடைய குமாரன் என்றும், நீர் என்றைன் றைக்குமாய் ஜீவிக்கிறவராயிருக்கிறீர் என்றும் உறுதி கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் நீர் பிழைத்திருக்கிற படியால், நாங்களும்கூட பிழைத்திருப்போம் என்று நீர் வாக்குரைத்திருக்கிறீர். 340. கர்த்தராகிய இயேசுவே, உம்மை அவர்கள் விசுவாசித்தனர் என்பதற்கு ஒரு சாட்சியாகவே அவர்கள் எழும்பி நின்றனர். இப்பொழுதும் கர்த்தாவே, அந்நாளில் நீர் அவர்களுக்காக நிற்பீர் என்பதை நான் அறிவேன். கர்த்தாவே இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவர்களை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். அவர்கள் ஏதோ ஒரு நல்ல சபைக்கு சென்று, கிறிஸ்தவ ஞானஸ்நானம் பண்ணப்படுவார்களாக. அவர்கள் தங்களை ஒரு நல்ல கூட்ட விசுவாசிகளோடு இணைத்துக் கொள்வார்களாக. அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்களாக. அவர்கள் அந்நாளிலே சுவிசேஷத்தின் வெற்றிச் சின்னங்களாகவும், உம்முடைய கிரீடத்தில் உள்ள இரத்தினங்களாகவும் இருப்பார்களாக. அந்த மகத்தான நாளின் இப்பக்கத்திலே நான் அவர்கள் மீண்டும் காண முடியவில்லையென்றாலும், அந்நாளில் தரிசனத்தில் நான் அவர்களைக் கண்டதுபோல கண்டு, "என்னை உங்களுக்கு நினைவிருக்கவில்லையா? அன்றிரவு பாட்டன் ரோகில் நான்தான் எழும்பி நின்றேன்" என்று கூறுவதைக் கேட்பேனாக. இதை அருளும் பிதாவே, கிறிஸ்துவினுடைய நாமத்தினூடாக அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். 341. இங்கே எனக்கு முன்பாக ஒரு பெட்டி உறுமால்களும், சிறு பாதரட்சைகளும், காலுறைகளும், கைக்குட்டைகளும், துணிகளும், கச்சைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் பரிசுத்த பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் எடுத்துக் கொண்டு வந்து வியாதிக்காரர்கள் மீதுபோட, அசுத்த ஆவிகள் ஜனங்களை விட்டு புறப்பட்டுச் சென்றது என்று வேதத்தில் நாங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இப்பொழுதும் பிதாவே, நாங்கள் பரிசுத்த பவுல் அல்லவென்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நீரோ இன்னமும் மாறாத அதே தேவனாகவே இருக்கிறீர். எனவே இந்த சந்ததியினர் உத்தமமாய் விசுவாசிக்கின்ற காரணத்தால் நீர் அதே பலன்களை தந்தருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவன் பவுலாயிருந்த காரணத்தால் அவர்கள் பவுலை ஒருபோதும் விசுவாசிக்கவில்லை. ஆனால் நீர் உம்மை பவுலோடு அடையாளங்காட்டினபடியால், அவர்கள் பவுலை விசுவாசித்தனர். கர்த்தாவே, நீர் இன்றிரவு எங்கள் மத்தியில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறீர் என்ற அதே காரியத்தையே அவர்கள் இன்றிரவு விசுவாசிக்கின்றனர். ஓர் நாங்கள்...கூறுவதென்னவெனில்... 342. ஒரு எழுத்தாளன் எங்களுக்கு கூறியிருந்தான், அதாவது "இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் தங்களுடைய பாதையில் இருந்தபோது, அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்வதை தடுக்க சிவந்த சமுத்திரம் குறுக்கே வழியில் நின்றது" என்றான். மேலும் அந்த எழுத்தாளன், "அது இஸ்ரவேலர் மீது புரளவந்தபோது, தேவன் கோபக் கண்களோடு, அக்கினி ஸ்தம்பத்தினூடாக அதை நோக்கிப் பார்த்தார். அப்பொழுது அது அவிசுவாசிகளுக்கு அந்தகாரத்தையும், குருட்டுத்தனத்தையும் உண்டாக்கி, இஸ்ரவேலருக்கோ வெளிச்சத்தை ஏற்படுத்தினது. சிவந்த சமுத்திரமானது வழியில் குறுக்கே நின்றபோது, அது பயமடைந்து பின்னிட்டு விலகிச் சென்றது. அப்பொழுது இஸ்ரவேலர் உலர்ந்த தரையிலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குக் கடந்து சென்றனர்" என்று எழுதியிருந்தான். 343. தேவனாகிய கர்த்தாவே, இன்றிரவு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினூடாக நோக்கிப் பாரும். நான் என்னுடைய கரங்களை இந்த உறுமால்கள் மீது வைக்கிறேன். அவைகள் வியாதியஸ்தர் மேல் வைக்கப் படும்போது, கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் அந்த நபரை நோக்கிப் பார்க்க, அவர்களிடத்திலிருந்து அந்த வியாதி அகன்றுபோய், நல்ல ஆரோக்கியமும், பெலனுமான தேசத்திற்குள் அவர்கள் கடந்து போவார்களாக. வேதமோ, "அவர்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கட்டும்" என்று உரைத்துள்ளது. இதை அருளும் கர்த்தாவே, நான் இவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறேன். ஆமென். ...என்னை...நான் பின் செல்வேன், அவர் எங்கே நடத்துகிறாரோ...(நாம் அப்படியே பாடுவோமாக...)...பின் செல்வேன், நான் அவரோடு செல்வேன், (இப்பொழுது அவருடைய பிரசன்னம் இங்கிருக்கிறது, நாம் அவரை பாடலில் இனிமையாக அப்படியே ஆராதிப்போமாக), வழி நெடுக 344. உங்களால் உண்மையாகவே அதை இந்த விதமாகப் பாட முடியுமா? அவர் என்னை எங்கே நடத்துகிறாரோ அங்கே நான் செல்வேன், அவர் என்னை எங்கே நடத்துகிறாரோ அங்கே நான் செல்வேன், அவர் என்னை எங்கே நடத்துகிறாரோ அங்கே நான் செல்வேன், நான் அவரோடு செல்வேன் (நீங்கள் செல்ல விரும்புவீர்களானால் இப்பொழுதே உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள்), அவரோடு வழி நெடுக செல்வேன். நாம் இப்பொழுது எழும்பி நிற்போமாக, உங்களுடைய கரங்களை மீண்டும் உயர்த்துங்கள். ...அவரோடு தோட்டத்தினூடாக செல்வேன், 345. ஒவ்வொருவரும் இப்பொழுது ஆவியில் பாடுங்கள், உண்மையாகவே துண்டிக்கும் செய்தி. நாம் அவருடைய பிரசன்னத்தில் அவரை ஆராதிப்போமாக. அவர் ஆராதிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறார். ...தோட்டத்தினூடாக, நான் தோட்டத்தினூடாக அவரோடு செல்வேன், நான் அவரோடு செல்வேன், ...அவரோடு செல்வேன் 346. இப்பொழுது நாம் இதை வாய் திறவாமல் மெளனமாக பாடுவோமாக. "நான்..." இப்பொழுது நீங்கள் அதை பாடிக்கொண்டிருக்கும்போதே, நீங்கள் யாருடனாவது கரத்தைக் குலுக்கி, "யாத்திரிகனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக" என்று இந்தவிதமாக நீங்கள் கூறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியப் பட்டவர்களாய் இருக்கிறோம். மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தே கோஸ்துக்கள், யாரும் ஒருவரோடு ஒருவர் கரங்களை குலுக்குங்கள். "யாத்திரிகனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக." அந்த்விதமாகத்தான் நாம் இருக்கிறோம். யாத்திரிகர்கள். "...தோட்டத்தினூடாக." 347. யாத்திரிகனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. [சகோதரன் பிரான்ஹாமும் சபையோரும் தொடர்ந்து கரங்களை குலுக்குகின்றனர். ஒலிநாடாவில் காலி இடம்.-ஆசி] ...தோட்டம், இப்பொழுது நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. நான் அவரோடு செல்வேன், ஓ, வழிநெடுக அவரோடு செல்வேன். 348. நாம் நம்முடைய தலைகளை தாழ்மையாய் ஜெபத்திற்கு வணங்குவோமாக. காலையில் ஞாயிறு வேதபாட பள்ளி உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். 349. ஏதோ ஒரு வழியில் அல்லது மற்றொரு வழியிலோ, தேவனுடைய பிரசன்னம் என்னுடைய இருதயத்தில் அவ்வளவு தத்ரூபமாக இருப்பதை நான் அப்படியே உணருகிறேன். எவ்வாறாயினும் இன்றிரவு அதை விட்டுச் செல்வது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் பிரியங்கொண்டிருக்கிறதை நான் உணருகிறேன். நீங்கள் பாருங்கள். ஜனங்கள் கிறிஸ்துவண்டை வருவதைக் கண்டு அநேகமாக நாம் நாளை ஒரு பெரிய கூட்டத்தை வைக்கலாம். நான் ஏன் ஒருபோதும் பீட அழைப்பை உண்டுபண்ணுவதில்லை என்று சிலர் வியப்புறுகின்றனர். நானோ அதை உண்டுபண்ண வழிநடத்தப்படும்வரையில் நான் காத்திருக்கிறேன். புரிகின்றதா? 350. தங்களுடைய கர்த்தை உயர்த்தின அல்லது எழும்பி நின்ற ஒவ்வொருவரும் நாளை ஏதோ ஒரு நல்ல சபையில் இருப்பீர்கள் என்றும், விசுவாசிகளுக்கு மத்தியில் உங்களுடைய ஸ்தானத்தை தெரிந்து கொள்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன். 351. நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில் கலைந்து செல்வதை போதகர் விரும்பினால் இங்கே முன்பாக வரும்படி நான் கேட்டுக் கொள்ளப் போகிறேன். நம்முடைய தலைகளும், இருதயங்களும் தேவனுக்கு முன்பாக வணங்கியிருப்பதினால் இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 2 THE VOICE OF THE SIGN அடையாளத்தின் சத்தம் 2